ஹோண்டாவின் இந்த லக்சரி பைக்கிற்கு இவ்வளவு ரசிகர்களா! பிஎஸ்6 கோல்டு விங் டூரின் முதல் தொகுப்பு விற்று தீர்ந்தது

சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிஎஸ்6 ஹோண்டா கோல்டு விங் டூர் பைக்குகளின் முதல் தொகுப்பு முற்றிலுமாக விற்று தீர்ந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டாவின் இந்த லக்சரி பைக்கிற்கு இவ்வளவு ரசிகர்களா! பிஎஸ்6 கோல்டு விங் டூரின் முதல் தொகுப்பு விற்று தீர்ந்தது

பிஎஸ்6-க்கு இணக்கமானதாக மாற்றப்பட்ட புதிய கோல்டு விங் டூர் பைக் கடந்த ஜூன் 16ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜப்பானிய ஹோண்டா 2வீலர்ஸ் நிறுவனத்தின் லக்சரி தொலைத்தூர மோட்டார்சைக்கிளாக இது விளங்குகிறது.

ஹோண்டாவின் இந்த லக்சரி பைக்கிற்கு இவ்வளவு ரசிகர்களா! பிஎஸ்6 கோல்டு விங் டூரின் முதல் தொகுப்பு விற்று தீர்ந்தது

இதன் புதிய பிஎஸ்6 வெர்சனின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.37,20,342 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பிஎஸ்6 கோல்டு விங் டூரின் மேனுவல் வேரியண்ட்டின் விலையாகும். இதன் டிசிடி மாடலின் விலை ரூ.39,16,055 ஆக உள்ளது.

ஹோண்டாவின் இந்த லக்சரி பைக்கிற்கு இவ்வளவு ரசிகர்களா! பிஎஸ்6 கோல்டு விங் டூரின் முதல் தொகுப்பு விற்று தீர்ந்தது

இந்த சொகுசு தொலைத்தூர பைக்கிற்கான முன்பதிவுகளை சமீபத்தில் ஹோண்டா நிறுவனம் துவங்கியது. எதிர்பார்த்தை காட்டிலும் வேகமாக நடைபெற்ற முன்பதிவுகள் துவங்கிய 24 மணிநேரத்திற்குள் நிறைவு பெற்றுள்ளது. அதாவது முதல் தொகுப்பில் நிர்ணயிக்கப்பட்ட பிஎஸ்6 கோல்டு விங் டூர் பைக்குகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஹோண்டாவின் இந்த லக்சரி பைக்கிற்கு இவ்வளவு ரசிகர்களா! பிஎஸ்6 கோல்டு விங் டூரின் முதல் தொகுப்பு விற்று தீர்ந்தது

ஆனால் மொத்தமாக எத்தனை யூனிட்கள் வாடிக்கையாளர்களால் புக் செய்யப்பட்டுள்ளன என்ற விபரத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. புதிய ஹோண்டா கோல்டு விங் டூர் மேனுவல் வேரியண்ட்டிற்கு பளபளப்பான முத்தின் வெள்ளை நிறத்தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

ஹோண்டாவின் இந்த லக்சரி பைக்கிற்கு இவ்வளவு ரசிகர்களா! பிஎஸ்6 கோல்டு விங் டூரின் முதல் தொகுப்பு விற்று தீர்ந்தது

அதேநேரம் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை கன்மெட்டல் கருப்பு மெட்டாலிக் உடன் மேட் மோரியன் கருப்பு நிறத்தில் வாங்கலாம். இந்த 2021 ஹோண்டா லக்சரி பைக்கில் 7-இன்ச் டிஎஃப்டி-திரை, சுழிதிசைக்காட்டி நாவிகேஷன், ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ சிறப்பம்சங்களாக வழங்கப்படுகிறது.

ஹோண்டாவின் இந்த லக்சரி பைக்கிற்கு இவ்வளவு ரசிகர்களா! பிஎஸ்6 கோல்டு விங் டூரின் முதல் தொகுப்பு விற்று தீர்ந்தது

இவற்றுடன் ஸ்மார்ட் கீ செயல்பாடு மற்றும் அப்கிரேட் செய்யப்பட்ட ஆடியோ & ஸ்பீக்கர் சிஸ்டத்தை பெறும் இந்த சூப்பர் லக்சரி பைக்கில் டூர், ஸ்போர்ட், எகான் மற்றும் மழை என்ற நான்கு விதமான டிரைவிங் மோட்கள் வழங்கபட்டுள்ளன.

ஹோண்டாவின் இந்த லக்சரி பைக்கிற்கு இவ்வளவு ரசிகர்களா! பிஎஸ்6 கோல்டு விங் டூரின் முதல் தொகுப்பு விற்று தீர்ந்தது

டிரைவிங் மோட்களுடன் ஹில் ஸ்டார்ட் உதவி, ஹோண்டா தேர்ந்தெடுக்கக்கூடிய டார்க் கண்ட்ரோல், இரட்டை ப்ரேக் சிஸ்டம் மற்றும் ஐடியலிங் நிறுத்து (டிசிடி வேரியண்ட்டிற்கு மட்டும்) உள்ளிட்டவை அடங்கிய எலக்ட்ரானிக் ஓட்டுனர் உதவி தொகுப்பு கோல்டு விங் டூர் பைக்கில் வழங்கப்படுகிறது.

ஹோண்டாவின் இந்த லக்சரி பைக்கிற்கு இவ்வளவு ரசிகர்களா! பிஎஸ்6 கோல்டு விங் டூரின் முதல் தொகுப்பு விற்று தீர்ந்தது

இதன் பிஎஸ்6-க்கு இணக்கமான 1,833சிசி, தட்டையான-6 சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 5,500 ஆர்பிஎம்-இல் 124.7 பிஎச்பி மற்றும் 4,500 ஆர்பிஎம்-இல் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

Most Read Articles
English summary
Honda 2-wheelers sold out Gold Wing Tour in India. Find here all details in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X