பிரபலமான ஹோண்டா ஸ்கூட்டர்களின் விலைகள் உயர்ந்தன!! அச்சச்சோ டியோவின் விலையும் அதிகமாச்சா!

ஹோண்டா ஸ்கூட்டர்களின் விலைகள் 2021ஆம் ஆண்டில் முதன்முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரபலமான ஹோண்டா ஸ்கூட்டர்களின் விலைகள் உயர்ந்தன!! அச்சச்சோ டியோவின் விலையும் அதிகமாச்சா!

வருடந்தோறும் அதிகரித்துவரும் இரும்பு, பிளாஸ்டிக்ஸ் மற்றும் இதர பாகங்களின் விலைகளினால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் அவற்றின் விற்பனை வாகனங்களின் விலைகளை அதிகரிப்பது வழக்கம்.

பிரபலமான ஹோண்டா ஸ்கூட்டர்களின் விலைகள் உயர்ந்தன!! அச்சச்சோ டியோவின் விலையும் அதிகமாச்சா!

இதன்படி இந்த 2021ஆம் வருடத்தையும் சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விலை உயர்வுடன் துவங்கியுள்ளன. அத்தகைய நிறுவனங்களுள் ஒன்றாக விரைவில் தனது இருசக்கர வாகனங்களின் எக்ஸ்ஷோரூம் விலைகளை உயர்த்தவுள்ளதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்திருந்தது.

பிரபலமான ஹோண்டா ஸ்கூட்டர்களின் விலைகள் உயர்ந்தன!! அச்சச்சோ டியோவின் விலையும் அதிகமாச்சா!

அதன்படி தற்போது ஹோண்டா நிறுவனம் அதன் ஸ்கூட்டர் மாடல்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. இந்த விலை அதிகரிப்பினால் ஹோண்டாவின் பிரபலமான ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.65,892-ல் இருந்து ரூ.66,799ஆக 907 ரூபாய் உயர்ந்துள்ளது.

Model New Price Old Price Difference
Activa 6G STD ₹66,799 ₹65,892 ₹907
Activa 6G 20th Year Annive₹ary STD ₹68,299 ₹67,392 ₹907
Activa 6G Deluxe ₹68,544 ₹67,392 ₹1,152
Activa 6G 20th Year Annive₹ary Deluxe ₹70,044 ₹68,892 ₹1,152
Dio STD ₹62,229 ₹61,970 ₹259
Dio Deluxe ₹65,627 ₹65,320 ₹307
Dio Repsol Edition ₹68,127 ₹67,820 ₹307
Activa 125 Drum ₹70,629 ₹69,470 ₹1,159
Activa 125 Drum Alloy ₹74,198 ₹72,970 ₹1,228
Activa 125 Disc ₹77,752 ₹76,471 ₹1,281
Grazia 125 Drum ₹74,815 ₹73,915 ₹900
Grazia 125 Disc ₹82,140 ₹80,981 ₹1,159
பிரபலமான ஹோண்டா ஸ்கூட்டர்களின் விலைகள் உயர்ந்தன!! அச்சச்சோ டியோவின் விலையும் அதிகமாச்சா!

அதேபோல் ஆக்டிவா 6ஜி-யின் டாப் வேரியண்ட்டாக விற்பனை செய்யப்பட்டுவரும் 20வது வருட ஆண்டுநிறைவு டீலக்ஸ் எடிசனின் விலை ரூ.68,892-ல் இருந்து 70 ஆயிரம் ரூபாயை கடந்து ரூ.70,044ஆக கொண்டுவரப்பட்டுள்ளது. இது ரூ.1,152 அதிகமாகும். ஹோண்டா டியோவை குறைந்தப்பட்சமாகவே இனி ரூ.62,229-ல்தான் பெற முடியும்.

பிரபலமான ஹோண்டா ஸ்கூட்டர்களின் விலைகள் உயர்ந்தன!! அச்சச்சோ டியோவின் விலையும் அதிகமாச்சா!

முன்பு டியோவின் ஆரம்ப விலை ரூ.259 குறைவாக ரூ.61,970ஆக இருந்தது. டியோ ரெப்சோல் எடிசனின் விலை ரூ.307 அதிகரித்துள்ளது. மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ஒவ்வொன்றும் 1000 ரூபாய்க்கும் மேல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பிரபலமான ஹோண்டா ஸ்கூட்டர்களின் விலைகள் உயர்ந்தன!! அச்சச்சோ டியோவின் விலையும் அதிகமாச்சா!

ட்ரம் & டிஸ்க் வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா க்ரேஸியாவின் விலைகள் ரூ.900 மற்றும் ரூ.1,159 என உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல் இந்த விலை அதிகரிப்பு பாகங்களின் விலை உயர்வினால் கொண்டுவரப்படுவதால் இதற்கு ஏற்ப வாகனங்களில் எந்த அப்கிரேடும் வழங்கப்படவில்லை.

Most Read Articles

English summary
Honda Scooter Range Receives First Price Hike For 2021
Story first published: Thursday, January 7, 2021, 21:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X