2021 ஹோண்டா சிபி500எக்ஸ் ஷோரூம்களுக்கு வருகை... அட்வென்ஜர் பைக் ரசிகர்கள் கொண்டாட்டம்...

2021 ஹோண்டா சிபி500எக்ஸ் பைக் ஷோரூம்களுக்கு வர தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2021 ஹோண்டா சிபி500எக்ஸ் ஷோரூம்களுக்கு வருகை... அட்வென்ஜர் பைக் ரசிகர்கள் கொண்டாட்டம்...

2021 ஹோண்டா சிபி500எக்ஸ் (2021 Honda CB500X) இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது சாலை சார்ந்த அட்வென்ஜர் பைக் ஆகும். 6.87 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில், ஹோண்டா சிபி500எக்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே இந்த பைக் கிடைக்கும்.

2021 ஹோண்டா சிபி500எக்ஸ் ஷோரூம்களுக்கு வருகை... அட்வென்ஜர் பைக் ரசிகர்கள் கொண்டாட்டம்...

எனினும் கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் மற்றும் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் என இரண்டு வண்ண தேர்வுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அட்வென்ஜர் டூரர் பைக் ரசிகர்களை குறிவைத்து, ஹோண்டா சிபி500எக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப இருக்கை உயரம், ரைடிங் பொஷிஷன் ஆகிய அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

2021 ஹோண்டா சிபி500எக்ஸ் ஷோரூம்களுக்கு வருகை... அட்வென்ஜர் பைக் ரசிகர்கள் கொண்டாட்டம்...

அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய விண்டுஸ்க்ரீனையும் இந்த பைக் பெற்றுள்ளது. பெனெல்லி டிஆர்கே 502 மற்றும் கவாஸாகி வெர்ஸிஸ் 650 ஆகிய பைக்குகள் உடன் ஹோண்டா சிபி500 எக்ஸ் போட்டியிடும். ஹோண்டா நிறுவனத்தின் பிக்விங் டீலர்ஷிப்கள் வாயிலாக ஹோண்டா சிபி500எக்ஸ் மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்படுகிறது.

2021 ஹோண்டா சிபி500எக்ஸ் ஷோரூம்களுக்கு வருகை... அட்வென்ஜர் பைக் ரசிகர்கள் கொண்டாட்டம்...

இந்த சூழலில், இந்தியாவில் உள்ள ஷோரூம்களுக்கு ஹோண்டா சிபி500எக்ஸ் மோட்டார்சைக்கிள் தற்போது வந்து கொண்டுள்ளது. எனவே கூடிய விரைவில் டெலிவரி பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷோரூம் ஒன்றுக்கு ஹோண்டா சிபி500எக்ஸ் மோட்டார்சைக்கிள் வந்ததை ரேடியண்ட் க்ளிக்ஸ் லைஃப்ஸ்டைல் என்ற யூ-டியூப் சேனல் வெளியிட்டுள்ளது.

2021 ஹோண்டா சிபி500எக்ஸ் ஷோரூம்களுக்கு வருகை... அட்வென்ஜர் பைக் ரசிகர்கள் கொண்டாட்டம்...

ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் பைக்கின் சில டிசைன் அம்சங்கள் ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கிலும் இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கில் எல்இடி ஹெட் மற்றும் டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் எல்இடி இன்டிகேட்டர்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் இருக்கை உயரம் 830 மிமீ ஆகும்.

2021 ஹோண்டா சிபி500எக்ஸ் ஷோரூம்களுக்கு வருகை... அட்வென்ஜர் பைக் ரசிகர்கள் கொண்டாட்டம்...

அதே சமயம் இந்த பைக்கின் நீளம் 2,156 மிமீ-ஆகவும், அகலம் 828 மிமீ-ஆகவும், உயரம் 1,412 மிமீ-ஆகவும் உள்ளது. இந்த பைக்கின் எரிபொருள் டேங்க் 17.7 லிட்டர் கொள்ளவு கொண்டது. இந்த பைக்கின் வீல்பேஸ் 1,443 மிமீ ஆகவும், க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 181 மிமீ ஆகவும் உள்ளது. அதே சமயம் இந்த பைக்கின் எடை 199 கிலோ ஆகும்.

2021 ஹோண்டா சிபி500எக்ஸ் ஷோரூம்களுக்கு வருகை... அட்வென்ஜர் பைக் ரசிகர்கள் கொண்டாட்டம்...

ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கில், 471 சிசி, பேரலல் ட்வின், லிக்யூட் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 47 ஹெச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 43 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்லிப் மற்றும் அஸிஸ்ட் க்ளட்ச் வசதிகளும் உள்ளன.

ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாக ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த ஹைனெஸ் சிபி350 பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ராயல் என்பீல்டு கிளாசிப் 350 மற்றும் புதுவரவான ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 உள்ளிட்ட பைக்குகள் உடன் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 போட்டியிட்டு வருகிறது.

Most Read Articles

English summary
Honda CB500X Starts Arriving At Dealerships - Video. Read in Tamil
Story first published: Friday, April 30, 2021, 22:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X