மிக பெரிய சரிவு... விடாது கருப்புபோல் விரட்டும் விற்பனை சரிவு... ஜாம்பவான் நிறுவனத்துக்கே இந்த நிலைமையா!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உள்நாட்டு சந்தையில் மாபெரும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மிக பெரிய சரிவு... விடாது கருப்புபோல் விரட்டும் விற்பனை சரிவு... ஜாம்பவான் நிறுவனத்துக்கே இந்த நிலைமையா!

இந்திய மோட்டார்சைக்கிள் வாகன உலகின் ஜம்பவான் என்றழைக்கப்படும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை விற்பனைச் சரிவு விடாது கருப்பைப் போல் விரட்டி வருகின்றது. நிறுவனம் கடந்த மாதம் மாபெரும் விற்பனைச் சரிவைச் சந்தித்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது.

மிக பெரிய சரிவு... விடாது கருப்புபோல் விரட்டும் விற்பனை சரிவு... ஜாம்பவான் நிறுவனத்துக்கே இந்த நிலைமையா!

ஒவ்வொரு மாதமும் இறுதியில் விற்பனை நிலவரம் பற்றிய தகவலை வாகன உற்பத்தி நிறுவனங்கள் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் அதன் கடந்த நவம்பர் 2021 விற்பனை நிலவரம் பற்றிய தகவலை வெளியிட்டிருக்கின்றது. அது வெளியிட்டிருக்கும் தகவலின்படி 69 சதவீதம் விற்பனைச் சரிவைச் சந்தித்திருப்பது தெரிய வந்திருக்கின்றது.

மிக பெரிய சரிவு... விடாது கருப்புபோல் விரட்டும் விற்பனை சரிவு... ஜாம்பவான் நிறுவனத்துக்கே இந்த நிலைமையா!

இந்திய வாகன உலகையே இந்த தகவல் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றது. இருசக்கர உலகின் ஜாம்பவான் நிறுவனத்திற்கு இப்படி ஒரு நிலைமையா எனவும் கேள்வியெழுப்பச் செய்திருக்கின்றது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த 2021 நவம்பரில் ஒட்டுமொத்தமாக 3,49,393 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது.

மிக பெரிய சரிவு... விடாது கருப்புபோல் விரட்டும் விற்பனை சரிவு... ஜாம்பவான் நிறுவனத்துக்கே இந்த நிலைமையா!

கடந்த ஆண்டு, அதாவது, 2020ம் ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் மட்டும் நிறுவனம் 5,91,091 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருந்தது. இதனுடன் ஒப்பிடுகையிலேயே நடப்பாண்டு நவம்பரில் நிறுவனம் மாபெரும் விற்பனைச் சரிவைச் சந்தித்திருப்பது தெரிய வருகின்றது.

மிக பெரிய சரிவு... விடாது கருப்புபோல் விரட்டும் விற்பனை சரிவு... ஜாம்பவான் நிறுவனத்துக்கே இந்த நிலைமையா!

நாட்டின் பல பகுதிகளில் காலம் தாழ்ந்து பொழிந்து வரும் பருவ மழையும் இந்த விற்பனை வீழ்ச்சிக்கு ஓர் காரணம் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி சற்றே உயர்வைக் கண்டிருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

மிக பெரிய சரிவு... விடாது கருப்புபோல் விரட்டும் விற்பனை சரிவு... ஜாம்பவான் நிறுவனத்துக்கே இந்த நிலைமையா!

ஹீரோ நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் அதன் ஸ்கூட்டர்கள் 20,208 யூனிட் வரை மட்டுமே விற்பனையாகியிருக்கின்றன. இது 2021 நவம்பர் மாத விற்பனை நிலவரம் ஆகும். இதே நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் 2020 நவம்பரில் 49,654 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருந்தன. இதனுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் ஸ்கூட்டர்களின் விற்பனை வீழ்ச்சி 145 சதவீதமாக இருக்கின்றது.

மிக பெரிய சரிவு... விடாது கருப்புபோல் விரட்டும் விற்பனை சரிவு... ஜாம்பவான் நிறுவனத்துக்கே இந்த நிலைமையா!

2021 நவம்பர் மாதத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 3,28,862 யூனிட்டுகளை மட்டுமே உள் நாட்டு சந்தையில் ஹீரோ விற்பனைச் செய்திருக்கின்றது. அதுவே, 2020 நவம்பரி பார்த்தோமேயானால் நிறுவனம் 5,75,957 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருந்தது. இதனுடன் நடப்பாண்டு விற்பனையை ஒப்பிட்டு பார்த்தால் இது 75 சதவீத விற்பனை வீழ்ச்சியைக் குறிக்கின்றது.

மிக பெரிய சரிவு... விடாது கருப்புபோல் விரட்டும் விற்பனை சரிவு... ஜாம்பவான் நிறுவனத்துக்கே இந்த நிலைமையா!

எனவே நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கடந்த மாதம் குறைந்தளவு வரவேற்புக் கிடைத்திருப்பது மிகவும் தெளிவாக தெரிகின்றது. இந்த நிலையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மட்டுமின்றி இன்னும் பிற நிறுவனங்களும் இந்தியாவில் சந்தித்து வருகின்றன.

மிக பெரிய சரிவு... விடாது கருப்புபோல் விரட்டும் விற்பனை சரிவு... ஜாம்பவான் நிறுவனத்துக்கே இந்த நிலைமையா!

ஹோண்டா மோட்டார்சைக்கிள், ராயல் என்பீல்டு, பஜாஜ் உள்ளிட்ட நிறுவனங்களும் உள்நாட்டு விற்பனையில் கடும் சரிவைச் சந்தித்திருக்கின்றன. அதேநேரத்தில், இவற்றில் பல நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியில் லேசான உயர்வைச் சந்தித்திருக்கின்றன.

மிக பெரிய சரிவு... விடாது கருப்புபோல் விரட்டும் விற்பனை சரிவு... ஜாம்பவான் நிறுவனத்துக்கே இந்த நிலைமையா!

வாகன உற்பத்தியாளர்கள் உள் நாட்டு சந்தையில் கடும் விற்பனை வீழ்ச்சியைச் சந்திக்க பருவ மழை மட்டுமே காரணம் இல்லை. நாட்டில் எரிபொருள்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருவதும் ஓர் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. தொடர் விலை உயர்வின் காரணமாக தற்போது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பெட்ரோல் ரூ. 100ஐ தாண்டி விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மிக பெரிய சரிவு... விடாது கருப்புபோல் விரட்டும் விற்பனை சரிவு... ஜாம்பவான் நிறுவனத்துக்கே இந்த நிலைமையா!

பலர் எங்கு இதன் விலை ரூ. 200ஐ தொட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உறைந்திருக்கின்றனர். இதுமாதிரியான அச்சங்களின் வெளிப்பாடகவே மாபெரும் நிறுவனங்களின் விற்பனை வீழ்ச்சி அமைந்திருக்கின்றது. பொதுவாக இந்திய சந்தையில் பண்டிகைத் தினங்களில் வாகன விற்பனை சூடுபிடித்துக் காணப்படும். ஆனால், இந்த வருடம் அதுகூட இல்லை.

மிக பெரிய சரிவு... விடாது கருப்புபோல் விரட்டும் விற்பனை சரிவு... ஜாம்பவான் நிறுவனத்துக்கே இந்த நிலைமையா!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் தீபாவளி பண்டிகை கடும் துயரமான பண்டிகையாக வாகன உற்பத்தியாளர்களுக்கு கடந்திருக்கின்றது. இதற்கு கடந்த நவம்பர் மாத விற்பனையே சான்று. அதேநேரத்தில், மின்சார வாகனங்களின் விற்பனை லேசாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Hero motocorp sales skid 69 percent in november 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X