ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் ஸ்பெஷல் எடிசன்!! சும்மா நச்சுனு இருக்கு.. விவரிக்கும் வீடியோ இதோ!

இருசக்கர வாகன தயாரிப்பில் 100 மில்லியனை கடந்ததை கொண்டாடும் விதமாக ஹீரோ நிறுவனம் கொண்டுவந்துள்ள ஸ்பிளெண்டர் ப்ளஸ் ஸ்பெஷல் எடிசனை விளக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் ஸ்பெஷல் எடிசன்!! சும்மா நச்சுனு இருக்கு.. விவரிக்கும் வீடியோ இதோ!

ஹீரோ மோட்டோகார்ப் சமீபத்தில் இருசக்கர வாகன தயாரிப்பில் 100 மில்லியன் என்ற மைல்கல்லை கடந்திருந்தது. இந்த மைல்கல்லை இந்தியாவில் கடக்கும் முதலாவது நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் ஆகும்.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் ஸ்பெஷல் எடிசன்!! சும்மா நச்சுனு இருக்கு.. விவரிக்கும் வீடியோ இதோ!

இதனை கொண்டாடும் வகையில் 100 மில்லியன் எடிசன்களை இந்த நிறுவனம் அதன் விற்பனை மாடல்களில் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வகையில் விற்பனைக்கு வரவுள்ள ஹீரோவின் பிரதான தயாரிப்பான ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கின் 100 மில்லியன் எடிசனை பற்றிய விபரங்களை விவரிக்கும் வீடியோ கன்ஸ்யூமர் ஏபிஎஸ் என்ற யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்ற பைக்கின் பெட்ரோல் டேங்கில் வழங்கப்பட்டுள்ள கிராஃபிக்ஸ், ஹெட்லைட் கௌல் மற்றும் மைய பேனல் உள்ளிட்டவற்றை தெளிவாக பார்க்க முடிகிறது. ‘100 மில்லியன்' என்ற பிரத்யேகமான முத்திரை பெட்ரோல் டேங்கில் பொருத்தப்பட்டுள்ளது.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் ஸ்பெஷல் எடிசன்!! சும்மா நச்சுனு இருக்கு.. விவரிக்கும் வீடியோ இதோ!

அதேபோல் இந்த முத்திரையை இரு-நிற இருக்கை அமைப்பிலும் பார்க்க முடிகிறது. அலாய் சக்கரங்கள், என்ஜின், முன்பக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டூல் பாக்ஸ், ஸ்விங்கார்ம்ஸ் மற்றும் செயின் கவர் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் ஸ்பெஷல் எடிசன்!! சும்மா நச்சுனு இருக்கு.. விவரிக்கும் வீடியோ இதோ!

என்ஜின் பாதுகாப்பான், ஹேண்டில்பார், எக்ஸாஸ்ட் பாதுகாப்பான் மற்றும் பின்பக்கத்தில் பொருட்களை வைப்பதற்கான பெட்டகம் போன்றவை க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. மற்றப்படி என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் ஸ்பெஷல் எடிசன்!! சும்மா நச்சுனு இருக்கு.. விவரிக்கும் வீடியோ இதோ!

இதனால் வழக்கமாக ஸ்பிளெண்டர் ப்ளஸ் 100 பைக்கில் வழங்கப்படும் அதே 97.2சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் இந்த ஸ்பெஷல் எடிசனிலும் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்பிளெண்டரின் என்ஜினில் எரிபொருள் திறனை அதிகரிக்கவும், மாசு உமிழ்வை குறைக்கவும் ஐ3எஸ் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழிற்நுட்ப வசதியை ஹீரோ நிறுவனம் வழங்கி வருகிறது.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் ஸ்பெஷல் எடிசன்!! சும்மா நச்சுனு இருக்கு.. விவரிக்கும் வீடியோ இதோ!

ட்ரான்ஸ்மிஷன் பணியை கவனிக்க 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஸ்பிளெண்டர் பைக்கில் டிஸ்க் ப்ரேக்குகள் வழங்கப்படாததால் இந்த ஸ்பெஷல் எடிசனிலும் அது இல்லை. வழக்கமான ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.61,785ல் இருந்து ரூ.65,295 வரையில் உள்ளன.

Most Read Articles

English summary
Hero Splendor Plus 100 Million Edition Detailed In A Walkaround Video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X