கொரோனா 2வது அலைக்கு மத்தியிலும், விற்பனையில் 1 மில்லியனை கடந்துள்ள ஹீரோ மோட்டோகார்ப்!!

கொரோனா ஊரடங்குகளுக்கு மத்தியிலும், நடப்பு 2021-22 நிதியாண்டின் முதல் கால்பகுதியில் 1 மில்லியனுக்கும் அதிகமான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா 2வது அலைக்கு மத்தியிலும், விற்பனையில் 1 மில்லியனை கடந்துள்ள ஹீரோ மோட்டோகார்ப்!!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் 2021-22 நிதியாண்டின் முதல் கால்பகுதியில் (ஏப்ரல்- ஜூன்) மொத்தம் 10,24,507 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

கொரோனா 2வது அலைக்கு மத்தியிலும், விற்பனையில் 1 மில்லியனை கடந்துள்ள ஹீரோ மோட்டோகார்ப்!!

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து துவங்கிய 2021-22 நிதியாண்டின் இந்த கால்பகுதி காலத்தில் இந்தியாவில் என்னென்ன நடந்தது என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். எப்படியோ ஒருவழியாக முடிந்தது என நினைத்திருந்த கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்தது.

கொரோனா 2வது அலைக்கு மத்தியிலும், விற்பனையில் 1 மில்லியனை கடந்துள்ள ஹீரோ மோட்டோகார்ப்!!

இதற்கு இரண்டாவது அலை என பெயர் வைத்தனர். ஏப்ரல் மத்தியில் இருந்து வேகமெடுக்க ஆரம்பித்த கொரோனா இரண்டாவது அலையால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்குகள் நடைமுறைக்கு வந்தன. இதனால் இந்தியாவில் ஏற்றுமதி, இறக்குமதி தடைப்பட்டது.

கொரோனா 2வது அலைக்கு மத்தியிலும், விற்பனையில் 1 மில்லியனை கடந்துள்ள ஹீரோ மோட்டோகார்ப்!!

அதேபோல் டீலர்ஷிப் மையங்களும் பல மாநிலங்களில் மூடப்பட்டன. 2வது அலைக்கான ஊரடங்குகள் கடந்த மே மாத இறுதி வரையில் அமலில் இருந்தன. இருப்பினும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஏப்ரல், மே, ஜூன் என இந்த மூன்று மாதங்களிலேயே விற்பனையில் 1 மில்லியனை கடந்துள்ளது.

கொரோனா 2வது அலைக்கு மத்தியிலும், விற்பனையில் 1 மில்லியனை கடந்துள்ள ஹீரோ மோட்டோகார்ப்!!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களையும் விற்பனை செய்து வருகிறது. ஊரடங்குகளுக்கு மத்தியிலும் ஹீரோவின் விற்பனை எண்ணிக்கை 1 மில்லியனை கடந்திருப்பது, தற்போதைய அசாதாரண சூழ்நிலையால் மக்கள் தனிப்பயன்பாட்டு வாகனங்களையே வாங்க விரும்புகின்றனர் என்பதை காட்டுகிறது.

கொரோனா 2வது அலைக்கு மத்தியிலும், விற்பனையில் 1 மில்லியனை கடந்துள்ள ஹீரோ மோட்டோகார்ப்!!

மொத்த 10,24,507 என்ற விற்பனை எண்ணிக்கையில், கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் ஹீரோ நிறுவனத்திற்கு கிடைத்துள்ளன. ஏனெனில் 2021 ஜூன் மாதத்தில் மட்டுமே 4,69,160 இருசக்கர வாகனங்களை இந்தியாவில் இருந்து இந்த இந்திய நம்பர்.1 இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

கொரோனா 2வது அலைக்கு மத்தியிலும், விற்பனையில் 1 மில்லியனை கடந்துள்ள ஹீரோ மோட்டோகார்ப்!!
June' 21 June'20 YTD FY'22 YTD FY'21
Motorcycles 4,41,536 4,18,141 9,59,589 5,24,179
Scooters 27,624 33,842 64,918 40,486
Total 4,69,160 4,51,983 10,24,507 5,64,665
Domestic 4,38,514 4,30,889 9,40,707 5,39,737
Exports 30,646 21,094 83,800 24,928

இதில் 4,41,536 மோட்டார்சைக்கிள்களும், 27,624 ஸ்கூட்டர்களும் அடங்குகின்றன. கடந்த ஜூன் மாதத்தில் ஹீரோவின் 4,38,514 இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மீதி 30,646 இருசக்கர வாகனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

கொரோனா 2வது அலைக்கு மத்தியிலும், விற்பனையில் 1 மில்லியனை கடந்துள்ள ஹீரோ மோட்டோகார்ப்!!

அதேநேரம், 2020 ஜூன் மாதத்தில் 4,51,983 இருசக்கர வாகனங்களையே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அதேபோல் 2020-21 நிதியாண்டின் முதல் கால்பகுதியில் வெறும் 5,64,665 இருசக்கர வாகனங்களையே ஹீரோ விற்றிருந்தது.

கொரோனா 2வது அலைக்கு மத்தியிலும், விற்பனையில் 1 மில்லியனை கடந்துள்ள ஹீரோ மோட்டோகார்ப்!!

இந்த எண்ணிக்கையில் இருந்து 2020 ஜூன் மாதத்தின் எண்ணிக்கையை கழித்தோமேயானால், வெறும் 1.12 லட்ச ஹீரோ இருசக்கர வாகனங்கள் மட்டுமே மற்ற இரு மாதங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதிலும் 2020 ஏப்ரலில் நாடு தழுவிய முழு ஊரடங்கால் ஒரு வாகனம் கூட இந்தியா விற்பனை செய்யப்படவில்லை என பதிவுகள் கூறுகின்றன.

Most Read Articles

English summary
Hero MotoCorp, the world’s largest manufacturer of motorcycles and scooters, has commenced the Financial Year (FY) 2021-22 with sales of over a million units during the first quarter (April-June).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X