2021 ஹோண்டா ஆப்பிரிக்கா அட்வென்ச்சரின் டெலிவிரிகள் துவங்கியது!! முதல் பைக்கை பெற்ற வாடிக்கையாளர் இவர்தான்

2021 ஹோண்டா ஆப்பிரிக்கா பைக்கை டெலிவிரி செய்யும் பணிகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இது குறித்து வெளியாகியுள்ள படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 ஹோண்டா ஆப்பிரிக்கா அட்வென்ச்சரின் டெலிவிரிகள் துவங்கியது!! முதல் பைக்கை பெற்ற வாடிக்கையாளர் இவர்தான்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் மை2021 ஆப்பிரிக்கா இரட்டை அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் பைக்கை ரூ.15.96 லட்சம் என்ற ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியது.

2021 ஹோண்டா ஆப்பிரிக்கா அட்வென்ச்சரின் டெலிவிரிகள் துவங்கியது!! முதல் பைக்கை பெற்ற வாடிக்கையாளர் இவர்தான்

அதனை தொடர்ந்து தற்போது இந்த 2021 அட்வென்ச்சர் பைக்கின் டெலிவிரிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் முதல் பைக் மும்பையில் உள்ள ஹோண்டாவின் ப்ரீமியம் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் இருந்து அதன் உரிமையாளருக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

2021 ஹோண்டா ஆப்பிரிக்கா அட்வென்ச்சரின் டெலிவிரிகள் துவங்கியது!! முதல் பைக்கை பெற்ற வாடிக்கையாளர் இவர்தான்

அப்போது கலந்து கொண்டு பேசிய ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர், யத்விந்தர் சிங் குலேரியா, "ஆப்பிரிக்கா ட்வின் உலகெங்கிலும் உள்ள சாகச ஆர்வலர்களால் மிகவும் விரும்பப்படும் பைக்."

2021 ஹோண்டா ஆப்பிரிக்கா அட்வென்ச்சரின் டெலிவிரிகள் துவங்கியது!! முதல் பைக்கை பெற்ற வாடிக்கையாளர் இவர்தான்

"அண்மையில் தக்கார் பேரணியில் வென்ற ஆப்பிரிக்கா ட்வின் பைக்கை 2021 வெர்சனில் வழங்குவதில் ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா பெருமை கொள்கிறது. புதிய பாதைகளை மீண்டும் சென்றடைய இந்த பைக்கின் டெலிவரிகளைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்!" என்றார்.

2021 ஹோண்டா ஆப்பிரிக்கா அட்வென்ச்சரின் டெலிவிரிகள் துவங்கியது!! முதல் பைக்கை பெற்ற வாடிக்கையாளர் இவர்தான்

முந்தைய தலைமுறையில் இருந்து 2021 ஆப்பிரிக்கா இரட்டை பைக்குகள் தோற்றத்திலும் சரி, வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்ப அம்சங்களிலும் சரி ஒரு படி முன்னேறியே உள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என்ற இரு விதமான வேரியண்ட்களில் வழங்கப்படும் இந்த அட்வென்ச்சர் பைக்கில் மிக முக்கியமான மாற்றம் பெயிண்ட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

2021 ஹோண்டா ஆப்பிரிக்கா அட்வென்ச்சரின் டெலிவிரிகள் துவங்கியது!! முதல் பைக்கை பெற்ற வாடிக்கையாளர் இவர்தான்

இந்த 2021 ஆப்பிரிக்கா ட்வின் அட்வென்ச்சர் பைக்கின் வேரியண்ட்களில் வழக்கமான அதே 1084சிசி இணையான-இரட்டை லிக்யுடு-கூல்டு என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 98 பிஎச்பி மற்றும் 103 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு மேனுவல் மற்றும் டிசிடி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

2021 ஹோண்டா ஆப்பிரிக்கா அட்வென்ச்சரின் டெலிவிரிகள் துவங்கியது!! முதல் பைக்கை பெற்ற வாடிக்கையாளர் இவர்தான்

நகர்புறம், டூர், க்ராவல், ஆஃப்-ரோடு உள்பட இரு கஸ்டம் மோட்கள் என வெவ்வேறு விதமான சாலைகளுக்கான ரைடிங் மோட்களை பெறும் 2021 ஆப்பிரிக்கா இரட்டை அட்வென்ச்சர் ஸ்போர்ட் பைக்கில் எல்இடி டிஆர்எல்களுடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ஹீட்டட் க்ரிப்ஸ், 5-நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கைகள் சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.

2021 ஹோண்டா ஆப்பிரிக்கா அட்வென்ச்சரின் டெலிவிரிகள் துவங்கியது!! முதல் பைக்கை பெற்ற வாடிக்கையாளர் இவர்தான்

இவற்றுடன் 6.5 இன்ச்சில் டிஎஃப்டி தொடுதிரையையும் பெறும் இந்த ஹோண்டா அட்வென்ச்சர் பைக்கில் டாப்-பாக்ஸ், பின்பக்கத்தில் கூடுதல் கேரியர், ராலி ஸ்டெப், டிசிடி பெடல் ஷிஃப்டர், மூடுபனி விளக்கு உள்ளிட்டவை அடங்கிய ஆக்ஸஸரீ தொகுப்பும் கூடுதல் தேர்வாக வழங்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Honda commences deliveries of 2021 Africa Twin Adventure Sports in India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X