புதிய மினி எலக்ட்ரிக் பைக்கை வடிவமைக்கும் ஹோண்டா!! இவ்வாறான தோற்றத்தில் தான் இருக்கும்...

ஹோண்டா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் காப்புரிமை படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய மினி எலக்ட்ரிக் பைக்கை வடிவமைக்கும் ஹோண்டா!! இவ்வாறான தோற்றத்தில் தான் இருக்கும்...

இந்த காப்புரிமை படங்களின் மூலம் பார்க்கும்போது ஹோண்டாவின் எலக்ட்ரிக் பைக், சமீபத்தில் அப்கிரேடை பெற்றிருந்த இந்த நிறுவனத்தின் பிரபலமான மினி பைக்கான க்ரோம்-ஐ போல் உள்ளது.

புதிய மினி எலக்ட்ரிக் பைக்கை வடிவமைக்கும் ஹோண்டா!! இவ்வாறான தோற்றத்தில் தான் இருக்கும்...

ஆனால் மிகவும் உன்னிப்பாக பார்த்தோமேயானால், இது க்ரோம் கிடையாது என்பதையும், சற்று வித்தியாசமான தோற்றத்தை இந்த மினி எலக்ட்ரிக் பைக் கொண்டுள்ளதையும் அறியலாம்.

புதிய மினி எலக்ட்ரிக் பைக்கை வடிவமைக்கும் ஹோண்டா!! இவ்வாறான தோற்றத்தில் தான் இருக்கும்...

மேலும், இது எலக்ட்ரிக் பைக் தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பைக்கில் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதையும் இந்த படங்களில் பார்க்க முடிகிறது. பைக்கில் பேட்டரி தொகுப்பு மோனோகோக் ஸ்டைலிலான சேசிஸில் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய மினி எலக்ட்ரிக் பைக்கை வடிவமைக்கும் ஹோண்டா!! இவ்வாறான தோற்றத்தில் தான் இருக்கும்...

பேட்டரிக்கு பின்னால் எலக்ட்ரிக் மோட்டார் இந்த காப்புரிமை படங்களில் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுக்கு மாற்றாக ஹோண்டா கோல்டு விங் பைக்கில் வழங்கப்படுவதை போன்ற ஹோசாக்-டைப் ஃபோர்க் அமைப்பை இந்த எலக்ட்ரிக் பைக் கொண்டுள்ளது.

புதிய மினி எலக்ட்ரிக் பைக்கை வடிவமைக்கும் ஹோண்டா!! இவ்வாறான தோற்றத்தில் தான் இருக்கும்...

பின்புறத்தில் இரட்டை விஷ்போன்ஸ் (பின் சக்கரத்தில் இருந்து இரண்டாக பிளவுப்படுவது) மற்றும் கிர்டர்-ஸ்டைல் ஃபோர்க்குகள் மோனோ-ஷாக் உடனும் உள்ளன. இந்த காப்புரிமை படங்களை பார்க்கும்போதே தெரிகிறது, இந்த பைக் இன்னும் முழுமையாக வடிவமைக்கப்படவில்லை என்பது.

புதிய மினி எலக்ட்ரிக் பைக்கை வடிவமைக்கும் ஹோண்டா!! இவ்வாறான தோற்றத்தில் தான் இருக்கும்...

இதனால் ஹோண்டாவின் இந்த புதிய மினி எலக்ட்ரிக் பைக் அறிமுகமாகுவதற்கு இன்னும் பல மாதங்களாகலாம். இதன் கான்செப்ட் மாடல் இனி வரும் ஆட்டோ கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

புதிய மினி எலக்ட்ரிக் பைக்கை வடிவமைக்கும் ஹோண்டா!! இவ்வாறான தோற்றத்தில் தான் இருக்கும்...

ஒருவேளை இந்த மினி பைக் தயாரிப்பு நிலையையே எட்டாமல் கூட போகலாம். ஆனால் ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் காம்பெக்ட் மோட்டார்சைக்கிளில் எலக்ட்ரிக் ஆற்றலை கொண்டுவர தயாராகி வருவது இந்த காப்புரிமை படங்களின் மூலம் தெரிய வந்துவிட்டது.

புதிய மினி எலக்ட்ரிக் பைக்கை வடிவமைக்கும் ஹோண்டா!! இவ்வாறான தோற்றத்தில் தான் இருக்கும்...

தற்சமயம் இந்த ஜப்பானிய மோட்டார்சைக்கிள் பிராண்டில் இருந்து க்ரோம், மங்கி, ட்ரைல் 125 மற்றும் சூப்பர் கேப் சி125 என்ற நான்கு மினி பைக்குகள் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. க்ரோம்-இன் புதிய ஃபேஸ்லிஃப்ட் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அமெரிக்காவிலும், இந்த ஆண்டு துவக்கத்தில் ஐரோப்பாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய மினி எலக்ட்ரிக் பைக்கை வடிவமைக்கும் ஹோண்டா!! இவ்வாறான தோற்றத்தில் தான் இருக்கும்...

முதன்முதலாக உலகளவில் 2014ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா க்ரோம் நிச்சயம் பிரபலமான மினி பைக்குகளுள் ஒன்று. இதுவரையில் மட்டுமே இந்த காம்பெக்ட் மோட்டார்சைக்கிள் சுமார் 7.5 லட்ச யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் நவி மினி பைக் அறிமுகப்படுத்தபட்டது.

புதிய மினி எலக்ட்ரிக் பைக்கை வடிவமைக்கும் ஹோண்டா!! இவ்வாறான தோற்றத்தில் தான் இருக்கும்...

ஆனால் அது துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் வெற்றி பெறவில்லை. இந்திய சந்தையில் க்ரோம் பைக் அறிமுகமாகுவதற்கு இன்னமும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. அதேபோல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களையும் இந்த நிறுவனம் எப்போது கொண்டுவரும் என்பதிலும் தெளிவான பதில் இல்லை.

Most Read Articles

English summary
Honda Electric Motorcycle Patent Leaks, Entry Level Affordable EV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X