மெக்சிகோ சாலைகளில் இந்தியாவின் ஹீரோ பைக்குகளா!! விரைவில் நிஜமாகவுள்ளது..

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் மெக்சிகன் நாட்டு சந்தையில் நுழைய அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இதுகுறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மெக்சிகோ சாலைகளில் இந்தியாவின் ஹீரோ பைக்குகளா!! விரைவில் நிஜமாகவுள்ளது..

மெக்சிகன் நாட்டில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யவுள்ளதையும், அதற்காக க்ரூபோ சலினாஸ் என்ற நிறுவனத்துடன் விநியோக ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டுள்ளதையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் உறுதிப்படுத்தி இருந்தது.

மெக்சிகோ சாலைகளில் இந்தியாவின் ஹீரோ பைக்குகளா!! விரைவில் நிஜமாகவுள்ளது..

இந்தியா மட்டுமின்றி உலகளவில் இருசக்கர வாகன தயாரிப்பில் மிக பெரிய நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் மெக்சிகோவில் முதற்கட்டமாக 9 தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த 9 தயாரிப்புகளில் பெரும்பான்மையானவை 100சிசி- 125சிசி மோட்டார்சைக்கிள்களாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெக்சிகோ சாலைகளில் இந்தியாவின் ஹீரோ பைக்குகளா!! விரைவில் நிஜமாகவுள்ளது..

மைலேஜ் தரக்கூடிய ஸ்கூட்டர்களை விரும்புபவர்களும் அங்கு அதிக பேர் உள்ளனர். ஹீரோ நிறுவனத்துடன் விநியோக ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டுள்ள க்ரூபோ சலினாஸ், மெக்ஸிகோ நாட்டில் தயாரிப்புகளை விற்பனை செய்ய மிக பெரிய விநியோக சந்தையை கொண்டுள்ள நிறுவனங்களுள் ஒன்று.

மெக்சிகோ சாலைகளில் இந்தியாவின் ஹீரோ பைக்குகளா!! விரைவில் நிஜமாகவுள்ளது..

கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வருவதால் மெக்ஸிகோவில் இருசக்கர வாகன விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன. விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு மெக்ஸிகோவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து போட்டி வரலாம்.

மெக்சிகோ சாலைகளில் இந்தியாவின் ஹீரோ பைக்குகளா!! விரைவில் நிஜமாகவுள்ளது..

அதேநேரம் சில ஜப்பானிய மற்றும் அமெரிக்க நிறுவனங்களும் தயாரிப்புகளை அந்த நாட்டில் சந்தைப்படுத்தி வருகின்றன. அவையும் ஹீரோவுக்கு விற்பனை போட்டியினை தரலாம். ஹீரோ நிறுவனம் இந்தியாவில் இருந்தப்படி சில ஆசிய, ஆப்ரிக்க மற்றும் தெற்கு & மத்திய அமெரிக்க நாடுகளில் சிறப்பான வணிகத்தை மேற்கொண்டு வருகிறது.

மெக்சிகோ சாலைகளில் இந்தியாவின் ஹீரோ பைக்குகளா!! விரைவில் நிஜமாகவுள்ளது..

இதனால் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு மொத்தம் 8 தொழிற்சாலைகள் உலகம் முழுவதிலும் (6 இந்தியாவில்) உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதே ராசி மெக்ஸிகோவிலும் தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
English summary
Hero Motocorp to begin Mexico operations.
Story first published: Friday, January 29, 2021, 1:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X