Just In
- 7 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 8 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 9 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- News
ஒட்டுமொத்த நாடும் தேடும் 'அந்த' ஒற்றை நபர்... பிரிட்டனில் பரபரப்பு... காரணம் இதுதான்
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இப்போ இருக்க பெட்ரோல் விலைக்கு கம்யூட்டர் பைக்தான் சரி... ஹீரோ பேஷன் ப்ரோ விற்பனை கிடுகிடு உயர்வு...
இந்தியாவில் ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கின் விற்பனை உயர்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனை எண்ணிக்கை அடிப்படையில், உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றாக ஹீரோ மோட்டோகார்ப் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் மட்டும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 4.67 லட்சத்திற்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கையில் ஹீரோ பேஷன் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.

அத்துடன் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியையும் ஹீரோ பேஷன் பதிவு செய்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 26,905 பேஷன் மோட்டார்சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை 43,162 ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் விற்பனையில் 60 சதவீத வளர்ச்சியை ஹீரோ பேஷன் பதிவு செய்துள்ளது. தற்போதைய நிலையில் ஹீரோ நிறுவனம் பேஷன் ப்ரோ பைக்கை, டிஸ்க் பிரேக் மற்றும் ட்ரம் ப்ரேக் என மொத்தம் 2 வேரியண்ட்களில் விற்பனை செய்து வருகிறது. இவற்றின் விலை முறையே 69,600 ரூபாய் மற்றும் 67,400 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை புது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

டெக்னோ ப்ளூ, ஹெவி க்ரே மெட்டாலிக், மூன் யெல்லோ, ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் க்ளாஸ் ப்ளாக் என மொத்தம் 5 வண்ணங்களில் பேஷன் ப்ரோ மோட்டார்சைக்கிளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அளவில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்தமாகவும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாக இது உள்ளது.

ஹீரோ பேஷன் ப்ரோ மோட்டார்சைக்கிளில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான 113 சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு 4-ஸ்ட்ரோக் ப்யூயல்-இன்ஜெக்டட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்மில் 9.15 பிஎஸ் பவரையும், 5000 ஆர்பிஎம்மில் 9.89 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இந்த இன்ஜினுடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஹீரோ பேஷன் ப்ரோ மோட்டார்சைக்கிளில், 10 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எடை 117 கிலோ (டிஸ்க் பிரேக் வேரியண்ட்டின் எடை 118 கிலோ). அதே சமயம் இந்த பைக் ஓரளவிற்கு சிறப்பான எரிபொருள் சிக்கனத்தையும் வழங்குகிறது.

ஹீரோ பேஷன் ப்ரோ மோட்டார்சைக்கிள், ஒரு லிட்டருக்கு 68.21 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறை பயன்பாட்டில் இதை விட குறைவான மைலேஜ்தான் கிடைக்கும் என்றாலும், தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இதனை ஓரளவிற்கு நல்ல மைலேஜாக கருதலாம்.

இந்த பைக்கில், i3S ஸ்டாப்-ஸ்டார்ட் தொழில்நுட்பம், ஹாலோஜன் ஹெட்லேம்ப் மற்றும் டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் ஹோண்டா சிடி 110 ட்ரீம் மற்றும் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் ஆகியவை ஹீரோ பேஷன் ப்ரோ மோட்டார்சைக்கிளின் முக்கியமான போட்டியாளர்களாக உள்ளன.