ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை இப்படி கூட மாற்றலாமா? நெட்டிசன்களின் கவனத்தை பெற்ற மாடிஃபை பைக்...!

கவர்ச்சிக்கரமான தோற்றத்திற்கு ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை மோட்டார்சைக்கிளை பற்றிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை இப்படி கூட மாற்றலாமா? நெட்டிசன்களின் கவனத்தை பெற்ற மாடிஃபை பைக்...!

ஸ்பிளெண்டர் பைக் மாடலே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அடையாளம் என்றால் அதில் மிகையில்லை. அந்த அளவிற்கு ஸ்பிளெண்டர் பைக்குகள் நமது இந்திய சந்தையில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை இப்படி கூட மாற்றலாமா? நெட்டிசன்களின் கவனத்தை பெற்ற மாடிஃபை பைக்...!

தற்போதைய கொரோனா சூழலுக்கு மத்தியிலும் ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தது 2 லட்ச ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் ஸ்பிளெண்டர் பைக்குகளை பார்க்காதவர்களே இருக்க மாட்டீர்கள் என்று தான் நினைக்கிறேன்.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை இப்படி கூட மாற்றலாமா? நெட்டிசன்களின் கவனத்தை பெற்ற மாடிஃபை பைக்...!

ஸ்பிளெண்டர் பைக்குகளின் பிரபலத்திற்கு காரணமே அவற்றின் அதிக மைலேஜ் ஆகும். ஏனெனில் இந்தியர்கள் பொதுவாகவே வாகனத்தை வாங்கும் போது அவை எவ்வளவு மைலேஜை தரக்கூடியவை என்பதையும் ஆராய்ந்து பார்ப்பர்.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை இப்படி கூட மாற்றலாமா? நெட்டிசன்களின் கவனத்தை பெற்ற மாடிஃபை பைக்...!

சரி செய்திக்குள் போவோம். ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் அதிகளவில் மாடிஃபை செய்யப்படுவதில்லை. மாடிஃபை செய்யப்பட்ட ஸ்பிளெண்டர் பைக்குகளை மிகவும் குறைவாகவே பார்த்துள்ளோம். அவ்வாறு மாற்றப்பட்ட ஸ்பிளெண்டர் பைக்குகளில் பெரும்பான்மையானவை கேஃப் ரேஸர் தோற்றத்திற்கு மாற்றப்பட்டவையே ஆகும்.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை இப்படி கூட மாற்றலாமா? நெட்டிசன்களின் கவனத்தை பெற்ற மாடிஃபை பைக்...!

அவற்றின் தொடர்ச்சியாக அத்தகைய கேஃப் ரேஸர் தோற்றத்திற்கு மாற்றப்பட்ட ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் ஒன்றின் படம் நிகில்.கஸ்டம்.மோட்டார்சைக்கிள் (NIKHIL.CUSTOM.MOTORCYCLE) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை இப்படி கூட மாற்றலாமா? நெட்டிசன்களின் கவனத்தை பெற்ற மாடிஃபை பைக்...!

நிகில் கஸ்டம்ஸ், ராஜஸ்தானில் ஜோத்பூர் நகரில் பைக் மாடிஃபிகேஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த படங்களில் இருப்பது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் என்பதை பலரால் நம்பவே முடியாது. ஏனெனில் அந்த அளவிற்கு மாடிஃபை பணிகள் மிகவும் நேர்த்தியாகவும், நம்ப முடியாத அளவிலும் உள்ளன.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை இப்படி கூட மாற்றலாமா? நெட்டிசன்களின் கவனத்தை பெற்ற மாடிஃபை பைக்...!

பைக்கில் கிட்டத்தட்ட அனைத்து பாகங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. ஸ்பிளெண்டரில் ஹீரோ நிறுவனம் வழங்கும் என்ஜின் மட்டுமே அப்படியே தொடரப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும் ஹெட்லைட்டில் 'X' வடிவில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை இப்படி கூட மாற்றலாமா? நெட்டிசன்களின் கவனத்தை பெற்ற மாடிஃபை பைக்...!

பின்பக்கத்தில் முற்றிலுமாக மட்கார்ட் இல்லை. முன்பக்கத்தில் புதிய ஒன்று சிறிய அளவில், கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது போல் தென்படுகிறது. அதேபோல் வழக்கமான டயர்கள் நீக்கப்பட்டு அவற்றிற்கு மாற்றாக அகலமான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை இப்படி கூட மாற்றலாமா? நெட்டிசன்களின் கவனத்தை பெற்ற மாடிஃபை பைக்...!

சில்வர் நிற பெட்ரோல் டேங்க், "கஸ்டம் எடிசன் கேஃப் ரேஸர்" என்கிற ஸ்டிக்கரை கொண்டுள்ளது. இரண்டு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பு ஒற்றை துண்டாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த மாடிஃபை ஸ்பிளெண்டரில் ஒரே ஒரு நபர் மட்டுமே அமர முடியும்.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை இப்படி கூட மாற்றலாமா? நெட்டிசன்களின் கவனத்தை பெற்ற மாடிஃபை பைக்...!

பைக்கில் மற்றொரு முக்கியமான மாற்றமாக புதிய ஹேண்டில்பார் பொருத்தப்பட்டுள்ளது. இதுவே பைக்கிற்கு கேஃப் ரேஸர் தோற்றத்தை வழங்குகிறது. இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் பைக்கின் வேகத்தை தவிர்த்து வேறெதையும் அறிய முடியாது. எக்ஸாஸ்ட் சிஸ்டம் புதியதாக சிறிய அளவில் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Hero Splendor Modified as a Modern Cafe Racer will Leave you Spellbound.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X