விலையை அதிரடியாக உயர்த்தியது ஹீரோ... ஏன் இந்த உயர்வு, எவ்வளவு அதிகரிச்சிருக்கு? வாங்க பார்க்கலாம்!

ஹீரோ நிறுவனம் 2021 ஆம் ஆண்டின் புதிய விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. எந்ததெந்த வாகனத்தின் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை இப்பதிவில் காணலாம்.

விலையை அதிரடியாக உயர்த்தியது ஹீரோ... ஏன் இந்த உயர்வு, எவ்வளவு அதிகரிச்சிருக்கு? வாங்க பார்க்கலாம்!

உற்பத்தி செலவு உயர்ந்ததைக் காரணம் காட்டி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளின் விலையை உயர்த்த இருப்பதாக கடந்த வருடத்தின் இறுதியில் அறிவித்திருந்தன. இதன்படி 2021 ஜனவரி தொடங்கிய முதல் நாளில் இருந்து புதிய விலையிலே வாகனங்களை விற்கவும் ஆரம்பித்து விட்டன.

விலையை அதிரடியாக உயர்த்தியது ஹீரோ... ஏன் இந்த உயர்வு, எவ்வளவு அதிகரிச்சிருக்கு? வாங்க பார்க்கலாம்!

இந்நிலையில், இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ எவ்வளவு விலையுயர்வைச் செய்திருக்கின்றது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஹீரோ விற்பனைச் செய்து வரும் மேஸ்ட்ரோ எட்ஜ், டெஸ்டினி மற்றும் பிளஷர் ப்ளஸ் ஆகிய ஸ்கூட்டர்களின் புதிய விலைப் பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்கவிருக்கின்றோம்.

விலையை அதிரடியாக உயர்த்தியது ஹீரோ... ஏன் இந்த உயர்வு, எவ்வளவு அதிகரிச்சிருக்கு? வாங்க பார்க்கலாம்!

ஹீரோ நிறுவனம் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரை ஐந்து விதமான தேர்வில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதில், 110சிசி திறனில் விற்பனைக்குக் கிடைக்கும் விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகிய இரு தேர்வுகளின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கின்றன. 125 சிசி திறனில் விற்பனைக்குக் கிடைக்கும் டிரம், டிஸ்க், ஸ்டீல்த் ஆகியவற்றின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

விலையை அதிரடியாக உயர்த்தியது ஹீரோ... ஏன் இந்த உயர்வு, எவ்வளவு அதிகரிச்சிருக்கு? வாங்க பார்க்கலாம்!

புதிய விலை உயர்வினால் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ. 61,950 ஆக மாறியிருக்கின்றது. முன்னதாக இதன் ஆரம்ப விலை ரூ. 61,450 ஆக இருந்தது குறிப்பிடத்தகுந்தது. ஆக ரூ. 500 வரை விலையுயர்த்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதேபோன்று டெஸ்டினி ஸ்கூட்டரின் விலையும் உயர்த்தப்பட்டிருக்கின்றது.

விலையை அதிரடியாக உயர்த்தியது ஹீரோ... ஏன் இந்த உயர்வு, எவ்வளவு அதிகரிச்சிருக்கு? வாங்க பார்க்கலாம்!

இந்த ஸ்கூட்டரை இரு விதமான தேர்வில் மட்டுமே ஹீரோ விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதன் ஸ்டீல் மெடல் வீல் தேர்வு ரூ. 66,960 ஆக விலையுயர்ந்துள்ளது. இதன் முந்தைய விலை ரூ. 66,310 என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோன்று அலாய் வீல் டெஸ்டினி ஸ்கூட்டரின் விலையிலும் ரூ. 750 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், இதன் விலை தற்போது ரூ. 70,450 ஆக உயர்ந்திருக்கின்றது.

விலையை அதிரடியாக உயர்த்தியது ஹீரோ... ஏன் இந்த உயர்வு, எவ்வளவு அதிகரிச்சிருக்கு? வாங்க பார்க்கலாம்!

பிளஷர் ப்ளஸ் ஆரம்ப விலை ரூ. 57,300 ஆக உயர்ந்துள்ளது. ஹீரோ விற்பனைச் செய்து வரும் மலிவு விலை இருசக்கர வாகனங்களில் இதுவும் ஒன்றாகும். முன்னதாக இதன் விலை ரூ. 56,800 ஆக இருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதேபோன்று பிளஷர் ப்ளஸ் விஎக்ஸ் வேரியண்டின் விலை ரூ. 59,950 ஆகவும், பிளாட்டின் இசட்எக்ஸ் வேரியண்டின் விலை ரூ. 61,950 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

விலையை அதிரடியாக உயர்த்தியது ஹீரோ... ஏன் இந்த உயர்வு, எவ்வளவு அதிகரிச்சிருக்கு? வாங்க பார்க்கலாம்!

ஹீரோ நிறுவனம் ஏற்கனவே எக்ஸ்ட்ரீம் வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் டூ-வீலர் மற்றும் எக்ஸ்பல்ஸ் 200 ஆகிய பைக்குகளின் விலையையும் உயர்த்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தனது ஸ்கூட்டர்களின் விலையையும் ஹீரோ உயர்த்த்தியிருக்கின்றது.

விலையை அதிரடியாக உயர்த்தியது ஹீரோ... ஏன் இந்த உயர்வு, எவ்வளவு அதிகரிச்சிருக்கு? வாங்க பார்க்கலாம்!

ஹீரோவின் இந்த அதிரடி விலையுயர்விற்கு முன்னதாக நாம் கூறியதைப் போலவே உற்பத்தி செலவு அதிகரித்தது மட்டுமே காரணம் என கூறப்படுகின்றது. இருப்பினும், இந்த திடீர் விலையுயர்வு ஹீரோ இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

விலையை அதிரடியாக உயர்த்தியது ஹீரோ... ஏன் இந்த உயர்வு, எவ்வளவு அதிகரிச்சிருக்கு? வாங்க பார்க்கலாம்!

விலை பட்டியல்:

மாடல் விலை
மேஸ்ட்ரோ எட்ஜ் 110 (VX) ₹61,950 (vs. ₹61,450)
மேஸ்ட்ரோ எட்ஜ் 110 (ZX) ₹63,450 (vs. ₹62,950)
மேஸ்ட்ரோ எட்ஜ் 125 (Drum) ₹69,250 (விலையில் மாற்றமில்லை)
மேஸ்ட்ரோ எட்ஜ் 125 (Disc) ₹71,450 (விலையில் மாற்றமில்லை)
மேஸ்ட்ரோ எட்ஜ் 125 (Disc) Stealth ₹72,950 (விலையில் மாற்றமில்லை)
டெஸ்டினி 125 (Sheet Metal Wheels) ₹66,960 (vs. ₹66,310)
டெஸ்டினி 125 (Alloy Wheels) ₹70,450 (vs. ₹69,700)
ப்ளஷர் ப்ளஸ் (LX) ₹57,300 (vs. ₹56,800)
ப்ளஷர் ப்ளஸ் (VX) ₹59,950 (vs. ₹58,950)
ப்ளஷர் ப்ளஸ் பிளாட்டினம் (ZX) ₹61,950 (vs. ₹60,950)
Most Read Articles

English summary
Hero Raises Prices For Maestro Edge, Destini 125 & Pleasure Plus Scooters. Read In Tamil.
Story first published: Tuesday, January 5, 2021, 10:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X