ஹீரோவின் விர்ச்சுவல் ஷோரூம் அறிமுகம்... எல்லா பைக்கும் ஒரே இடத்தில்... வீட்ல இருந்தே வாங்கலாம்!!

ஹீரோ நிறுவனம் விர்ச்சுவல் ஷோரூமை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷோரூம்குறித்த மேலும் பல முக்கிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

ஹீரோவின் விர்ச்சுவல் ஷோரூம் அறிமுகம்... எல்லா பைக்கும் ஒரே இடத்தில்... வீட்ல இருந்தே வாங்கலாம்!!

நாட்டின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தனது புதிய ஷோரூம் ஒன்றை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விர்ச்சுவல் ஷோரூம் (virtual showroom) எனப்படும் ஆன்லைன் ஷோரூமையே நிறுவனம் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹீரோவின் விர்ச்சுவல் ஷோரூம் அறிமுகம்... எல்லா பைக்கும் ஒரே இடத்தில்... வீட்ல இருந்தே வாங்கலாம்!!

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும்நிலையில் ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் இந்த தனித்துவமான விர்ச்சுவல் ஷோரூம் சேவையை இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. இது, வைரஸ் பரவல் காரணமாக வீட்டை விட்டு வெளியே வர தயங்கும் வாடிக்கையாளர்களுக்கு மிக உதவியாக இருக்கும் என நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

ஹீரோவின் விர்ச்சுவல் ஷோரூம் அறிமுகம்... எல்லா பைக்கும் ஒரே இடத்தில்... வீட்ல இருந்தே வாங்கலாம்!!

இந்த விர்ச்சுவல் ஷோரூமில் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் இடம் பெற்றிருக்கும். ஆகையால், எந்த வாகனத்தைத் தேர்வு செய்வது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம். அதாவது, உங்களுக்கு பிடித்தமான இருசக்கர வாகன மாடலை உங்கள் விருப்பப்படி பார்த்து, அதன் பின்னர் அதனை வாங்கலாம்.

ஹீரோவின் விர்ச்சுவல் ஷோரூம் அறிமுகம்... எல்லா பைக்கும் ஒரே இடத்தில்... வீட்ல இருந்தே வாங்கலாம்!!

விற்பனையாளர்களின் எந்தவொரு தொல்லையும் இங்கு இருக்காது. அதேசமயம், உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதனை தீர்த்து வைக்கும் வசதியையும் ஹீரோ அதே தளத்தில் வழங்க இருக்கின்றது. இதுதவிர நேரில் ஓர் வாகனத்தை பார்க்கும்போது கிடைக்கும் அதே அனுபவத்தை வழங்குவதற்காக 360 டிகிரி பார்வை வசதியை விர்ச்சுவல் ஷோரூமில் ஹீரோ வழங்கியுள்ளது.

ஹீரோவின் விர்ச்சுவல் ஷோரூம் அறிமுகம்... எல்லா பைக்கும் ஒரே இடத்தில்... வீட்ல இருந்தே வாங்கலாம்!!

தொடர்ந்து, குறிப்பிட்ட பைக் பற்றிய அனைத்து தகவலையும் ஒரே க்ளிக்கில் வழங்கும் வசதியையும் ஹீரோ வழங்கியிருக்கின்றது. இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட விர்ச்சுவல் ஷோரூமை எப்படி அணுகுவது என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம்.

ஹீரோவின் விர்ச்சுவல் ஷோரூம் அறிமுகம்... எல்லா பைக்கும் ஒரே இடத்தில்... வீட்ல இருந்தே வாங்கலாம்!!

இது அவ்வளவு கஷ்டம் இல்லைங்க. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்திலேயே இதற்கான வசதியை நிறுவனம் வழங்கியிருக்கின்றது. ஆகையால், விர்ச்சுவல் ஷோரூமை நீண்ட நேரம் தேடி அலைவதற்கான அவசியம் துளியளவும் இருக்காது.

ஹீரோவின் விர்ச்சுவல் ஷோரூம் அறிமுகம்... எல்லா பைக்கும் ஒரே இடத்தில்... வீட்ல இருந்தே வாங்கலாம்!!

தொடர்ந்து, அழைப்பு கோரிக்கை முன் வைக்கும் வசதியையும் நிறுவனம் இத்தளத்தில் வழங்கியுள்ளது. இதன் வாயிலாக தயாரிப்பு (வாகனம்) குறித்த எந்தவொரு சந்தேகத்தையும் நம்மால் கேட்டறிந்து கொள்ள முடியும். இவற்றுடன் இன்னும் பல சிறப்பு வசதிகளை விர்ச்சுவல் ஷோரூமில் ஹீரோ வழங்கியிருக்கின்றது.

ஹீரோவின் விர்ச்சுவல் ஷோரூம் அறிமுகம்... எல்லா பைக்கும் ஒரே இடத்தில்... வீட்ல இருந்தே வாங்கலாம்!!

தற்போது உச்சகட்டத்தில் பரவி வரும் கொரோனா வைரசின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக புதிய வாகனத்தை இப்புதிய விர்ச்சுவல் ஷோரூம் பேருதவியாக அமைய இருக்கின்றது. நாட்டில் லட்சக் கணக்கில் மக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஹீரோவின் விர்ச்சுவல் ஷோரூம் அறிமுகம்... எல்லா பைக்கும் ஒரே இடத்தில்... வீட்ல இருந்தே வாங்கலாம்!!

இதனால் பலர் வெளியில் வரவே தயக்கம் காட்டுகின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களும் வெளியில் வர தயக்கம் காட்டுகின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையில் இப்படியான (விர்ச்சுவல் ஷோரூம்) வாகன விற்பனையகமே தேவை என்கின்றனர் வாகனத்துறை வல்லுநர்கள்.

Most Read Articles

English summary
Hero MotoCorp Virtual Showroom Launched In India. Read In Tamil.
Story first published: Friday, April 30, 2021, 10:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X