Hero Motors - Yamaha இணைவு... இரு மாபெரும் நிறுவனங்களின் கூட்டணி எதற்காக தெரியுமா? முழு விபரம்!

இரு மாபெரும் வாகன உற்பத்தி நிறுவனங்களான ஹீரோ மோட்டார்ஸ் (Hero Motors) மற்றும் யமஹா (Yamaha) ஆகிய இரு நிறுவனங்களும் கூட்டணியைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முக்கிய விபரத்தை இந்த பதிவில் காணலாம், வாங்க.

Hero Motors - Yamaha இணைவு... இரு மாபெரும் நிறுவனங்களின் கூட்டணி எதற்காக தெரியுமா? முழு விபரம்!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஹீரோ மோட்டார்ஸ் மற்றும் ஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கும் யமஹா மோட்டார் கம்பெனி ஆகிய இரு நிறுவனங்களும் கூட்டணி சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டணி எதற்காக என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Hero Motors - Yamaha இணைவு... இரு மாபெரும் நிறுவனங்களின் கூட்டணி எதற்காக தெரியுமா? முழு விபரம்!

ஹீரோ மோட்டார்ஸ் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் யமஹா மோட்டார் கம்பெனி உடன் கூட்டணி வைத்து மின்சாரத்தால் இயங்கும் மோட்டார்களை உருவாக்க இருக்கின்றது. பிரத்யேகமாக எலெக்ட்ரிக் மிதி வண்டிகளுக்கான மோட்டார்களையே நிறுவனங்கள் உருவாக்க இருக்கின்றன.

Hero Motors - Yamaha இணைவு... இரு மாபெரும் நிறுவனங்களின் கூட்டணி எதற்காக தெரியுமா? முழு விபரம்!

இதற்காகவே இரு நிறுவனங்களும் கூட்டணியைத் தொடங்கியுள்ளன. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் மிக விரைவில் இரு நிறுவனங்களும் இணைந்து ஓர் உற்பத்தி ஆலையைத் தொடங்க இருக்கின்றன. அடுத்த சில மாதங்களுக்குள் உற்பத்தி ஆலையை அமைத்தல் மற்றும் இ-மிதிவண்டிகளுக்கான எலெக்ட்ரிக் மோட்டார்களை தயாரித்தல் ஆகிய பணிகளை நிறுவனங்கள் தொடங்க இருக்கின்றன.

Hero Motors - Yamaha இணைவு... இரு மாபெரும் நிறுவனங்களின் கூட்டணி எதற்காக தெரியுமா? முழு விபரம்!

இந்த இணைவு குறித்து ஹீரோ மோட்டார்ஸ் கூறியதாவது, "2019 ஆம் ஆண்டு எலக்ட்ரிக் சைக்கிள் பிரிவில் இணைந்து பணியாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஹீரோ-யமஹா கூட்டணியின் அடுத்த கட்டம் இது" என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் மின் வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

Hero Motors - Yamaha இணைவு... இரு மாபெரும் நிறுவனங்களின் கூட்டணி எதற்காக தெரியுமா? முழு விபரம்!

இதன் விளைவாக கடந்த காலங்களில் மிகவும் குறைந்தளவில் காணப்பட்ட மின்சார வாகனங்கள் தற்போது அதிகளவில் தென்பட தொடங்கியிருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களை நாட்டில் களமிறக்கி வருகின்றன.

Hero Motors - Yamaha இணைவு... இரு மாபெரும் நிறுவனங்களின் கூட்டணி எதற்காக தெரியுமா? முழு விபரம்!

இந்த நிலையில், இ-மிதிவண்டிகளுக்கான மின்சார மோட்டார் தயாரிப்பில் ஹீரோ மோட்டார்ஸ் மற்றும் யமஹா மோட்டார் கம்பெனி கூட்டணி களமிறங்கியிருக்கின்றன. உள்ளூர் தயாரிப்புகளை இந்திய அரசாங்கம் ஊக்குவித்து வரும் நிலையில் இத்தகைய செயல்பாட்டில் ஹீரோ மோட்டார்ஸ் களமிறங்கியிருக்கின்றது.

Hero Motors - Yamaha இணைவு... இரு மாபெரும் நிறுவனங்களின் கூட்டணி எதற்காக தெரியுமா? முழு விபரம்!

தயாரிப்பு ஆலை பஞ்சால் மாநிலத்தில் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2022 நவம்பர் மாதத்திற்குள் இந்த ஆலையில் உற்பத்தி பணிகள் தொடங்கிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டிற்கு ஒரு மில்லியன் உற்பத்தி எனும் திறனில் இந்த ஆலை இயங்கும். இங்கு உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகள் இந்தியாவிற்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Hero Motors - Yamaha இணைவு... இரு மாபெரும் நிறுவனங்களின் கூட்டணி எதற்காக தெரியுமா? முழு விபரம்!

எனவே ஹீரோ மோட்டார்ஸ் பிராண்டில் விற்பனைக்கு வரும் வாகனங்களில் மட்டுமின்றி பிற நிறுவனங்களின் தயாரிப்புகளிலும் ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாக்கப்படும் மின் மோட்டார்கள் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Hero Motors - Yamaha இணைவு... இரு மாபெரும் நிறுவனங்களின் கூட்டணி எதற்காக தெரியுமா? முழு விபரம்!

ஹீரோ மோட்டார்ஸ் கம்பெனி (Hero Motors Company) குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பங்கஜ் முன்ஜால் இதுகுறித்து கூறுகையில், "ஹீரோ உற்பத்தியையும், யமஹா தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வழங்கும். இந்த கூட்டு முயற்சியானது இ-சைக்கிள்கள் பிரிவில் உலகளவில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட முதல் வீரராக வேண்டும் என்ற லட்சியத்தின் அங்கமாக தொடங்கப்பட்டுள்ளது. ஹீரோ இன்டர்நேஷனல் மூலம் ஐரோப்பாவிற்கு விரிவாக்கம் செய்தல் மற்றும் உலகத் தரம் வாய்ந்த தொழில்துறை பூங்கா அமைப்பது ஆகிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன" என்றார்.

Most Read Articles
English summary
Hero motors and yamaha joined to manufacture electric drive motors
Story first published: Friday, October 29, 2021, 15:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X