ரூ.3,500 வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்... க்ரேஸியா ஸ்கூட்டருக்கு சலுகையை அறிவித்தது ஹோண்டா!!

ஹோண்டா க்ரேஸியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டருக்கான சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.3,500 வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்... க்ரேஸியா ஸ்கூட்டருக்கு சலுகையை அறிவித்தது ஹோண்டா!!

முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா 2 வீலர்ஸ் அதன் பிரபலமான ஸ்கூட்டர்களுக்கு பணம் தள்ளுபடி சலுகைகளை அறிவித்து வருகிறது.

ரூ.3,500 வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்... க்ரேஸியா ஸ்கூட்டருக்கு சலுகையை அறிவித்தது ஹோண்டா!!

இந்த வகையில் சமீபத்தில் ஆக்டிவா 6ஜி மற்றும் டியோ ஸ்கூட்டர் மாடல்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகையினை பற்றி நமது செய்திதளத்தில் பார்த்திருந்தோம். அவற்றை தொடர்ந்து தற்போது மற்றொரு பிரபல ஹோண்டா ஸ்கூட்டரான க்ரேஸியாவிற்கு 5 சதவீத பணம் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.3,500 வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்... க்ரேஸியா ஸ்கூட்டருக்கு சலுகையை அறிவித்தது ஹோண்டா!!

அதாவது க்ரேஸியா பிஎஸ்6 ஸ்கூட்டரை இந்த மே மாதத்தில் இருந்து அடுத்த ஜூன் 30ஆம் தேதி வரையில் வாங்குவோர் அதிகப்பட்சமாக ரூ.3,500 வரையிலான பணத்தை சேமிக்க முடியும். இந்த சலுகையினை பெற வாடிக்கையாளர் மாதத்தவணை மூலம் க்ரேஸியாவை வாங்க வேண்டும்.

ரூ.3,500 வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்... க்ரேஸியா ஸ்கூட்டருக்கு சலுகையை அறிவித்தது ஹோண்டா!!

அதேநேரம் மாதத்தவணையாக செலுத்த வேண்டிய தொகை குறைந்தது ரூ.40,000 ஆக இருக்க வேண்டும். மேலும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் க்ரெடிட் கார்ட் மூலம் செலுத்த வேண்டும். கிட்டத்தட்ட இதே விதிமுறைகளுடன் தான் மற்ற ஹோண்டா ஸ்கூட்டர்களுக்கும் பணம் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டு இருந்தது.

ரூ.3,500 வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்... க்ரேஸியா ஸ்கூட்டருக்கு சலுகையை அறிவித்தது ஹோண்டா!!

ஹோண்டா க்ரேஸியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் ட்ரம் & டிஸ்க் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.75,859 (ட்ரம்) மற்றும் ரூ.83,185 என உள்ளன.

ரூ.3,500 வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்... க்ரேஸியா ஸ்கூட்டருக்கு சலுகையை அறிவித்தது ஹோண்டா!!

இவை இரண்டிலும் வழங்கப்படும் ப்ரேக் அமைப்பு தான் வேறுபடுகிறது. மற்றப்படி கிட்டத்தட்ட இந்த இரு வேரியண்ட்களும் ஒன்று தான். க்ரேஸியாவில் ஹெட்லைட், டெயில்லைட் உள்ளிட்டவை அனைத்தும் எல்இடி விளக்குகளாக கொடுக்கப்படுகின்றன.

ரூ.3,500 வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்... க்ரேஸியா ஸ்கூட்டருக்கு சலுகையை அறிவித்தது ஹோண்டா!!

இவற்றுடன் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான், பல செயல்பாட்டிற்கான சாவி துளை, முன்பக்க க்ளோவ் பாக்ஸ், ஐடியலிங் ஸ்டாப் சிஸ்டம் மற்றும் ஏசிஜி உடன் அமைதியான ஸ்டார்ட் வசதியையும் இந்த 125சிசி ஸ்கூட்டர் பெறுகிறது.

ரூ.3,500 வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்... க்ரேஸியா ஸ்கூட்டருக்கு சலுகையை அறிவித்தது ஹோண்டா!!

பயணிகளின் பாதுகாப்பிற்கு காம்பி-ப்ரேக்கிங் சிஸ்டம் மற்றும் சைடு-ஸ்டாண்ட் போடப்பட்டிருந்தால் என்ஜின் ஸ்டார்ட் ஆகாத வசதி உள்ளிட்டவை உள்ளன. ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் வழங்கப்படும் அதே 124.9சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் க்ரேஸியாவிலும் பொருத்தப்படுகிறது.

Most Read Articles

English summary
Honda Grazia 125 BS6 available with cashback of up to Rs 3,500.
Story first published: Tuesday, May 11, 2021, 23:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X