Just In
- 54 min ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 8 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 10 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 13 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு... ஹோண்டா சிபி ஷைன் பைக்கை வாங்கி குவிக்கும் மக்கள்... மைலேஜ் எவ்ளோனு தெரியுமா?
இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், ஹோண்டா சிபி ஷைன் பைக்கின் விற்பனை தூள் கிளப்பி கொண்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் விற்பனை எண்ணிக்கை அடிப்படையில், இரண்டாவது மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இருந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 29 சதவீதத்திற்கும் மேற்பட்ட சந்தை பங்கை ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை சிபி ஷைன் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 1.16 லட்சத்திற்கும் மேற்பட்ட சிபி ஷைன் பைக்குகளை ஹோண்டா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் விற்பனை செய்துள்ளது. துல்லியமாக சொல்வதென்றால், கடந்த ஜனவரி மாதம் 1,16,222 ஹோண்டா சிபி ஷைன் பைக்குகள் விற்பனையாகியுள்ளன.

ஆனால் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 66,832 சிபி ஷைன் பைக்குகளை மட்டுமே ஹோண்டா விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் விற்பனையில் 74 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து ஹோண்டா சிபி ஷைன் மோட்டார்சைக்கிள் அசத்தியுள்ளது. இது மிக பிரம்மாண்டமான விற்பனை வளர்ச்சி என்பதில் சந்தேகமில்லை.

ஹோண்டா நிறுவனம் தற்போதைய நிலையில் சிபி ஷைன் மோட்டார்சைக்கிளில், 124 சிசி சிங்கிள்-சிலிண்டர் 4-ஸ்ட்ரோக் இன்ஜினை வழங்கி வருகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்மில் 10.7 பிஎஸ் பவரையும், 6000 ஆர்பிஎம்மில் 11 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபி ஷைன் மோட்டார்சைக்கிளின் இரண்டு சக்கரங்களிலும் 130 மிமீ ட்ரம் பிரேக் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர முன் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாகவும் கொடுக்கப்படுகிறது. கருப்பு, ஜெனி க்ரே மெட்டாலிக், அத்லெட்டிக் ப்ளூ மெட்டாலிக் மற்றும் ரீபெல் ரெட் மெட்டாலிக் என மொத்தம் 4 வண்ணங்களில் ஹோண்டா சிபி ஷைன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் ஹோண்டா சிபி ஷைன் மோட்டார்சைக்கிளின் ட்ரம் பிரேக் வேரியண்ட் 70,478 ரூபாய் என்ற விலையிலும், டிஸ்க் பிரேக் வேரியண்ட் 75,274 ரூபாய் என்ற விலையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு விலைகளும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஹோண்டா சிபி ஷைன் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கம்யூட்டர் பைக்குகளில் ஒன்றாகும்.

சமீப காலமாக இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இதன் காரணமாக ஸ்போர்ட்ஸ் பைக்குகளை காட்டிலும், ஓரளவிற்கு நல்ல மைலேஜ் தரக்கூடிய கம்யூட்டர் பைக்குகளின் மீது வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பி வருகிறது. ஹோண்டா சிபி ஷைன் பைக்கின் விற்பனை உயர்விற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஹோண்டா சிபி ஷைன் மோட்டார்சைக்கிள் ஒரு லிட்டருக்கு 65 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியது. தற்போது உள்ள பெட்ரோல் விலைக்கு இதனை ஓரளவிற்கு சிறப்பான மைலேஜ் என கூறலாம். எனவே வரும் காலங்களிலும், ஹோண்டா சிபி ஷைன் மோட்டார்சைக்கிளின் விற்பனை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.