ரியல் ஹீரோ... சுகாதார பணியாளர்களுக்கு உதவிகளை வாரி வாரி வழங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்...

கொரோனா இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து வரும் நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

ரியல் ஹீரோ... சுகாதார பணியாளர்களுக்கு உதவிகளை வாரி வாரி வழங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்...

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனை சமாளிக்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வரும் நிலையில், வாகன உற்பத்தி நிறுவனங்கள் பலவும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. இதில், உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் ஒன்று.

ரியல் ஹீரோ... சுகாதார பணியாளர்களுக்கு உதவிகளை வாரி வாரி வழங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்...

ஹீரோ மோட்டோகார்ப் கொரோனா நிவாரண பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராமகிருஷ்ணா மிஷன் சேவாசர்மா மற்றும் ஹரித்வார் மாவட்ட நிர்வாகத்துடன் கூட்டணி அமைத்துள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. ராமகிருஷ்ணா மிஷன் சேவாசர்மா என்பது உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள மருத்துவமனை ஆகும்.

ரியல் ஹீரோ... சுகாதார பணியாளர்களுக்கு உதவிகளை வாரி வாரி வழங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்...

122 படுக்கைகளை கொண்ட இந்த கொரோனா மருத்துவமனைக்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பல்வேறு உதவிகளை செய்யவுள்ளது. இந்த கூட்டணியின் மூலம், ராமகிருஷ்ணா மிஷன் சேவாசர்மா மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பிற்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் உதவி கிடைக்கவுள்ளது.

ரியல் ஹீரோ... சுகாதார பணியாளர்களுக்கு உதவிகளை வாரி வாரி வழங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்...

இதுதவிர டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியம், ஹரியானா, உத்தரகாண்ட், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில், சுகாதார பணியாளர்களுக்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களையும் வழங்குகிறது. சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு அவை பயன்படும்.

ரியல் ஹீரோ... சுகாதார பணியாளர்களுக்கு உதவிகளை வாரி வாரி வழங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்...

இதன்படி ஹரியானா மாநிலம் டாருஹெரா மற்றும் அதனை சுற்றியுள்ள 7 மருத்துவமனைகளுக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 4 மருத்துவமனைகளுக்கும், குர்கானில் உள்ள 4 மருத்துவமனைகளுக்கும், ஜெய்ப்பூரில் உள்ள 3 மருத்துவமனைகளுக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது டூவீலர்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

ரியல் ஹீரோ... சுகாதார பணியாளர்களுக்கு உதவிகளை வாரி வாரி வழங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்...

இதுதவிர ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும், குஜராத் மாநிலம் ஹலோல் பகுதிக்கு அருகே உள்ள ஒரு மருத்துவமனைக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டூவீலர்கள் வழங்கப்படவுள்ளன. அந்த மருத்துவமனைகளின் சுகாதார பணியாளர்களுக்கு இந்த இரு சக்கர வாகனங்கள் பயன்படும்.

ரியல் ஹீரோ... சுகாதார பணியாளர்களுக்கு உதவிகளை வாரி வாரி வழங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்...

இதுதவிர டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள சில மருத்துவமனைகளுக்கு அவசர தேவைக்காக ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பிபிஇ கிட்களை கொடுத்திருப்பதாகவும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரியல் ஹீரோ... சுகாதார பணியாளர்களுக்கு உதவிகளை வாரி வாரி வழங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்...

இந்த உதவிகளுக்காக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் முதல் அலை வீசியபோதும், வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை செய்தன. இரண்டாவது அலை வீசும் தற்போதைய இக்கட்டான நேரத்திலும் வாகன உற்பத்தி நிறுவனங்களின் உதவி தொடர்கிறது.

Most Read Articles

English summary
Hero MotoCorp Provides Its Motorcycles And Scooters For COVID-19 Related Efforts - Details. Read in Tamil
Story first published: Thursday, April 29, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X