Just In
- 1 hr ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 3 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 3 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
- 4 hrs ago
பார்ட்-டைம் ஆட்டோ டிரைவராக மாறிய 21 வயது இளம்பெண்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா பாராட்டுவீங்க...
Don't Miss!
- News
பரபரப்பான அரசியல் சூழலில்... ஜனவரி 22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹோண்டா வெளியிட்ட தகவல்... ஆச்சரியத்தில் இந்திய இருசக்கர வாகன உலகம்... என்னனு தெரிஞ்சா நீங்களே அசந்துருவீங்க!
இந்திய இருசக்கர வாகன உலகையே அசர வைக்கின்ற வகையில் ஓர் தகவலை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையில் கொடிகட்டிப் பறக்கக் கூடிய நிறுவனங்களில் ஹோண்டாவும் ஒன்று. இந்த நிறுவனமே இந்திய இருசக்கர வாகன உலகையே அசர வைக்கின்ற வகையிலான ஓர் தகவலை தற்போது வெளியிட்டிருக்கின்றது. அதாவது, தன் நிறுவனத்தின் குறிப்பிட்ட தயாரிப்பை இதுவரை 2.5 கோடி இந்தியர்கள் வாங்கியிருப்பதாக அது தெரிவித்திருக்கின்றது.

நாட்டின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் ஒன்றான ஹோண்டா ஆக்டிவாவையே இதுவரையே 2.5 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வாங்கியிருக்கின்றனர். இதற்கு முன்னர் இதுபோன்ற எந்தவொரு நிறுவனத்தின் ஸ்கூட்டரும் இந்தளவு விற்பனையானது இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

தற்போது நாட்டில் ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளென்டர் மற்றும் ஹோண்டாவின் ஆக்டிவா ஆகிய இரு இருசக்கர வாகனங்களுக்கு இடையே மட்டுமே விற்பனையில் போட்டி நிலவிய வண்ணம் இருக்கின்றது. ஒரு சில மாதங்களில் ஹீரோ ஸ்பிளெண்டரும், சில மாதங்களில் ஹோண்டா ஆக்டிவாவும் விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்து வந்தன.

இந்த நிலையிலேயே ஹோண்டா ஆக்டிவா பற்றிய சிறப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது மிக வெற்றிகரமான பயணம் ஆகும். ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவாக இரு தசாப்தங்களுக்கும் அதிகமாக இந்திய இருசக்கர வாகன சந்தையைக் கலக்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த ஸ்கூட்டர் முதல் முறையாக 2001ம் ஆண்டிலேயே இந்தியாவில் கால் தடம் பதித்தது. ஆரம்பத்தில் 102 சிசி திறனிலேயே இது களமிறங்கியது. தற்போது 125 சிசி வரையிலான திறனில் விற்கப்பட்டு வருகின்றது. அமோகமான வரவேற்பு, நல்ல டிமாண்ட் ஆகியவற்றை இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் பெற்று வருவதன் காரணத்தினால் தொடர்ச்சியாக அப்டேட்டைக் கொடுத்து இந்த ஸ்கூட்டரை இந்தியாவில் நிலை நிறுத்தி வருகின்றது ஹோண்டா.

2005-06ம் ஆண்டில் மட்டும் 10 லட்சம் யூனிட் ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையாகி ஓர் புதிய மைல்கல்லை எட்டியது. இதுபோன்று தொடர் விற்பனை அதிகரிப்பால் கடந்த 2015ம் ஆண்டு ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகமா இருந்தது.

இந்த நிலையிலேயே தற்போது 2.5 கோடிக்கும் அதிகமாக இந்த ஸ்கூட்டர் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் இத்தகைய விற்பனை இலக்கை எட்டியிருப்பது இந்திய இருசக்கர வாகன உலகிற்கும், அதன் பயனர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஒவ்வொரு வருடமும் அந்தந்த வருடத்திற்கு ஏற்ப அப்டேட்டுகளை இந்த இருசக்கர வாகனம் பெற்று வந்ததும் இந்திய சந்தையில் நிலையான இடத்தை ஹோண்டா பெற்றதற்கு காரணமாக இருக்கின்றது. 2009ம் ஆண்டில் சிபிஎஸ் பிரேக்கிங் வசதியையும், 2013ம் ஆண்டு ஈகோ தொழில்நுட்ப வசதியையும் இந்த ஸ்கூட்டர் பெற்றது.

இவ்வாறே கடந்த இதுவரை பன்முக அப்டேட்டுகலை ஆக்டிவா பெற்றிருக்கின்றது. மேலும், பன்முக தேர்விலும் இது விற்பனைக்குக் கிடைத்து வருகிறது.