சூப்பரான ஐடியா உடன் ஹோண்டா!! மோட்டோக்ராஸ் ரக மோட்டார்சைக்கிளை களமிறக்க திட்டம்!

உலகளவில் ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற அட்வென்ச்சர் ரக பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் ஜப்பானை சேர்ந்த முன்னணி மோட்டார்சைக்கிள் பிராண்டான ஹோண்டா இந்தியா நிறுவனத்திடம் தற்போதைக்கு வெறும் இரு அட்வென்ச்சர் மாடல்கள் மட்டுமே உள்ளன.

சூப்பரான ஐடியா உடன் ஹோண்டா!! மோட்டோக்ராஸ் ரக மோட்டார்சைக்கிளை களமிறக்க திட்டம்!

அதில் ஒன்று, இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சிபி500எக்ஸ். ஹோண்டாவின் மலிவான அட்வென்ச்சர் பைக்கான இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6,87,515. சற்று அதிகமாக இருப்பினும் பைக்கின் தரத்திற்கு இந்த தொகையை கொடுக்கலாம் என பைக் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மற்றொன்று, முழுக்க முழுக்க ஆஃப்-ரோடு பயணங்களுக்கு என்றே பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்ட ஆப்பிரிக்கா ட்வின்.

சூப்பரான ஐடியா உடன் ஹோண்டா!! மோட்டோக்ராஸ் ரக மோட்டார்சைக்கிளை களமிறக்க திட்டம்!

இதனாலேயே இதன் எக்ஸ்ஷோரூம் விலை சற்று அதிகமாக ரூ.15.96 லட்சமாக உள்ளது. இந்த நிலையில் ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தைக்கென சாலை, ஆஃப்-ரோடு என இரு விதமான சாலைகளிலும் பயன்படுத்தும் வகையிலான சி.ஆர்.எஃப்300எல் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

சூப்பரான ஐடியா உடன் ஹோண்டா!! மோட்டோக்ராஸ் ரக மோட்டார்சைக்கிளை களமிறக்க திட்டம்!

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹோண்டா டூ வீலர்ஸ் நிறுவனம் ட்யுல்-ஸ்போர்ட் பைக் ஒன்றிற்கான காப்புரிமையை இந்தியாவில் தாக்கல் செய்துள்ளது. இந்தியாவில் தற்போதைக்கு இவ்வாறான மோட்டார்சைக்கிள் எதுவும் விற்பனையில் இல்லை என்று தான் எண்ணுகிறேன்.

சூப்பரான ஐடியா உடன் ஹோண்டா!! மோட்டோக்ராஸ் ரக மோட்டார்சைக்கிளை களமிறக்க திட்டம்!

அட்வென்ச்சர் பைக்குகள் உள்ளன, ஆனால் இதுபோன்று இரு விதமான சாலைகளுக்கு பயன்படக்கூடிய மோட்டார்சைக்கிள்கள் இல்லை. இத்தகைய மோட்டார்சைக்கிள்களை மோட்டோக்ராஸ் என அழைப்பர். ஹோண்டா சி.ஆர்.எல்300எல் பைக்கின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 284மிமீ ஆக உள்ளது.

சூப்பரான ஐடியா உடன் ஹோண்டா!! மோட்டோக்ராஸ் ரக மோட்டார்சைக்கிளை களமிறக்க திட்டம்!

இவ்வாறான அதிக க்ரவுண்ட் க்ளியரென்ஸினால் ஓட்டுனர் இருக்கையின் உயரம் சுமார் 880மிமீ வரையில் உள்ளது. மோட்டோக்ராஸ் பைக்குகளில் பின் சக்கரம் சற்று சிறியதாக வழங்கப்படுவது வழக்கம். இந்த ஹோண்டா தயாரிப்பு வாகனத்திலும் அவ்வாறு தான் முன் சக்கரம் 21 இன்ச்சிலும், பின்சக்கரம் 18 இன்ச்சிலும் வழங்கப்படுகிறது.

சூப்பரான ஐடியா உடன் ஹோண்டா!! மோட்டோக்ராஸ் ரக மோட்டார்சைக்கிளை களமிறக்க திட்டம்!

சஸ்பென்ஷன் ட்ராவல் இரு சக்கரங்களிலும் 260மிமீ-இல் பொருத்தப்படுகிறது. இந்த ட்யுல்-ஸ்போர்ட் பைக்கில் ஹோண்டா நிறுவனம் அதிகப்பட்சமாக 27 எச்பி மற்றும் 26.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 286சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை வழங்குகிறது.

சூப்பரான ஐடியா உடன் ஹோண்டா!! மோட்டோக்ராஸ் ரக மோட்டார்சைக்கிளை களமிறக்க திட்டம்!

காப்புரிமை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இத்தகைய மோட்டார்சைக்கிளை இந்தியாவில் இந்த ஜப்பானிய நிறுவனம் அறிமுகப்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆனால் உண்மையில் இவ்வாறான மோட்டார்சைக்கிளை பயன்படுத்தும் அளவிற்கு நாம் இன்னும் வரவில்லை.

சூப்பரான ஐடியா உடன் ஹோண்டா!! மோட்டோக்ராஸ் ரக மோட்டார்சைக்கிளை களமிறக்க திட்டம்!

ஏனெனில் நமக்கு மோட்டார்சைக்கிளின் உயரம் மிகவும் முக்கியமானதாகும். சி.ஆர்.எஃப்300எல் போன்ற மோட்டோக்ராஸ் மோட்டார்சைக்கிளை ஷோரூமில் பார்த்தாலே கிட்ட செல்வதற்கு பயப்படுவீர்கள். சிபி300ஆர் போன்று சிகேடி முறையில் சந்தைப்படுத்தப்பட்டாலும் இதன் விலை குறைந்தது ரூ.2.5 லட்சத்திலாவது நிர்ணயிக்கப்படும்.

சூப்பரான ஐடியா உடன் ஹோண்டா!! மோட்டோக்ராஸ் ரக மோட்டார்சைக்கிளை களமிறக்க திட்டம்!

இத்தகைய விலையில் 300சிசி பைக்கை வாங்கவே நம்மில் பலர் யோசிப்போம். ஸ்போர்ட்ஸ் ரக பைக் என்றால் கூட ஓகே. இது நமக்கு பழக்கப்படாத மோட்டார்சைக்கிள். அறிமுகத்திற்கு பிறகே இந்த ஹோண்டா மோட்டோக்ராஸ் பைக் நம் நாட்டு சந்தையில் வெற்றியடையுமா என்பது தெரியவரும்.

Most Read Articles
English summary
Honda India files design patent for CRF300L dual-sport bike.
Story first published: Friday, June 4, 2021, 2:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X