பண்டிகை காலத்திலும் பெரிதாக பிக்அப் ஆகாத ஹீரோ 2-வீலர்ஸின் விற்பனை!! 2021 அக்டோபர் மாத விற்பனை நிலவரம்

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்த 2-வீலர்ஸ் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பண்டிகை காலத்திலும் பெரிதாக பிக்அப் ஆகாத ஹீரோ 2-வீலர்ஸின் விற்பனை!! 2021 அக்டோபர் மாத விற்பனை நிலவரம்

கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 5,27,779 இருசக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. அதுவே 2020 செப்டம்பரில் 7,91,137 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 33% சரிவை கண்டுள்ளது.

பண்டிகை காலத்திலும் பெரிதாக பிக்அப் ஆகாத ஹீரோ 2-வீலர்ஸின் விற்பனை!! 2021 அக்டோபர் மாத விற்பனை நிலவரம்

ஆனால் இதற்கு முந்தைய 2021 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.42% அதிக ஹீரோ 2-வீலர்ஸ் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதில் இருந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை ஊரடங்கு உத்தரவுகளுக்கு பிறகு மெல்ல மெல்ல அதிகரித்து வருவதை அறியலாம். அதேபோல் வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதியும் கணிசமாக அதிகரித்துள்ளது.

பண்டிகை காலத்திலும் பெரிதாக பிக்அப் ஆகாத ஹீரோ 2-வீலர்ஸின் விற்பனை!! 2021 அக்டோபர் மாத விற்பனை நிலவரம்

2020 அக்டோபரில் 15,711 யூனிட் ஹீரோ இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில் கடந்த மாதத்தில் 20,191 யூனிட் வாகனங்களை ஹீரோ வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 5,05,957 யூனிட் மோட்டார்சைக்கிள்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

பண்டிகை காலத்திலும் பெரிதாக பிக்அப் ஆகாத ஹீரோ 2-வீலர்ஸின் விற்பனை!! 2021 அக்டோபர் மாத விற்பனை நிலவரம்

ஆனால் 2020 அக்டோபரில் சுமார் 7,32,498 மோட்டார்சைக்கிள்களை இந்த நிறுவனம் விற்று இருந்தது. இவை உலகளவில் ஹீரோ மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கைகளாகும். உள்நாட்டு சந்தையில் கடந்த மாதத்தில் மொத்தம் 5,05,957 மோட்டார்சைக்கிள்களை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்துள்ளது.

பண்டிகை காலத்திலும் பெரிதாக பிக்அப் ஆகாத ஹீரோ 2-வீலர்ஸின் விற்பனை!! 2021 அக்டோபர் மாத விற்பனை நிலவரம்

நடப்பு 2021-22 நிதியாண்டு துவங்கியதில் இருந்து, கடந்த ஏழு மாதங்களில் (2021 ஏப்ரல் - அக்டோபர்) 27,99,698 யூனிட் ஹீரோ மோட்டார்சைக்கிள்கள் விற்கப்பட்டுள்ளன. அதேநேரம், கடந்த 2020ஆம் ஆண்டில் இதே 7 மாதங்களில் 29,39,553 மோட்டார்சைக்கிள்களை ஹீரோ மோட்டோகார்ப் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்து இருந்தது.

பண்டிகை காலத்திலும் பெரிதாக பிக்அப் ஆகாத ஹீரோ 2-வீலர்ஸின் விற்பனை!! 2021 அக்டோபர் மாத விற்பனை நிலவரம்

இவ்வாறு உள்நாட்டு விற்பனை 4.76 சதவீதம் குறைந்திருந்தாலும், கடந்த ஏழு மாதங்களில் மோட்டார்சைக்கிள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் ஹீரோ சுமார் 114.55% வளர்ச்சியை கண்டுள்ளது. ஸ்கூட்டர்களை பொறுத்தவரையில், கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 42,013 யூனிட் ஸ்கூட்டர்களை ஹீரோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

பண்டிகை காலத்திலும் பெரிதாக பிக்அப் ஆகாத ஹீரோ 2-வீலர்ஸின் விற்பனை!! 2021 அக்டோபர் மாத விற்பனை நிலவரம்

ஆனால் கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் 74,350 ஹீரோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தோமேனாயால், ஹீரோ ஸ்கூட்டர்களின் விற்பனை கிட்டத்தட்ட 43.49% குறைந்துள்ளது. அதுவே 2021 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.65% அதிகமான எண்ணிக்கையில் ஸ்கூட்டர்களை ஹீரோ விற்பனை செய்திருந்தது.

பண்டிகை காலத்திலும் பெரிதாக பிக்அப் ஆகாத ஹீரோ 2-வீலர்ஸின் விற்பனை!! 2021 அக்டோபர் மாத விற்பனை நிலவரம்

ஏனெனில் அந்த மாதத்தில் ஏறக்குறைய ஆயிரம் ஹீரோ ஸ்கூட்டர்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஒட்டு மொத்தமாக கடந்த 7 மாதங்களில் 2,11,402 யூனிட்களில் ஸ்கூட்டர்களை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்துள்ளது. அதேநேரம் கடந்த ஆண்டில் இதே 7 மாதங்களில் 33,844 யூனிட்கள் அதிகமாக 2,45,246 ஸ்கூட்டர்களை ஹீரோ நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

பண்டிகை காலத்திலும் பெரிதாக பிக்அப் ஆகாத ஹீரோ 2-வீலர்ஸின் விற்பனை!! 2021 அக்டோபர் மாத விற்பனை நிலவரம்

மோட்டார்சைக்கிள்கள் & ஸ்கூட்டர்கள் என இரண்டையும் சேர்த்து, நடப்பு நிதியாண்டின் துவக்கத்தில் இருந்து 28,34,293 இருசக்கர வாகனங்களை இந்திய சந்தையில் ஹீரோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த 7 மாதங்களில் ஏற்றுமதி செய்யப்பட்ட 1,76,807 ஹீரோ வாகனங்களையும் கணக்கில் எடுத்து கொண்டால், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரையில் 3 மில்லியனுக்கும் அதிகமாக 2-வீலர்ஸை உலகம் முழுவதிலும் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்துள்ளது.

பண்டிகை காலத்திலும் பெரிதாக பிக்அப் ஆகாத ஹீரோ 2-வீலர்ஸின் விற்பனை!! 2021 அக்டோபர் மாத விற்பனை நிலவரம்

கடந்த ஆண்டு ஏப்ரல்- அக்டோபர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் 1,73,699 யூனிட் இருசக்கர வாகனங்கள் குறைவாக ஹீரோ பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. இத்தனைக்கும் 2020 ஏப்ரல் மாத துவக்கத்தில் இருந்து மே மாத பாதி வரையில் ஊரடங்கு உத்தரவுகளினால் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பண்டிகை காலத்திலும் பெரிதாக பிக்அப் ஆகாத ஹீரோ 2-வீலர்ஸின் விற்பனை!! 2021 அக்டோபர் மாத விற்பனை நிலவரம்

இருப்பினும் 1.74 லட்ச ஹீரோ 2-வீலர்ஸ் கடந்த ஆண்டில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த 2021ஆம் வருட மத்தியிலும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக சில மாநிலங்களில் தீவிரமான ஊரடங்குகள் கடைப்பிடிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, தற்போது வரையில் குறைக்கடத்திகளுக்கு உலகளவில் ஏற்பட்டுள்ள தேவைகளினால் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் போராடி வருகின்றன.

பண்டிகை காலத்திலும் பெரிதாக பிக்அப் ஆகாத ஹீரோ 2-வீலர்ஸின் விற்பனை!! 2021 அக்டோபர் மாத விற்பனை நிலவரம்

இதுவும் ஹீரோ மோட்டோகார்பின் விற்பனை குறைந்துள்ளதற்கு காரணங்களுள் ஒன்றாகும். இவ்வாறு வாகன தயாரிப்பிற்கு பல வழிகளில் தடைகள் உருவாகினாலும், உலகளவில் சந்தையை விரிவுப்படுத்துவதில் ஹீரோ மோட்டோகார்ப் தீவிரமாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் துபாயில் புதிய டீலர்ஷிப் மையத்தினை இந்த நிறுவனம் திறந்திருந்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.

Most Read Articles
English summary
Hero Motocorp Sales 2021 Oct, 33% Decline in domestic Sales.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X