ஹீரோ பேஷன் ப்ரோவில் ஸ்பெஷல் எடிசன்!! இப்போது விற்பனையில்...

100 மில்லியன் இருசக்கர வாகனங்களின் தயாரிப்பை கொண்டாடும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ள 2021 ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கின் புதிய டிவிசி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹீரோ பேஷன் ப்ரோவில் ஸ்பெஷல் எடிசன்!! இப்போது விற்பனையில்...

ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.67,608-ல் இருந்து ரூ.69,808 வரையில் உள்ளன. இரு வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த பைக்கை நான்கு விதமான நிறத்தேர்வுடன் பெறலாம்.

சில டிசைன் அப்டேட்களுடன் இதன் பிஎஸ்6 வெர்சன் கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது புதிய டிவிசி வீடியோ ‘செல்லலாம்' என்ற வாக்கியத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பிப்ரவரி மாத துவக்கத்தில் மொத்த இருசக்கர வாகன தயாரிப்பில் 100 மில்லியனை கடந்துள்ளதாக அறிவித்திருந்தது.

ஹீரோ பேஷன் ப்ரோவில் ஸ்பெஷல் எடிசன்!! இப்போது விற்பனையில்...

இதனை கொண்டாடும் விதத்தில் எக்ஸ்ட்ரீம் 160ஆர், பேஷன் ப்ரோ, க்ளாமர், டெஸ்டினி 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பைக்குகளின் ஸ்பெஷன் எடிசன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அப்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹீரோ பேஷன் ப்ரோவில் ஸ்பெஷல் எடிசன்!! இப்போது விற்பனையில்...

இந்த 100 மில்லியன் ஸ்பெஷல் எடிசன்கள் தற்சமயம் விற்பனையில் இருக்கும் நிலையில் அவற்றில் ஒன்றான பேஷன் ப்ரோ ஸ்பெஷல் எடிசனை விளம்பரப்படுத்தும் நோக்கில் இந்த புதிய டிவிசி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஹீரோ பேஷன் ப்ரோவில் ஸ்பெஷல் எடிசன்!! இப்போது விற்பனையில்...

ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கில் 110சிசி பிஎஸ்6 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 9.02 எச்பி மற்றும் 9.89 என்எம் டார்க் திறனை வழங்கக்கூடிய இந்த என்ஜின் அதன் பிஎஸ்4 வெர்சனை காட்டிலும் கூடுதல் டார்க் திறனை வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹீரோ பேஷன் ப்ரோவில் ஸ்பெஷல் எடிசன்!! இப்போது விற்பனையில்...

பைக்கின் இரு சக்கரங்களிலும் இணைக்கப்பட்ட ப்ரேக்கிங் சிஸ்டத்துடன் ட்ரம் ப்ரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. 117 கிலோ எடை கொண்ட பேஷன் ப்ரோ பைக்கின் பெட்ரோல் டேங்கின் மொத்த கொள்ளளவு 10 லிட்டர்கள் ஆகும்.

ஹீரோ பேஷன் ப்ரோவில் ஸ்பெஷல் எடிசன்!! இப்போது விற்பனையில்...

தோற்றத்தை பொறுத்தவரையில் ப்ளாக் விஸர், முப்பரிமாண ஹீரோ பேட்ஜ் மற்றும் 18 இன்ச்சில் அலாய் சக்கரங்களை பேஷன் ப்ரோவில் ஹீரோ நிறுவனம் வழங்குகிறது. தொழிற்நுட்ப அம்சங்களாக எஃப்1 மற்றும் ஐ3எஸ் தொழிற்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
2021 Hero Passion Pro New TVC – Celebrates 100 Millionth Edition
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X