அதிக திறன் வெளிப்பாடு வசதி உடன் Hero XPulse 200 4V பைக் அறிமுகம்! என்ன விலையில் வந்திருக்கு தெரியுமா?

Hero XPulse 200 4V இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இப்புதிய பைக்கின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

6 மடங்கு அதிக திறன் வெளிப்பாடு வசதி உடன் Hero XPulse 200 4V பைக் அறிமுகம்! என்ன விலையில் வந்திருக்கு தெரியுமா?

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), அதன் எக்ஸ்பல்ஸ் 200 4வி (XPulse 200 4V) பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இப்பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 1.28 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

6 மடங்கு அதிக திறன் வெளிப்பாடு வசதி உடன் Hero XPulse 200 4V பைக் அறிமுகம்! என்ன விலையில் வந்திருக்கு தெரியுமா?

4வி என்பது பைக்கில் புதிய 4 வால்வு எஞ்ஜினைப் பயன்படுத்தியிருப்பதை குறிக்கிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இப்புதிய எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கில் பல்வேறு புதிய அம்சங்களை அப்டேட்டின் வாயிலாக சேர்த்திருக்கின்றது. அதில் ஒன்றே பைக்கின் எஞ்ஜினில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் 4 வால்வு தொழில்நுட்பம்.

6 மடங்கு அதிக திறன் வெளிப்பாடு வசதி உடன் Hero XPulse 200 4V பைக் அறிமுகம்! என்ன விலையில் வந்திருக்கு தெரியுமா?

இந்த புதிய தொழில்நுட்ப சேர்ப்பினால் எஞ்ஜின் திறனில் லேசான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 199.6 சிசி சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு, 4 வால்வு எஞ்ஜினானது அதிகபட்சமாக 18.8 பிஎச்பி திறனை 8,500 ஆர்பிஎம்மிலும், 17.35 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

6 மடங்கு அதிக திறன் வெளிப்பாடு வசதி உடன் Hero XPulse 200 4V பைக் அறிமுகம்! என்ன விலையில் வந்திருக்கு தெரியுமா?

ஆனால், இதே எஞ்ஜின் இரட்டை வால்வு தொழில்நுட்பத்துடன் பயன்பாட்டிற்கு கிடைத்த போது 17.8 பிஎச்பியையும், 16.45 என்எம் டார்க்கை மட்டுமே வெளியேற்றியது. இதைவிட கணிசமான அதிக பவரையும், டார்க் திறனையும் வெளியேற்றக் கூடியதாக புதிய 4 வால்வு எஞ்ஜின் கொண்ட எக்ஸ்பல்ஸ் 200 4வி காட்சியளிக்கின்றது.

6 மடங்கு அதிக திறன் வெளிப்பாடு வசதி உடன் Hero XPulse 200 4V பைக் அறிமுகம்! என்ன விலையில் வந்திருக்கு தெரியுமா?

இத்தகைய அம்சத்தின் காரணத்தினால்தான் முந்தைய மாடலைக் காட்டிலும் இது 5 ஆயிரம் ரூபாய் அதிக விலைக் கொண்டதாக தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதேபோல் பைக்கின் கூலிங் சிஸ்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. 7 ஃபின் ஆயில் கூலர் சிறந்த வெப்ப வெளியேற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

6 மடங்கு அதிக திறன் வெளிப்பாடு வசதி உடன் Hero XPulse 200 4V பைக் அறிமுகம்! என்ன விலையில் வந்திருக்கு தெரியுமா?

மேலும், இதன் கியர்பாக்ஸின் ரேசியோக்களிலும் ஹீரோ நிறுவனம் லேசான மாற்றங்களைப் புகுத்தியுள்ளது. சிறந்த ஆக்சலரேஷன் மற்றும் டிராக்டபிளிட்டியை வழங்கும் நோக்கில் இந்த மாற்றத்தை நிறுவனம் செய்திருக்கின்றது. இத்துடன், அதிக அதிர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளையும் நிறுவனம் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

6 மடங்கு அதிக திறன் வெளிப்பாடு வசதி உடன் Hero XPulse 200 4V பைக் அறிமுகம்! என்ன விலையில் வந்திருக்கு தெரியுமா?

ஆகையால், மலிவான விலையில் அதிக சிறப்பு வசதிகளைக் கொண்ட ஓர் பைக்காக புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக் மாறியிருக்கின்றது. புதிய மாற்றங்கள் அட்வென்சர் பயணங்களுக்கு இன்னும் பல மடங்கு ஏற்ற வாகனமாக புதிய எக்ஸ்பல்ஸ் 200 4வி மாறியிருக்கின்றது.

6 மடங்கு அதிக திறன் வெளிப்பாடு வசதி உடன் Hero XPulse 200 4V பைக் அறிமுகம்! என்ன விலையில் வந்திருக்கு தெரியுமா?

மேலும், பைக்கில் இடம் பெற்றிருக்கும் ஸ்விட்ச்கியரில் ஸ்டார்டர் மற்றும் எஞ்ஜின் கட்-ஆஃப் ஸ்விட்ச் ஆகியவை புதியதாக சேர்க்கப்பட்டிருக்கின்றது. அப்டேட்டின் வாயிலாக நிறுவனம் வழங்கியிருக்கும் மேலும் ஒரு சிறப்பம்சம் இதுவாகும். இவற்றை தவிர வேறு எந்த மாற்றத்தையும் ஹீரோ நிறுவனம் இப்பைக்கில் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

6 மடங்கு அதிக திறன் வெளிப்பாடு வசதி உடன் Hero XPulse 200 4V பைக் அறிமுகம்! என்ன விலையில் வந்திருக்கு தெரியுமா?

எல்இடி மின் விளக்குகள், ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் அப்படியே புதுப்பிக்கப்பட்ட ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன. மேலும், இப்பைக்கை ரேலி கிட் வசதியுடனும் ஹீரோ விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

6 மடங்கு அதிக திறன் வெளிப்பாடு வசதி உடன் Hero XPulse 200 4V பைக் அறிமுகம்! என்ன விலையில் வந்திருக்கு தெரியுமா?

இத்தகைய கிட்டைப் பெறும் எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கை சாலையில் வைத்து இயக்க எந்த தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. எஃப்எம்எஸ்சிஐ (FMSCI) சான்று இதற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், எந்த தடையும் இன்றி இதனை சாலையில் வைத்து இயக்கலாம்.

6 மடங்கு அதிக திறன் வெளிப்பாடு வசதி உடன் Hero XPulse 200 4V பைக் அறிமுகம்! என்ன விலையில் வந்திருக்கு தெரியுமா?

ஹீரோ மோட்டோகார்ப் மூன்று விதமான நிற தேர்வுகளில் மட்டுமே இப்புதிய எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கை விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. டிரையல் நீலம், பிளிட்ஸ் நீலம் மற்றும் சிவப்பு ரைடு ஆகிய நிற தேர்வுகளிலேயே பைக் கிடைக்க இருக்கின்றது.

Most Read Articles
English summary
Hero xpulse 200 4v launched in india at rs 1 28 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X