Just In
- 3 hrs ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 4 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 5 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 5 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- News
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ரஜினியிடம் ஆணையம் கண்டிப்பாக விசாரிக்கும் - வக்கீல்
- Finance
இந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..?!
- Sports
அதிரடி சிக்ஸ் அடுத்த பந்தில் அவுட்.. கேப்டனுக்கு எதிராக தமிழக வீரர் செய்த செயல்..போட்டியின் ட்விஸ்ட்
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மிரட்டலான இரு பிரீமியம் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படத்திய ஹோண்டா... இதோட விலைய கேட்டா மயக்கமே போட்ருவீங்க!!
ஹோண்டா இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் அதன் பிரீமியம் தர சிபிஆர்650ஆர் மற்றும் சிபி650ஆர் மோட்டார்சைக்கிளை இந்திய வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, இந்தியாவில் இரு புதிய பிரீமியம் தர மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சிபி650ஆர் மற்றும் சிபிஆர்650ஆர் மோட்டார்சைக்கிளையே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இரண்டுமே பிரீமியம் தர மோட்டார்சைக்கிள் ஆகும். நாட்டில் விற்பனையில் கிடைக்கும் தனது பிரீமியம் தர மோட்டார்சைக்கிள்களின் வரிசையை விரிவாக்கம் செய்யும் வகையில் இப்பைக்குகளை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில், சிபிஆர்650ஆர் புதுப்பிக்கப்பட்ட மாடல் ஆகும். பழைய மாடலைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான வசதிகள் சிலவற்றை இப்பைக்கில் நிறுவனம் சேர்த்துள்ளது. இவ்விரு பைக்குகளையுமே சிகேடி (completely knocked down) வாயிலாகவே ஹோண்டா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

ஆகையால் இவற்றின் உச்சபட்ச நிலையில் காட்சியளிக்கின்றது. சிபி650ஆர் பைக்கிற்கு ரூ. 8.67 லட்சம் என்ற விலையையும், சிபிஆர்650ஆர் ரூ. 8.88 லட்சம் என்ற விலையையும் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த உச்சபட்ச விலையிலேயே பைக்குகள் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் இப்பைக்குகள் இந்தியர்களுக்காகவே பிரத்யேக புதுப்பித்தல்களைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, இளம் தலைமுறையினரை மனதில் வைத்து இந்த புதுப்பித்தல்கள் பணி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இதன் விளைவாக மிகவும் கவர்ச்சியான இருசக்கர வாகனங்களாக அவை மாறியிருக்கின்றன. இதுமட்டுமின்றி செயல்திறன்மிக்க 4 சிலிண்டர் எஞ்ஜின், எல்இடி மின் விளக்குகள், சிறந்த ஹேண்ட்லிங் வசதி என அனைத்தும் பார்த்து மெருகேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.

ஹோண்டா நிறுவனம் உலகின் மிக சிறந்த ஸ்போர்ட்ஸ், அட்வென்சர் மற்றும் ரோட்ஸ்டர் ரக வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றன. அந்தவகையில், தற்போது களமிறங்கியிருக்கும் இரு இரண்டு சக்கர வாகனங்களும் அதி-திறன் வாய்ந்த நியோ ஸ்போர்ட்ஸ் ரக வாகனங்களாக காட்சியளிக்கின்றன.

சிபி650ஆர் பைக்கில் இன்லைன் 4 சிலிண்டர், 16 வால்வ், டிஓஎச்சி எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 12 ஆயிரம் ஆர்பிஎம்மில் 84.6 பிஎச்பியையும், 8500 ஆர்பிஎம்மில் 57.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜினில் மற்றுமொரு சிறப்பு வசதியாக அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

இத்துடன், ஷோவா அப்சைடு டவுண் ஃபோர்க்கு மற்றும் மோனோஷாக் அப்சார்பர் உள்ளிட்டவை இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, சிறந்த பிரேக்கிங் வசதிக்காக இரு டிஸ்க் பிரேக் முன்பக்க வீலிலும், ஒற்றை டிஸ்க் பிரேக் பின்பக்க வீலிலும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற சிறப்பு வசதிகளையே மற்றுமொரு அறிமுகமான சிபிஆர்650 ஆர் பைக்கிலும் இடம்பெற்றிருக்கின்றன.