செம சூப்பரான அம்சங்களுடன் ஹோண்டா க்ரேஸியா 125 ஸ்போர்ட்ஸ் எடிசன்!

அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய ஹோண்டா க்ரேஸியா 125 ஸ்போர்ட்ஸ் எடிசன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

செம சூப்பரான ஹோண்டா க்ரேஸியா 125 ஸ்போர்ட்ஸ் எடிசன்!

இந்தியாவின் 125 ஸ்கூட்டர் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வுகள் இருந்து வருகின்றன. இதில், ஹோண்டா க்ரேஸியா 125 ஸ்கூட்டர் கவர்ச்சிகரமான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சினுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

இந்த நிலையில்,வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும் வகையில், அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்போர்ட்ஸ் எடிசன் ஸ்கூட்டர் நைட்ஸ்டார் பிளாக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் என இரண்டு விசேஷ வண்ணங்களில் புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் டிசைனில் கிடைக்கும். இதுதவிர்த்து, டிசைனில் எந்த மாற்றங்களும் இல்லை. மேலும், ஸ்போர்ட்ஸ் எடிசன் என்பதை குறிக்கும் வாசகமும் அப்ரான் பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய ஹோண்டா க்ரேஸியா 125 ஸ்போர்ட்ஸ் எடிசன் மாடலில் 124சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.14 பிஎச்பி பவரையும், 10.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா ஈக்கோ டெக்னாலஜி மற்றும் ஆல்டர்னேட் கர்ரண்ட் ஜெனரேட்டர் ஆகிய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இதன் எஞ்சின் மிகச்சிறப்பான செயல்திறன், எரிபொருள் சிக்கனம் மற்றும் சப்தமில்லாமல் எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் வசதிகள் இடம்பெற்றுள்ளன.

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டரில் மல்டி ஃபங்ஷன் இக்னிஷன் சுவிட்ச், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அலாய் வீல்கள், வெளிப்புறத்தில் பெட்ரோல் டேங்க் மூடி மற்றும் ஐட்லிங் ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம் ஆகிய வசதிகளும் உள்ளன.

புதிய ஹோண்டா க்ரேஸியா 125 ஸ்போர்ட்ஸ் எடிசன் ஸ்கூட்டர் ரூ.82,564 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சுஸுகி பர்க்மேன் 125 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
Honda Motorcycles & Scooters India (HMSI) has introduced the new Sports Edition version of its popular Grazia 125 scooter in the market. The new Honda Grazia 125 Sports Edition is offered with a price tag of Rs 82,564, ex-showroom (Gurugram).
Story first published: Monday, January 18, 2021, 17:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X