போச்சு... ஹீரோவும் தனது மோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்தியது!! புதிய விலைகள் இவைதான்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் பிரபலமான இருசக்கர வாகனங்களின் விலைகளை கணிசமாக உயர்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

போச்சு... ஹீரோவும் தனது மோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்தியது!! புதிய விலைகள் இவைதான்

கடந்த ஜூலை 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்த இந்த புதிய விலை உயர்வு இந்த நிதியாண்டில் ஹீரோ நிறுவனம் கொண்டுவரும் இரண்டாவது விலை அதிகரிப்பாகும். முன்னதாக கடந்த மார்ச்சில் இதேபோன்று சில இருசக்கர வாகனங்களின் விலைகளை ஹீரோ உயர்த்தி இருந்தது.

போச்சு... ஹீரோவும் தனது மோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்தியது!! புதிய விலைகள் இவைதான்

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக இருப்பினும், தொடர்ந்து அதிகரித்துவரும் அலுமினியம், இரும்பு உள்ளிட்ட உலோகங்களின் மதிப்பினால் இத்தகைய விலை அதிகரிப்புகளை கொண்டுவர வேண்டிய கட்டாயத்திற்கு ஹீரோ மோட்டோகார்ப் தள்ளப்பட்டுள்ளது.

போச்சு... ஹீரோவும் தனது மோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்தியது!! புதிய விலைகள் இவைதான்

உலோகங்களின் மதிப்பு அதிகரித்தால் வாகன தயாரிப்பிற்கான முதலீட்டை அதிகரிக்க வேண்டும். இதனால் ஏற்படும் கூடுதல் செலவை அப்படியே வாடிக்கையாளர்களின் பக்கம் ஹீரோ திருப்பியுள்ளது. ஆனால் இம்முறை விலை அதிகரிப்புகள் அனைத்தும் சிறிய அளவிலேயே உள்ளன.

போச்சு... ஹீரோவும் தனது மோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்தியது!! புதிய விலைகள் இவைதான்

குறைந்தப்பட்சமாக எச்.எஃப் 100 கிக் ஸ்டார்ட், ட்ரம்-ப்ரேக், ஸ்போக்-சக்கர பைக் வெறும் ரூ.300-ஐ மட்டுமே விலை அதிகரிப்பாக ஏற்றுள்ளது. அதிகப்பட்சமாக எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் விலை ரூ.3,800 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

போச்சு... ஹீரோவும் தனது மோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்தியது!! புதிய விலைகள் இவைதான்

இந்த விலை உயர்வால் ஹீரோவின் மலிவான மோட்டார்சைக்கிளாக விற்பனை செய்யப்படும் எச்.எஃப்100 கிக்-ஸ்டார்ட் பைக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.50,700-இல் இருந்து ரூ.50,900 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் எச்.எஃப் டீலக்ஸின் விலைகள் ரூ.1,200 என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளன.

போச்சு... ஹீரோவும் தனது மோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்தியது!! புதிய விலைகள் இவைதான்
Motorcycles New Price Old Price Difference
Xtreme 160R Disc ₹1,09,240 ₹1,07,490 ₹1,750
Xtreme 160R Double Disc ₹1,12,290 ₹1,10,540 ₹1,750
Xtreme 160R 100M Edition ₹1,14,090 ₹1,12,340 ₹1,750
Xtreme 200S ₹1,24,014 ₹1,20,214 ₹3,800
Xpulse 200 ₹1,20,800 ₹1,18,230 ₹2,570
Xpulse 200T ₹1,18,300 ₹1,15,800 ₹2,500
Glamour Drum ₹74,900 ₹73,200 ₹1,700
Glamour Disc ₹78,700 ₹76,700 ₹2,000
Glamour Blaze Drum ₹75,900 ₹74,400 ₹1,500
Glamour Blaze Disc ₹79,700 ₹77,900 ₹1,800
Glamour 100M Edition Drum ₹76,700 ₹75,000 ₹1,700
Glamour 100M Edition Disc ₹80,500 ₹78,500 ₹2,000
Splendor iSmart Drum ₹68,650 ₹67,250 ₹1,400
Splendor iSmart Disc ₹71,350 ₹69,450 ₹1,900
Passion Pro Drum ₹69,475 ₹68,150 ₹1,325
Passion Pro Disc ₹72,175 ₹70,350 ₹1,825
Passion Pro Drum 100M Edition ₹71,275 ₹69,950 ₹1,215
Passion Pro Disc 100M Edition ₹73,975 ₹72,150 ₹1,215
Splendor Plus Kick Start ₹63,750 ₹62,535 ₹1,215
Splendor Plus Self Start ₹66,050 ₹64,835 ₹1,215
Splendor Plus i3S ₹67,210 ₹66,045 ₹1,165
Splendor Plus Black Accent ₹67,260 ₹66,045 ₹1,215
Splendor Plus 100M Edition ₹69,060 ₹67,845 ₹1,215
HF Deluxe Spoke Wheel ₹51,900 ₹50,700 ₹1,200
HF Deluxe Kick Start ₹52,900 ₹51,700 ₹1,200
HF Deluxe Self Start ₹61,900 ₹60,650 ₹1,250
HF Deluxe Self Start i3S Black ₹62,025 - -
HF Deluxe Self Start i3S ₹63,225 ₹61,975 ₹1,250
Super Splendor Drum ₹72,600 ₹71,100 ₹1,500
Super Splendor Disc ₹75,900 ₹74,600 ₹1,300

மற்ற ஹீரோ பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலைகளும் இந்த அளவிலேயே அதிகரிக்கப்பட்டுள்ளன. ரூ.3 ஆயிரத்திற்கு அதிகமான விலை உயர்வை கண்டது எக்ஸ்ட்ரீம் 200எஸ் மட்டுமே. இதன் எக்ஸ்ஷோரூம் விலை முன்பு ரூ.1,24,014 ஆக இருந்தது. அது தற்போது ரூ.1,20,214 ஆக உயர்ந்துள்ளது.

போச்சு... ஹீரோவும் தனது மோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்தியது!! புதிய விலைகள் இவைதான்

ஹீரோவின் மற்ற 200சிசி பைக்குகளான எக்ஸ்பல்ஸ்200 ரூ.3,800-ஐயும், எக்ஸ்பல்ஸ் 200டி ரூ.2,500-ஐயும் விலை அதிகரிப்பாக ஏற்றுள்ளன. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அடுத்ததாக விரைவில் புதிய கிளாமர் எக்ஸ்டெக் ப்ரீமியம் மோட்டார்சைக்கிளை சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

போச்சு... ஹீரோவும் தனது மோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்தியது!! புதிய விலைகள் இவைதான்

மோட்டார்சைக்கிள் மட்டுமின்றி இந்த ஜூலை மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ள இந்த விலை அதிகரிப்பில் ஹீரோ ஸ்கூட்டர்களும் சிக்கியுள்ளன. ஸ்கூட்டர் மாடல்களை பொறுத்தவரையில், பிளஷர்+ இசட்.எக்ஸ் பிளாட்டினம் ஸ்கூட்டரின் விலை குறைந்தப்பட்சமாக ரூ.850 உயர்த்தப்பட்டுள்ளது.

போச்சு... ஹீரோவும் தனது மோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்தியது!! புதிய விலைகள் இவைதான்
Scooters New Price Old Price Difference
Destini 125 Drum 69,500 67,990 1,510
Destini 125 Alloy 72,950 71,590 1,360
Destini 125 Platinum 74,750 73,190 1,560
Destini 125 100M Edition 74,700 73,390 1,310
Maestro 125 Drum 71,850 70,850 1,000
Maestro 125 Disc 74,050 73,050 1,000
Maestro Stealth 75,350 74,350 1,000
Maestro 110 VX 64,250 62,750 1,500
Maestro 110 ZX 65,450 63,950 1,500
Maestro 110 100M Edition 67,250 65,750 1,500
Pleasure Plus LX 60,500 58,900 1,600
Pleasure Plus VX 62,850 61,300 1,550
Pleasure Plus ZX Platinum 64,950 64,100 850

மற்றவைகளின் விலைகள் ரூ.1000இல் இருந்து ரூ.1,600 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதிகப்பட்சமாக பிளஷர்+ எல்.எக்ஸ் ஸ்கூட்டரின் விலை ரூ.1,600 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.58,900-இல் இருந்து ரூ.60,500ஆக உயர்ந்துள்ளது.

Most Read Articles

English summary
Hero Motocorp Price Increase July 2021. Splendor, Passion, Deluxe, Xpulse, Maestro Get Price Hike.
Story first published: Wednesday, July 7, 2021, 22:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X