புதிய ஹீரோ பிளஷர்+ எக்ஸ்டெக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.69,500

பிளஷர்+ ஸ்கூட்டர்கள் லைன்அப்பில் புதிய டாப் வேரியண்ட்டாக ஹீரோ பிளஷர்+ எக்ஸ்டெக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஹீரோ ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஹீரோ பிளஷர்+ எக்ஸ்டெக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.69,500

ஹீரோ மோட்டோகார்பின் அனைத்து இந்திய டீலர்ஷிப் மையங்களிலும் விற்பனைக்கு கிடைக்கவுள்ள புதிய பிளஷர்+ எக்ஸ்டெக்கின் விலை ரூ.69,500இல் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வழக்கமான ஹீரோ பிளஷர்+ ஸ்கூட்டர்களின் விலைகள் ரூ.61,900இல் இருந்து ஆரம்பிக்கின்றன.

புதிய ஹீரோ பிளஷர்+ எக்ஸ்டெக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.69,500

புதிய எக்ஸ்டெக் மாடலில் ஹீரோ பிளஷர்+ ஸ்கூட்டருக்கு உண்டான ரெட்ரோ-ஸ்டைல் தோற்றத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. க்ரோம் தொடுதல்களானது ஸ்கூட்டரின் கண்ணாடிகள், மஃப்லர் பாதுகாப்பான், ஹேண்டில் பார், இருக்கையின் பின் தலையணை மற்றும் ஃபெண்டர் ஸ்ட்ரிப் உள்ளிட்ட பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஹீரோ பிளஷர்+ எக்ஸ்டெக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.69,500

அத்துடன் இரட்டை நிறத்தில் இருக்கை அமைப்பு மற்றும் வண்ண உட்பக்க பேனல்களினால் ஸ்கூட்டரின் ஸ்டைல் மேலும் மெருக்கேறியுள்ளது. பின்பக்கத்தில் பயணிக்கான முதுகு தலையணை ஆனது தொலைத்தூர பயணங்களின் போது அசவுகரியத்தை தவிர்க்க பெரிதும் உதவியாக இருக்கும்.

புதிய ஹீரோ பிளஷர்+ எக்ஸ்டெக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.69,500

இவை மட்டுமின்றி இந்த புதிய ஸ்கூட்டரின் முன்பக்க மெட்டல் ஃபெண்டர் வாகனத்தின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும். புதிய பிளஷர்+ எக்ஸ்டெக் ஸ்கூட்டரில் ப்ளூடூத் இணைப்பை கொண்ட டிஜிட்டல் அனலாக் வேகமானி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மொபைலுக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மொபைல்போன் பேட்டரியின் நிலை உள்ளிட்டவற்றை அறியலாம்.

புதிய ஹீரோ பிளஷர்+ எக்ஸ்டெக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.69,500

பயணிகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் சைடு-ஸ்டாண்ட் போடப்பட்டு இருப்பதை காட்டும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் சைடு-ஸ்டாண்ட் என்ஜின் கட்-ஆஃப் உள்ளிட்ட வசதிகள் புதிய எக்ஸ்டெக் ஸ்கூட்டரில் சேர்க்கப்பட்டுள்ளன. பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், புதிய பிளஷர்+ எக்ஸ்டெக் ஸ்கூட்டரின் நீளம் 1,769மிமீ ஆகும்.

புதிய ஹீரோ பிளஷர்+ எக்ஸ்டெக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.69,500

ஸ்கூட்டரின் அகலம் 704மிமீ மற்றும் உயரம் 1,162மிமீ ஆக உள்ளது. 1,238மிமீ-இல் வீல்பேஸை கொண்டிருக்கின்ற புதிய பிளஷர்+ எக்ஸ்டெக்கின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 155மிமீ ஆக்வும், எடை 106 கிலோவாகவும் உள்ளன. இதன் பெட்ரோல் டேங்கில் அதிகப்பட்சமாக 4.8 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோலை நிரப்பி கொள்ளலாம்.

புதிய ஹீரோ பிளஷர்+ எக்ஸ்டெக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.69,500

புதிய பிளஷர்+ எக்ஸ்டெக்கிற்கு ஜூப்லியண்ட் மஞ்சள் நிறம் புதியதாக வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் போலஸ்டார் ப்ளூ, மேட் வெர்னியர் க்ரே, மேட் ப்ளாக், மேட் க்ரீன், மிட்நைட் ப்ளாக், பெர்ல் சில்வர் வெள்ளை மற்றும் ஸ்போர்டியான சிவப்பு உள்ளிட்ட ஹீரோ பிளஷர்+ ஸ்கூட்டரின் வழக்கமான நிறங்களிலும் வாங்கலாம்.

புதிய ஹீரோ பிளஷர்+ எக்ஸ்டெக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.69,500

புதிய எக்ஸ்டெக் மாடல் அதன் பிரிவிலேயே முதல்முறையாக பிரோஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப்பை பெற்று வந்துள்ளது. இந்த ஹெட்லேம்ப் கூடுதல் நீளம் மற்றும் அகலமாக 25% அதிக ஒளியினை வழங்கும் என்கிறது ஹீரோ நிறுவனம். இதன் மூலம் பனி மிகுந்த பகுதியில் கூட இந்த புதிய ஹீரோ ஸ்கூட்டரை தாராளமாக எடுத்து செல்லலாம்.

புதிய ஹீரோ பிளஷர்+ எக்ஸ்டெக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.69,500

மற்றப்படி என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஹீரோ பிளஷர்+ ஸ்கூட்டரில் 110.9சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு, ஒஎச்சி, 4-ஸ்ட்ரோக், ஃப்யுல் இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 7,000 ஆர்பிஎம்-இல் 8.0 எச்பி-ஐயும், 5,500 ஆர்பிஎம்-இல் 8.70 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

புதிய ஹீரோ பிளஷர்+ எக்ஸ்டெக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.69,500

அதேபோல் சஸ்பென்ஷன் அமைப்பிலும் புதிய எக்ஸ்டெக் ஸ்கூட்டரில் மாற்றமில்லை. ஹீரோ பிளஷர்+ ஸ்கூட்டரில் சஸ்பென்ஷனிற்கு முன் மற்றும் பின்பக்கத்தில் முறையே சுருள்-லோடு ஹைட்ராலிக் டேம்பர்கள் & ஸ்விங்கார்ம் உடன் சுருள்-லோடு ஹைட்ராலிக் டேம்பர்களும் வழங்கப்பட, ப்ரேக்கிங் பணியினை இருசக்கரங்களில் உள்ள 130மிமீ ட்ரம் ப்ரேக்குகள் கவனித்து கொள்கின்றன.

புதிய ஹீரோ பிளஷர்+ எக்ஸ்டெக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.69,500

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் நெருங்கி வருவதை அடுத்து, இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப், சமீபத்தில் எக்ஸ்பல்ஸ்200 பைக்கின் புதிய 4-வால்வு வெர்சனை அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது பிளஷர்+ எக்ஸ்டெக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஹீரோ பிளஷர்+ எக்ஸ்டெக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.69,500

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் ஹீரோ கனெக்ட் வசதியினை எக்ஸ்ட்ரீம் 160ஆர், எக்ஸ்பல்ஸ் 200, டெஸ்டினி 125, பிளஷர்+ மற்றும் பிளஷர்+ பிளாட்டினம் எடிசன் உள்ளிட்டவற்றில் வழங்குகிறது. இந்த இணைப்பு வசதி விரைவில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரிலும் கூடுதல் தேர்வாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Hero MotoCorp the world’s largest manufacturer of motorcycle and scooters, today launched the new Pleasure+ ‘XTec’.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X