விற்பனைக்கு வந்திறங்கியது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்பெஷல் எடிசன்!! குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை..

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 100வது மில்லியன் ஸ்பெஷல் எடிசன் பைக் டீலர் ஷோரூம் ஒன்றை வந்தடைந்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனைக்கு வந்திறங்கியது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்பெஷல் எடிசன்!! குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை..

இருசக்கர வாகன தயாரிப்பில் 100 மில்லியனை கடந்ததை இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் விமர்சையாக கொண்டாடி வருகிறது.

விற்பனைக்கு வந்திறங்கியது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்பெஷல் எடிசன்!! குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை..

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சில தயாரிப்பு மாடல்களின் புதிய 100வது மில்லியன் எடிசனை லிமிடெட் எடிசனாக இந்த நிறுவனம் விற்பனை கொண்டுவந்துள்ளது. இதன்படி டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வந்த ஸ்பிளெண்டர் 100வது மில்லியன் எடிசனை பற்றி சமீபத்தில் பார்த்திருந்தோம்.

விற்பனைக்கு வந்திறங்கியது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்பெஷல் எடிசன்!! குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை..

இந்த வகையில் தற்போது ஹீரோவின் ப்ரீமியம் மோட்டார்சைக்கிளான எக்ஸ்ட்ரீம் 160ஆர்-இன் இந்த ஸ்பெஷல் எடிசன் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றிற்கு விற்பனைக்காக வந்திறங்கியுள்ளது. மோட்டோஎக்ஸ்பெர்ட் கான் என்ற யுடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ள இதுகுறித்த வீடியோவில் பைக் புதிய பெயிண்ட் மற்றும் கிராஃபிக்ஸ்களை வழக்கமான எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கில் இருந்து வேறுப்படுவதற்காக பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது.

இருப்பினும் இந்த பிரத்யேக பெயிண்ட்டிலும் எக்ஸ்ட்ரீம் 160ஆர்-இன் சிவப்பு-வெள்ளை நிறங்கள் தான் உள்ளன. ஆனால் இதில் சிவப்பு நிறம் சற்று அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. பைக்கின் முன்பக்க ஃபெண்டர், ஹெட்லேம்ப்பின் மாஸ்க், எரிபொருள் டேங்க்கின் நீட்டிப்புகள் மற்றும் பக்கவாட்டு பேனல்கள் உள்ளிட்டவை ஸ்போர்டியான தோற்றத்திற்காக சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

விற்பனைக்கு வந்திறங்கியது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்பெஷல் எடிசன்!! குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை..

வெள்ளை நிறம் பெட்ரோல் டேங்கின் மீதி பாதிக்கும், அதே டேங்கில் உள்ள ‘Xtream' என்ற ஸ்டிக்கரிலும், பின் சக்கரத்திற்கு மேற்பகுதியிலும் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான லோகோ ஸ்டிக்கர்களுடன், 100வது மில்லியன் எடிசன் என்ற ஸ்டிக்கரையும் தயாரிப்பு நிறுவனம் புதியதாக இந்த ஸ்பெஷல் எடிசனில் வழங்கியுள்ளது.

விற்பனைக்கு வந்திறங்கியது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்பெஷல் எடிசன்!! குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை..

இவ்வாறு பெயிண்ட் மற்றும் கிராஃபிக்ஸில் சில மாறுபாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர்த்து, பைக்கின் மற்ற அம்சங்களில் எந்த அப்கிரேடும் இல்லை. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கில் ஹெட்லேம்ப் & இண்டிகேட்டர்கள் எல்இடி தரத்திலும், பின்பக்க எல்இடி ஹெட்லைட் 'H' வடிவத்திலும் வழங்கப்படுகிறது.

விற்பனைக்கு வந்திறங்கியது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்பெஷல் எடிசன்!! குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை..

இவற்றுடன் டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஹசார்ட் விளக்குகள், சைடு ஸ்டாண்ட் என்ஜின் கட்-ஆஃப், என்ஜின் -கியர்பாக்ஸ் அசெம்பிள், கிக் ஸ்டார்ட், ஃபுட்பெக்ஸ் மற்றும் அலாய் சக்கரங்களையும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் பெறுகிறது.

விற்பனைக்கு வந்திறங்கியது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்பெஷல் எடிசன்!! குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை..

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 163சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜினை 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் பெறும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் சிங்கிள்-டிஸ்க், டபுள்-டிஸ்க் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலைகளை காட்டிலும் ரூ.2 ஆயிரம் அதிகமாக இந்த லிமிடெட் எடிசனின் விலை ரூ.1,08,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Hero Xtreme 160R 100 Million Edition Reach Dealer Showroom.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X