5 மாதங்களில் ஏறக்குறைய 20 லட்ச வாகனங்களை விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! ஏற்றுமதி அதிகரிப்பு!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்துள்ள இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

5 மாதங்களில் ஏறக்குறைய 20 லட்ச வாகனங்களை விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! ஏற்றுமதி அதிகரிப்பு!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 4,53,879 இருசக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் 4,31,137 ஹீரோ இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மீதி 22,742 யூனிட்கள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும்.

5 மாதங்களில் ஏறக்குறைய 20 லட்ச வாகனங்களை விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! ஏற்றுமதி அதிகரிப்பு!

அதேபோல் இந்த மொத்த விற்பனை எண்ணிக்கையில் (4,53,879) 4,20,609 மோட்டார்சைக்கிள்களும், 33,270 ஸ்கூட்டர்களும் அடங்குகின்றன. ஆனால் உண்மையில், கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஹீரோ இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையை, 2020 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 22 சதவீதம் குறைவாகும்.

5 மாதங்களில் ஏறக்குறைய 20 லட்ச வாகனங்களை விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! ஏற்றுமதி அதிகரிப்பு!

ஏனெனில் அந்த மாதத்தில் தற்போதைய விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் சுமார் 1.3 லட்ச யூனிட்கள் அதிகமாக 5,84,456 யூனிட் ஹீரோ 2 வீலர்ஸ் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால் வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தை பொறுத்தவரையில், கணிசமாக உயர்ந்துள்ளது.

5 மாதங்களில் ஏறக்குறைய 20 லட்ச வாகனங்களை விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! ஏற்றுமதி அதிகரிப்பு!

ஒட்டுமொத்தமாக நடப்பு 2021-22 நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஏப்ரல்- ஆகஸ்ட்) ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சுமார் 19,32,784 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தது 4 லட்ச இருசக்கர வாகனங்களையாவது இந்த நிறுவனம் விற்பனை செய்துவிடக்கூடியது.

Aug'21 Aug'20 YTD FY'22 YTD FY'21
Motorcycle 4,20,609 5,44,658 18,04,324 15,46,107
Scooters 33,270 39,798 1,28,460 1,16,126
Total 4,53,879 5,84,456 19,32,784 16,62,233
Domestic 4,31,137 5,68,674 18,01,052 16,13,961
Exports 22,742 15,782 1,31,732 48,272
5 மாதங்களில் ஏறக்குறைய 20 லட்ச வாகனங்களை விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! ஏற்றுமதி அதிகரிப்பு!

இந்த வகையில் பார்த்தால், 5 மாதங்களில் விற்பனை எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்திருக்க வேண்டும். ஆனால் இடையில் வந்த கொரோனா இரண்டாவது அலையின் காரணமாகவே ஹீரோ மோட்டோகார்பின் விற்பனை எண்ணிக்கை 20 லட்சத்தை தொடவில்லை. மேலும் இதே கொரோனா பரவலின் காரணமாகவே கடந்த நிதியாண்டிலும் இதே துவக்க மாதங்களில் ஹீரோவின் விற்பனை கணிசமாக குறைந்திருந்தது.

5 மாதங்களில் ஏறக்குறைய 20 லட்ச வாகனங்களை விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! ஏற்றுமதி அதிகரிப்பு!

ஆனால் அப்போது கொரோனா முதல் அலையால் ஏப்ரல் முழுவதுமே பூஜ்ஜிய விற்பனையையே ஒட்டுமொத்த இந்திய ஆட்டோமொபைல் துறையும் பதிவு செய்ததால், 2020 ஏப்ரல் -ஆகஸ்ட் மாதங்களில் இதனை காட்டிலும் குறைவாக 16,62,233 ஹீரோ இருசக்கர வாகனங்களே உலகளவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

5 மாதங்களில் ஏறக்குறைய 20 லட்ச வாகனங்களை விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! ஏற்றுமதி அதிகரிப்பு!

குறிப்பாக வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி கடந்த வருடத்தில், கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பெரிய அளவில் குறைந்திருந்தது. அது இந்த வருடத்தில் சரிச்செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த சில மாதங்களாக வெளிநாட்டு சந்தைகளில் புதிய புதிய அறிமுகங்களை ஹீரோ நிறுவனம் தொடர்ச்சியாக களமிறக்கிய வண்ணம் உள்ளது.

5 மாதங்களில் ஏறக்குறைய 20 லட்ச வாகனங்களை விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! ஏற்றுமதி அதிகரிப்பு!

இந்த வகையில் சமீபத்தில் கூட வங்க தேசத்தில், அந்நாட்டு வாடிக்கையாளர்களின் இரசனைக்கேற்ப பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஹீரோ ஹங்க் 150ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஐந்து மாதங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்துள்ள மொத்த 19,32,784 யூனிட்களில், 18,01,052 யூனிட்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும்.

5 மாதங்களில் ஏறக்குறைய 20 லட்ச வாகனங்களை விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! ஏற்றுமதி அதிகரிப்பு!

மீதி 1,31,732 யூனிட் இருசக்கர வாகனங்கள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவைகளாகும். வருட இறுதியில் வரும் பண்டிகை காலங்களே ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு உத்வேகத்தை தரக்கூடியவை. இதனால் தான் வரப்போகும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களை மற்ற நிறுவனங்களை போல் ஹீரோ நிறுவனமும் பெரிதும் நம்பியுள்ளது.

5 மாதங்களில் ஏறக்குறைய 20 லட்ச வாகனங்களை விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! ஏற்றுமதி அதிகரிப்பு!

அதுமட்டுமில்லாமல், மறுபக்கம் பொதுமக்களுக்கு தடையின்றி கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருவதால் வரும் மாதங்களில் இருசக்கர வாகன விற்பனை இயல்பு நிலைக்கு முற்றிலுமாக திரும்பிவிடும் எனவும் ஹீரோ மோட்டோகார்ப் நம்பிக்கையாக உள்ளது.

5 மாதங்களில் ஏறக்குறைய 20 லட்ச வாகனங்களை விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! ஏற்றுமதி அதிகரிப்பு!

உலகின் மிக பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப், அதன் 10ஆம் ஆண்டு நிறைவை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஆயிரக்கணக்கான ஸ்பிளெண்டர்+ பைக்குகளின் மூலம் மிக பெரிய 'HERO' லோகோ சமீபத்தில் உருவாக்கப்பட்டது.

Most Read Articles

English summary
Hero MotoCorp Sells 453,879 Units Of Motorcycles & Scooters In August 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X