Just In
- just now
புதிய பெயரை பெறுகிறது டாடாவின் பிரபல மின்சார கார்... பெயர் மட்டுமல்ல ரேஞ்ஜும் அதிகமாயிடுச்சு... அப்போ விலை?..
- 2 hrs ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 2 hrs ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 2 hrs ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
Don't Miss!
- Education
ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO-வில் பணியாற்றலாம் வாங்க!
- News
இறக்கும் முன்னர் கொரோனா விழிப்புணர்வு.. இறந்த பின் விவேக் மக்களுக்கு சொல்லும் அறிவுரை "இதுதான்!"
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Lifestyle
செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- Movies
விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடேங்கப்பா, போன மாசம் இத்தனை யூனிட் வாகனங்களையா ஹீரோ விற்பனை செஞ்சிருக்கு..! தலையே சுத்துது!!
கடந்த பிப்ரவரி மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எத்தனை யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது என்பது பற்றிய ஆச்சரியமளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

2021 பிப்ரவரி மாதத்தில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனைச் செய்த வாகனங்களின் எண்ணிக்கைப் பற்றிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதனடிப்படையில், நாட்டின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை பற்றிய தகவல் தற்போது வெளி வந்திருக்கின்றது.

இந்நிறுவனம் ஒட்டுமொத்தமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது. இந்த அதீத விற்பனையின் மூலம் இந்தியாவின் ஜாம்பவான் எப்போதுமே நான்தான் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கின்றது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்.

ஆனால், இந்நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2020ம் ஆண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 4,79,310 யூனிட் மோட்டார்சைக்கிள்களை விற்பனைச் செய்திருந்தது. ஆனால், நடப்பாண்டு பிப்ரவரியிலோ 4,63,723 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருக்கின்றது.

இது 3.25 சதவீதம் குறைந்த விற்பனையாகும். அதாவது, 15,587 யூனிட் வரை குறைவாகவே மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகியிருக்கின்றன. அதேசமயம், இதே வருடத்தின் ஜனவரி மாதத்துடன் பிப்ரவரி மாத மோட்டார்சைக்கிள் விற்பனையை ஒப்பிட்டு பார்த்தால் 3.27 சதவீதம் விற்பனை வளர்ச்சியைச் சந்திருப்பது தெரிய வருகின்றது.

2021 ஜனவரியில் நிறுவனம் ஒட்டுமொத்தமாகவே 4,49,037 யூனிட் மோட்டார்சைக்கிள்களை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது. இதைக்காட்டிலும் பிப்ரவரி மாத மோட்டார்சைக்கிள் விற்பனை 14,686 யூனிட்டுகளை அதிகமாக பெற்றிருக்கின்றது.

2021 பிப்ரவரியில் மோட்டார்சைக்கிள் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்திருந்தாலும் ஸ்கூட்டர் விற்பனை கடந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் நடப்பாண்டு ஜனவரி ஆகிய மாதங்களைக் காட்டிலும் அதிகளவு விற்பனையைப் பெற்றிருக்கின்றது. 2021 பிப்ரவரியில் ஒட்டுமொத்தமாக 41,744 ஹீரோ ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. அதுவே, 2020 பிப்ரவரியில் பார்த்தோமேயானால் 18,932 யூனிட்டுகளை மட்டுமே நிறுவனம் விற்பனைச் செய்திருந்தது.

எனவே, கடந்த பிப்ரவரி விற்பனையானது 120.49 வளர்ச்சியுடன் தலையோங்கி நிற்கின்றது. இதேபோன்று, வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியிலும் 16.56 சதவீத வளர்ச்சியை நிறுவனம் சந்தித்திருக்கின்றது. 2020 பிப்ரவரியில் 18,046 யூனிட்டுகளாக மட்டுமே இருந்த ஏற்றுமதி, நடப்பாண்டு பிப்ரவரியில் 21,034 யூனிட்டுகளாக உயர்ந்திருக்கின்றது.

இதுபோன்று வளர்ச்சிகளின் காரணத்தால் மோட்டார்சைக்கிளின் விற்பனை வீழ்ச்சி நிறுவனத்தைப் பெரியளவில் பாதிக்கவில்லை என்பது தெரிய வருகின்றது. அதாவது, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் போது விற்பனைச் செய்யப்பட்ட ஒட்டுமொத்த யூனிட்டுகளுடன், நடப்பாண்டு பிப்ரவரி மாத விற்பனையை ஒப்பிட்டு பார்த்தால் 1.45 சதவீத வளர்ச்சியை ஹீரோ பெற்றிருப்பது தெரிய வருகின்றது.

2020 பிப்ரவரியை விட 2021 பிப்ரவரியில் 7,225 யூனிட்டுகள் அதிகமாகவே விற்பனையாகியிருக்கின்றன. 5,05,467 யூனிட்டுகள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையாகும்.