Just In
- 1 hr ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 1 hr ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 1 hr ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 2 hrs ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
Don't Miss!
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- News
''அப்துல்கலாமின் இளவல்.. பசுமைக்காவலர்''.. நடிகர் விவேக்குக்கு புகழாரம் சூட்டிய கமல்ஹாசன்!
- Movies
விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
- Lifestyle
தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான பாலியல் நடைமுறைகள்... இந்தியாவிலுமா இப்படி நடக்குது?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு புதிய பணம் தள்ளுபடி சலுகை அறிவிப்பு!! ரூ.5,000 சேமிக்கலாம்!
ஆக்டிவா 125 ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கான கவர்ச்சிகரமான சலுகைகளை ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா வைரஸ் பரவலினால் இருசக்கர வாகனங்களின் விற்பனை கடந்த சில மாதங்களாக அதிவேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. ஏனெனில் தனிபயன்பாட்டு வாகனங்களில் பயணிக்கவே பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் சமீப காலமாக விருப்பப்படுகின்றனர்.

இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் இந்த சூழலை பயன்படுத்தி கொண்டு தங்களது தயாரிப்பு வாகனங்களின் விற்பனையை மேலும் அதிகரிக்க இலாபகரமான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றன.

இந்த வகையில் தற்போது ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் பிரபலமான ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு ரூ.5,000 பணம் தள்ளுபடி சலுகையினை அறிவித்துள்ளது. ஆனால் இந்த சலுகையினை அனைவராலும் பெற முடியாது.

ஏனென்றால், ஆக்டிவா 125 ஸ்கூட்டரை டெபிட் கார்ட் உபயோகித்தோ அல்லது க்ரெடிட் கார்ட் உபயோகித்தோ மாதத்தவணையில் வாங்குபவர்கள் மட்டுமே அனுபவிக்கும் விதத்தில் இந்த பணம் தள்ளுபடி சலுகையினை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேபோல் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் கூட்டணி வங்கிகளான பேங்க் ஆஃப் பரோடா, இண்டுஸ்ல்ண்ட் பேங்க், ஸ்டாண்டார்ட் சாட்டர்ட், ஃபெடரல் பேங்க் மற்றும் யெஸ் பேங்கின் மூலம் ஆக்டிவா 125 ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கே இந்த சலுகை அறிவிப்பு பொருந்தும்.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் ஆக்டிவா 125 ஸ்கூட்டரை முன்பதிவு செய்யும் பகுதியில் இந்த பணம் தள்ளுபடி சலுகை புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. மற்றப்படி இந்த சலுகை எத்தனை நாட்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் ஸ்டாண்டர்ட் மற்றும் டீலக்ஸ் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.70,629 மற்றும் ரூ.77,752 ஆக தற்சமயம் உள்ளன.

இந்த இரு வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியான 124சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் ஒருங்கிணைக்கப்பட்ட ஃப்யுல்-இன்ஜெக்டட் தொழிற்நுட்பத்துடன் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-ல் 8 பிஎச்பி மற்றும் 5,000 ஆர்பிஎம்-ல் 10.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.