புதிய பைக்கின் பக்கம் மக்களை ஈர்க்க டீசர் வீடியோ வெளியீடு! விரைவில் அறிமுகமாக உள்ள பைக்கிற்காக Hero அதிரடி!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் 'எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்டீல்த்' எடிசன் (Xtreme 160R Stealth Edition) பைக்கிற்காக ஓர் டீசர் வீடியோவை வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

புதிய பைக்கின் பக்கம் மக்களை ஈர்க்க டீசர் வீடியோ வெளியீடு! விரைவில் அறிமுகமாக உள்ள பைக்கிற்காக Hero அதிரடி!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் மிக விரைவில் அதன் புதுமுக 'எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்டீல்த்' எடிசன் (Xtreme 160R Stealth Edition) பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் அறிமுகத்திற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கின்றன.

இந்த நிலையில் இருசக்கர வாகனம்குறித்த ஓர் டீசர் வீடியோவை தயாரிப்பாளர் வெளியிட்டிருக்கின்றார். இதையே நீங்கள் மேலே பார்த்தீர்கள். இருசக்கர வாகன பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இந்த டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டீல்த் எடிசன் மிக விரைவில் வரும் என்பதை குறிக்கும் வகையில் 'ஸ்டீல்த் மோட் கமிங் சூன்' (Stealth Mode, Coming Soon) என்ற பதிவின்கீழ் புதிய டீசர் வீடியோவை ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டிருக்கின்றது. இவ்வீடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

புதிய பைக்கின் பக்கம் மக்களை ஈர்க்க டீசர் வீடியோ வெளியீடு! விரைவில் அறிமுகமாக உள்ள பைக்கிற்காக Hero அதிரடி!

இணையத்தின் வாயிலாக வெளியாகியிருக்கும் இந்த வீடியோவில், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்டீல்த் எடிசன் பைக்கின் முகப்பு பகுதி முழுமையாகவும், தெளிவாகவும் காட்சியளித்திருக்கின்றது. எல்இடி ஹெட்லைட், இன்டிகேட்டர் ஆகியவை மிகவும் துள்ளியமாக வீடியோவில் காட்டப்பட்டிருக்கின்றன. இத்துடன், ப்யூவல் டேங்கில் கட்டுமஸ்தான பாடி பேனல்கள் பயன்படுத்தப்பட இருப்பதையும் இவ்வீடியோ உறுதிப்படுத்தியுள்ளது.

புதிய பைக்கின் பக்கம் மக்களை ஈர்க்க டீசர் வீடியோ வெளியீடு! விரைவில் அறிமுகமாக உள்ள பைக்கிற்காக Hero அதிரடி!

தொடர்ந்து, புதிய கட்டுமஸ்தான முன் பக்க உடல் தோற்றத்தை புதிய ஸ்டீல்த் எடிசன் பெற்றிருப்பதை இவ்வீடியோ உறுதிப்படுத்தியுள்ளது. ஆம், வழக்கமான எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் மாடலைக் காட்டிலும் ஸ்டீல்த் எடிசன் பல்வேறு அலங்கார உடல் கூறுகளைப் பெற்றிருக்கின்றது.

புதிய பைக்கின் பக்கம் மக்களை ஈர்க்க டீசர் வீடியோ வெளியீடு! விரைவில் அறிமுகமாக உள்ள பைக்கிற்காக Hero அதிரடி!

மேலும், பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளையும் அது பெற்றிருக்கின்றது. அந்தவகையில், ப்ளூடூத் இணைப்பு வசதி, எஸ்எம்எஸ் அலர்ட், திருப்பத்திற்கு திருப்பம் தகவல் வழங்கக் கூடிய 'டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன்' வசதி என எக்கசக்க சிறப்பு வசதிகள் எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்டீல்த் எடிசனில் வழங்கப்பட்டிருக்கின்றன.

புதிய பைக்கின் பக்கம் மக்களை ஈர்க்க டீசர் வீடியோ வெளியீடு! விரைவில் அறிமுகமாக உள்ள பைக்கிற்காக Hero அதிரடி!

அதிக தொழில்நுட்ப வசதிகளை விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் இத்தகைய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலே பார்த்தது மட்டுமின்றி இன்னும் பல சிறப்பு வசதிகளை ஸ்டீல்த் எடிசன் எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கில் ஹீரோ வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பைக்கின் பக்கம் மக்களை ஈர்க்க டீசர் வீடியோ வெளியீடு! விரைவில் அறிமுகமாக உள்ள பைக்கிற்காக Hero அதிரடி!

இப்பைக்கை மிக விரைவில், வரும் தீபாவளிக்குள் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனம், மிக சமீபத்தில் எக்ஸ்பல்ஸ் 200 4வி எனும் புதிய பைக் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

புதிய பைக்கின் பக்கம் மக்களை ஈர்க்க டீசர் வீடியோ வெளியீடு! விரைவில் அறிமுகமாக உள்ள பைக்கிற்காக Hero அதிரடி!

இதற்கு அடுத்தபடியாக இன்னும் சில தயாரிப்புகளை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. அதனடிப்படையில், எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கிற்கு அடுத்தபடியாக புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்டீல்த் அறிமுகம் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய பைக்கின் பக்கம் மக்களை ஈர்க்க டீசர் வீடியோ வெளியீடு! விரைவில் அறிமுகமாக உள்ள பைக்கிற்காக Hero அதிரடி!

ஸ்டீல்த் எடிசன் பதிப்பில் உடல் அலங்காரம் மற்றும் சிறப்பம்சங்கள் சேர்ப்பு ஆகிய பணிகள் மட்டுமே செய்யப்பட்டிருக்கின்றன. எஞ்ஜின் விஷயத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலை தென்படுகின்றது. எனவே வழக்கமான எக்ஸ்ட்ரீம் 160ஆர் மாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 163சிசி எஞ்ஜினே ஸ்டீல்த் எடிசனிலும் இடம் பெற்றிருக்கின்றது.

புதிய பைக்கின் பக்கம் மக்களை ஈர்க்க டீசர் வீடியோ வெளியீடு! விரைவில் அறிமுகமாக உள்ள பைக்கிற்காக Hero அதிரடி!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 15பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 14 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இது வெறும் 4.7 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இருசக்கர வாகனத்தின் ஒட்டுமொத்த எடை 139.5 கிலோவாகும். சிறந்த ஹேண்ட்லிங்கிற்கு இந்த குறைந்த எடை உதவியாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

Most Read Articles

English summary
Hero xtreme 160r stealth edition teaser video out here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X