இந்த விலைக்கு சூப்பரான அட்வென்சர் டூரர் பைக்... ஹோண்டா சிபி200எக்ஸ் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

ஹோண்டா சிபி200எக்ஸ் பைக்கின் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ-வை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த விலைக்கு சூப்பரான அட்வென்சர் டூரர் பைக்... ஹோண்டா சிபி200எக்ஸ் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

ஹோண்டா சிபி200எக்ஸ் (Honda CB200X) அட்வென்சர் டூரர் ரக பைக், சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை 1.44 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆன்லைன் மூலமாகவோ அல்லது டீலர்ஷிப்கள் வாயிலாகவே இந்த பைக் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு தொகை 2 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த புதிய பைக்கை பார்வையிடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் உங்களுக்கு தெரிவிக்கிறோம்.

இந்த விலைக்கு சூப்பரான அட்வென்சர் டூரர் பைக்... ஹோண்டா சிபி200எக்ஸ் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

டிசைன்

முதலில் இந்த பைக்கின் டிசைன் பற்றி பார்த்து விடலாம். தனது மூத்த உடன்பிறப்பான ஹோண்டா சிபி500எக்ஸ் (Honda CB500X) பைக்கின் சில டிசைன் அம்சங்களை சிபி200எக்ஸ் பெற்றிருப்பதை பார்த்த உடனே தெரிந்து கொள்ளலாம். எனினும் ஹார்னெட் 2.0 (Hornet 2.0) பைக்கின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அட்வென்சர் டூரர் பைக்கில், டைமண்ட்-டைப் ஃப்ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரான சாலைகளிலும், கார்னர்களிலும் நிலையாக பயணம் செய்ய முடியும்.

இந்த விலைக்கு சூப்பரான அட்வென்சர் டூரர் பைக்... ஹோண்டா சிபி200எக்ஸ் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

இந்த பைக்கின் முன் பகுதியில் எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இந்த பைக்கின் மற்ற லைட்களும் கூட எல்இடி யூனிட்கள்தான். அத்துடன் இந்த பைக்கில் உயரமான விண்டுஸ்க்ரீனும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரைடர் மீது காற்று அறைவது தடுக்கப்படும். அதே சமயம் இந்த பைக்கின் முன் பகுதியில் அப்-சைடு டவுன் (Upside Down - USD) ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. இது தங்க நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக்கு சூப்பரான அட்வென்சர் டூரர் பைக்... ஹோண்டா சிபி200எக்ஸ் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

வசதிகள்

இனி வசதிகள் பற்றி பார்க்கலாம். இந்த பைக்கில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. கியர் பொஷிஷன் இன்டிகேட்டர், டிஜிட்டல் கடிகாரம் மற்றும் பேட்டரி வோல்ட்மீட்டர் உள்ளிட்ட வசதிகளுடன் இது வருகிறது. இதன் ரீடிங்குகள் தெளிவாக உள்ளன. எனினும் பிரகாசமான சூரிய வெளிச்சத்தில் ரீடிங்குகளை பார்ப்பது சற்று கடினமாக இருக்கலாம். அதே நேரத்தில் சாவி போடக்கூடிய இக்னீஷன், எரிபொருள் டேங்க்கின் மீது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விலைக்கு சூப்பரான அட்வென்சர் டூரர் பைக்... ஹோண்டா சிபி200எக்ஸ் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

மேலும் ஒருங்கிணைந்த எல்இடி பிளிங்கர்கள் (LED Blinkers) உடன் நக்கிள் கார்டுகளையும் (Knuckle Guards) இந்த பைக் பெற்றுள்ளது. இதனுடன் ஹேண்டில்பார் உயர்வான நிலையில் வழங்கப்பட்டுள்ளது. இது பைக்கிற்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் சைலென்சரும் மேல் நோக்கிய வகையில் வழங்கப்பட்டிருப்பது சிறப்பாக உள்ளது. இந்த பைக்கின் ரைடிங் பொஷிஷன் நன்றாக இருக்கிறது. தொலைதூர பயணங்களின்போது ரைடர் சோர்வு அடைவதை இது குறைக்கும்.

இந்த விலைக்கு சூப்பரான அட்வென்சர் டூரர் பைக்... ஹோண்டா சிபி200எக்ஸ் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

இன்ஜின்

இனி இன்ஜின் பற்றி பார்க்கலாம். இந்த பைக்கில், ஏர்-கூல்டு, 184 சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 17 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 16.1 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக்கு சூப்பரான அட்வென்சர் டூரர் பைக்... ஹோண்டா சிபி200எக்ஸ் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

பாதுகாப்பை பொறுத்தவரை, ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பிளிட் சீட்டையும் இந்த பைக் பெற்றுள்ளது. ஆனால் நாங்கள் இன்னும் இந்த பைக்கை ஓட்டி பார்க்கவில்லை. முறையான ரோடு டெஸ்ட் ரிவியூ-வை நாங்கள் விரைவில் செய்வோம். அப்போது இந்த பைக்கின் செயல்திறன் உள்ளிட்ட தகவல்களை உங்களுக்கு விரிவாக வழங்குகிறோம்.

இந்த விலைக்கு சூப்பரான அட்வென்சர் டூரர் பைக்... ஹோண்டா சிபி200எக்ஸ் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

சிபி200எக்ஸ் பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதன் மூலம், ஹோண்டா நிறுவனம் தனது எண்ட்ரி-லெவல் அட்வென்சர் டூரரை கொண்டு வந்துள்ளது. இந்த பைக்கிற்கு 1.44 லட்ச ரூபாய் என்ற குறைவான விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது சிறப்பான விஷயம். இந்திய சந்தையில் ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 (Hero Xpulse 200) மற்றும் எக்ஸ்பல்ஸ்200டி (Xpulse 200T) ஆகிய பைக்குகள் உடன், ஹோண்டா சிபி200எக்ஸ் போட்டியிடும்.

Most Read Articles

English summary
Honda cb200x adventure tourer first look review design features engine and more
Story first published: Monday, September 6, 2021, 12:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X