புத்தம் புதிய ஹோண்டா சிபி500எக்ஸ் அட்வென்ச்சர் டூரர் பைக்கின் எமது பிரத்யேக ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ - வீடியோ!

அட்வென்ச்சர் டூரர் பைக்கை வாங்குவது பலரின் கனவு விஷயமாக மாறி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் கொடுத்து வரும் வரவேற்பு அதிகரித்து வருவதால், அனைத்து விலைப் பட்டியலிலும் இப்போது அட்வென்ச்சர் டூரர் பைக் மாடல்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில், ஹோண்டா நிறுவனம் சிபி500எக்ஸ் என்ற புத்தம் புதிய அட்வென்ச்சர் டூரர் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பைக்கின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ வீடியோவை கீழே பார்க்கலாம்.

அருமையான டிசைன், ஹோண்டாவின் சிறந்த எஞ்சினுடன் இந்தியாவில் இந்த புதிய மாடல் வந்துள்ளது. இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள், அட்ஜெஸ்ட்டபிள் விண்ட்ஸ்க்ரீன் போன்றவை கொடுக்கப்பட்டு இருக்கிறது. எல்சிடி திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களையும், ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும் பெற்றுள்ளது.

ஹோண்டா சிபி500எக்ஸ் அட்வென்ச்சர் டூரர் பைக்கின் ரிவியூ!

புதியத ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கில் 471சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 43 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச் கொண்ட 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் ரூ.6.87 லட்சம் பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. இந்த பைக்கின் முக்கிய அம்சங்கள் மதிப்பு வாய்ந்ததாகவே இருக்கிறது.

Most Read Articles

English summary
We got to ride all new Honda CB500X adventure tourer bike and were completely impressed with what it had to offer.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X