விற்பனையில் மாபெரும் சாதனை... Activa இல்லைனா இந்த நிலைமைக்கு Honda போயிருக்குமா தெரியல!

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனையில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதுகுறித்த முழுமையான விபரத்தை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

விற்பனையில் மாபெரும் சாதனை... Activa இல்லைனா இந்த நிலைமைக்கு Honda போயிருக்குமா தெரியல!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா இந்தியாவில் விற்பனையில் புதிய சாதனையைப் படைத்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 5 கோடி (50 மில்லியன்) யூனிட் விற்பனை என்ற புதிய சாதனை மைல் கல்லை ஹோண்டா நிறுவனம் எட்டியிருக்கின்றது.

விற்பனையில் மாபெரும் சாதனை... Activa இல்லைனா இந்த நிலைமைக்கு Honda போயிருக்குமா தெரியல!

இந்நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திடம் இருந்து பிரிந்து, கடந்த 2001ம் ஆண்டில் இருந்து தனியாக இயங்கி வருகின்றது. ஹீரோவை விட்டு பிரிந்தாலும் இந்த ஜப்பானிய நிறுவனத்தின் தயாரிப்பிற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வரவேற்பு பல ஆண்டுகள் கடந்து தற்போதும் நீடித்து வருகின்றது.

விற்பனையில் மாபெரும் சாதனை... Activa இல்லைனா இந்த நிலைமைக்கு Honda போயிருக்குமா தெரியல!

இதன் விளைவாகவே நிறுவனம் தற்போது 5 மில்லியன் விற்பனை என்ற சாதனை மைல் கல்லை எட்டியிருக்கின்றது. ஹோண்டா நிறுவனம் பன்முக தேர்வுகளில் தனது இருசக்கர வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அதில், நிறுவனத்தின் மிக முக்கியமான இருசக்கர வாகன மாடலாக ஆக்டிவா காட்சியளிக்கிறது.

விற்பனையில் மாபெரும் சாதனை... Activa இல்லைனா இந்த நிலைமைக்கு Honda போயிருக்குமா தெரியல!

இந்த ஸ்கூட்டர் இந்தியர்களின் மிகவும் பிரியமான டூ வீலராக காட்சியளிக்கின்றது. நாட்டில் ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகன மாடல்களில் முன்னணி இடத்தைப் பிடிக்கும் டூ வீலராக ஆக்டிவா இருக்கிறது. ஹோண்டா ஆக்டிவா தற்போது இந்திய சந்தையில் 6 ஜி மற்றும் 125 சிசி எஞ்ஜின் ஆகிய இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

விற்பனையில் மாபெரும் சாதனை... Activa இல்லைனா இந்த நிலைமைக்கு Honda போயிருக்குமா தெரியல!

சிபி ஷைன், டியோ, கிரேசியா, யுனிகார்ன், ட்ரீம், சிபி350 உள்ளிட்டவையும் நிறுவனத்தின் முக்கியமான இருசக்கர வாகன மாடல்களாக உள்ளன. இதில், ஆக்டிவை அடுத்து டியோ மற்றும் கிரேசியா ஆகிய ஸ்கூட்டர்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

விற்பனையில் மாபெரும் சாதனை... Activa இல்லைனா இந்த நிலைமைக்கு Honda போயிருக்குமா தெரியல!

குறிப்பாக, டியோ ஸ்கூட்டருக்கு இளசுகள் மத்தியில் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. இந்த ஸ்கூட்டர் நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. டியோ, டியோ டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டியோ 3டி எம்பளம் மற்றும் டிஜிட்டல் மீட்டர் மற்றும் 3 டி எம்பளம் ஆகிய ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

விற்பனையில் மாபெரும் சாதனை... Activa இல்லைனா இந்த நிலைமைக்கு Honda போயிருக்குமா தெரியல!

ஆக்டிவா ஸ்கூட்டர் ஹோண்டா நிறுவனத்தையே தூக்கி நிறுத்தும் வகையில் விற்பனையைப் பெற்று வருகின்றது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் 2,40,659 யூனிட்கள் வரை ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையாகியதாக நிறுவனம் அறிவித்தது. இது நிறுவனத்தின் கடந்த ஒட்டுமொத்த விற்பனையில் பாதியளவு விற்பனைக்குச் சமம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

விற்பனையில் மாபெரும் சாதனை... Activa இல்லைனா இந்த நிலைமைக்கு Honda போயிருக்குமா தெரியல!

ஆம், ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 4,01,479 யூனிட் இருசக்கர வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்திருக்கின்றது. இதில், வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவையின் எண்ணிக்கை 31,114 யூனிட்கள் ஆகும்.

விற்பனையில் மாபெரும் சாதனை... Activa இல்லைனா இந்த நிலைமைக்கு Honda போயிருக்குமா தெரியல!

தற்போது இந்தியர்கள் மத்தியில் ஹோண்டா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஹைனெஸ் 350 பைக்கிற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் இந்த பைக் ஒட்டுமொத்தமாக 1,047 யூனிட் விற்பனைச் செய்யப்பட்டிருக்கின்றது. இவ்வாறு கிடைத்து வரும் தொடர் நல் வரவேற்பின் காரணத்தினாலேயே தற்போது ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் 50 மில்லியன் விற்பனை மைல் கல்லை எட்டி இருக்கின்றது.

விற்பனையில் மாபெரும் சாதனை... Activa இல்லைனா இந்த நிலைமைக்கு Honda போயிருக்குமா தெரியல!

ஹோண்டா நிறுவனம் அதன் முதல் வாகன உற்பத்தி ஆலையை 1999ம் ஆண்டு மனேசார் பகுதியில் அமைத்தது. இங்கு வைத்தே நிறுவனத்தின் பிரபல இருசக்கர வாகனமான ஆக்டிவா உருவாக்கப்பட்டு 2002ம் ஆண்டு வெளியீடு செய்யப்பட்டது. ஆக்டிவாவை அடுத்து 2002ம் ஆண்டில் யுனிகார்ன் பைக்கும், 2006ம் ஆண்டில் ஷைன் பைக்கும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Hmsi two wheeler sales cross 50 million milestone in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X