நண்பர்களுடன் ஜாலியா டிரிப் அடிக்கலாம்... குறைவான விலையில் ஹோண்டாவின் அட்வென்ஜர் டூரர் பைக்... எவ்ளோ தெரியுமா?

ஹோண்டா சிபி200எக்ஸ் பைக்கை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நண்பர்களுடன் ஜாலியா டிரிப் அடிக்கலாம்... குறைவான விலையில் ஹோண்டாவின் அட்வென்ஜர் டூரர் பைக்... எவ்ளோ தெரியுமா?

இந்தியாவில் சிபி200எக்ஸ் (Honda CB200X) பைக்கின் டெலிவரி பணிகளை ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் ரெட் விங் (Red Wing' Dealerships) டீலர்ஷிப்கள் வாயிலாக புதிய ஹோண்டா சிபி200எக்ஸ் பைக் விற்பனை செய்யப்படவுள்ளது.

நண்பர்களுடன் ஜாலியா டிரிப் அடிக்கலாம்... குறைவான விலையில் ஹோண்டாவின் அட்வென்ஜர் டூரர் பைக்... எவ்ளோ தெரியுமா?

முதல் பைக்கிற்கான சாவியை வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஹரியானாவில் உள்ள ஃபரிதாபாத் ஹோண்டா ஷோரூமில் நடத்தப்பட்டது. புத்தம் புதிய ஹோண்டா சிபி200எக்ஸ் பைக், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கிற்கு 1,44,500 ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நண்பர்களுடன் ஜாலியா டிரிப் அடிக்கலாம்... குறைவான விலையில் ஹோண்டாவின் அட்வென்ஜர் டூரர் பைக்... எவ்ளோ தெரியுமா?

ஹோண்டா சிபி200எக்ஸ் பைக் மொத்தம் மூன்று வண்ண தேர்வுகளில் கிடைக்கும். பியர்ல் நைட்ஸ்டார் பிளாக், மேட் செலின் சில்வர் மெட்டாலிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் ஆகியவைதான் அந்த மூன்று வண்ண தேர்வுகள் ஆகும். இந்த பைக்கை நாங்கள் சமீபத்தில் பார்வையிட்டோம். அப்போது இந்த பைக்கின் டிசைன் எங்களை வெகுவாக கவர்ந்தது.

நண்பர்களுடன் ஜாலியா டிரிப் அடிக்கலாம்... குறைவான விலையில் ஹோண்டாவின் அட்வென்ஜர் டூரர் பைக்... எவ்ளோ தெரியுமா?

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹோண்டா சிபி200எக்ஸ் பைக்கானது, ஹார்னெட் 2.0 (Hornet 2.0) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில், 184.4 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 17.3 ஹெச்பி பவரையும், 16.1 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

நண்பர்களுடன் ஜாலியா டிரிப் அடிக்கலாம்... குறைவான விலையில் ஹோண்டாவின் அட்வென்ஜர் டூரர் பைக்... எவ்ளோ தெரியுமா?

இந்த இன்ஜின் உடன் ஹோண்டா நிறுவனம் 5 ஸ்பீடு கியர்பாக்ஸை இணைத்துள்ளது. ஹோண்டா சிபி200எக்ஸ் பைக்கில், முழுமையாக எல்இடி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் நக்கிள் கார்டுகளையும் (Knuckle Guards) இந்த பைக் பெற்றுள்ளது. முன்பக்க டர்ன் இன்டிகேட்டர்கள் இதன் உடன் இணைந்த வகையில் வழங்கப்பட்டுள்ளன.

நண்பர்களுடன் ஜாலியா டிரிப் அடிக்கலாம்... குறைவான விலையில் ஹோண்டாவின் அட்வென்ஜர் டூரர் பைக்... எவ்ளோ தெரியுமா?

மேலும் இந்த பைக்கில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது. அதே நேரத்தில் ஹோண்டா சிபி200எக்ஸ் பைக்கின் எடை 147 கிலோ ஆகும். ஹார்னெட் 2.0 பைக்கை காட்டிலும், புதிய ஹோண்டா சிபி200எக்ஸ் பைக்கின் எடை சுமார் 5 கிலோ அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பர்களுடன் ஜாலியா டிரிப் அடிக்கலாம்... குறைவான விலையில் ஹோண்டாவின் அட்வென்ஜர் டூரர் பைக்... எவ்ளோ தெரியுமா?

ஹோண்டா சிபி200எக்ஸ் பைக்கை பற்றி டீலர்ஷிப்களில் தற்போது வாடிக்கையாளர்கள் அதிகளவில் விசாரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இளம் தலைமுறை வாடிக்கையாளர்கள்தான் இந்த பைக் குறித்த தகவல்களை அதிகம் விசாரிப்பதாக கூறப்படுகிறது. எனவே இளைய தலைமுறையினரை இந்த பைக் அதிகம் கவர்ந்துள்ளது எனலாம்.

நண்பர்களுடன் ஜாலியா டிரிப் அடிக்கலாம்... குறைவான விலையில் ஹோண்டாவின் அட்வென்ஜர் டூரர் பைக்... எவ்ளோ தெரியுமா?

ஹோண்டா சிபி200எக்ஸ் அட்வென்ஜர் டூரர் ரக பைக் ஆகும். இந்தியாவில் தற்போது அட்வென்ஜர் டூரர் ரக பைக்குகள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. சாகச பயணங்களை அட்வென்ஜர் டூரர் ரக பைக்குகளில் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அத்தகைய வாடிக்கையாளர்களை குறிவைத்து சிபி200எக்ஸ் பைக்கை ஹோண்டா களமிறக்கியுள்ளது.

நண்பர்களுடன் ஜாலியா டிரிப் அடிக்கலாம்... குறைவான விலையில் ஹோண்டாவின் அட்வென்ஜர் டூரர் பைக்... எவ்ளோ தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஓய்ந்து தற்போது நிலைமை ஓரளவிற்கு சரியாகியுள்ள நிலையிலேயே, ஹோண்டா சிபி200எக்ஸ் பைக்கை வாங்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். எனினும் மூன்றாவது அலை குறித்த அச்சம் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து கொண்டேதான் உள்ளது.

நண்பர்களுடன் ஜாலியா டிரிப் அடிக்கலாம்... குறைவான விலையில் ஹோண்டாவின் அட்வென்ஜர் டூரர் பைக்... எவ்ளோ தெரியுமா?

இந்த பிரச்னையும் சரியாகும்பட்சத்தில், அடிக்கடி மேற்கொள்ளும் சாகச பயணங்களை மனதில் வைத்து, ஹோண்டா சிபி200எக்ஸ் பைக்கை வாங்க பலரும் முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப இந்த பைக்கின் விலையும் சரியாக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களை கவரக்கூடிய விஷயமாக இருக்கும்.

நண்பர்களுடன் ஜாலியா டிரிப் அடிக்கலாம்... குறைவான விலையில் ஹோண்டாவின் அட்வென்ஜர் டூரர் பைக்... எவ்ளோ தெரியுமா?

இந்த பைக்கை கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என கூறலாம். இந்த விலைக்கு ஏற்ற வசதிகளை ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது. அதே நேரத்தில் வார இறுதி நாட்களில் ரிலாக்ஸாக மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மட்டுமல்லாது, பரபரப்பான வார நாட்களில் மேற்கொள்ளப்படும் நகர பயணங்கள் என இரண்டிற்கும் சிபி200எக்ஸ் உற்ற தோழனாக இருக்கும் என ஹோண்டா கூறுகிறது.

Most Read Articles
English summary
Honda begins deliveries of the cb200x to customers in india here are all the details
Story first published: Tuesday, September 7, 2021, 18:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X