ஹோண்டா சிபி350 பைக்கை இப்போவே வாங்கிடுங்க!! ஏப்ரலில் இருந்து விலை அதிகமாக போகுது!

ஹோண்டாவின் சமீபத்திய அறிமுகங்களுள் ஒன்றான சிபி350 பைக்கின் கடந்த 5 மாத விற்பனை குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அதேநேரம் இந்த பைக்கின் விலையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டா சிபி350 பைக்கை இப்போவே வாங்கிடுங்க!! ஏப்ரலில் இருந்து விலை அதிகமாக போகுது!

வாகன பாகங்களின் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால், தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் விற்பனை வாகனங்களின் விலைகளை உயர்த்தி வருகின்றன.

ஹோண்டா சிபி350 பைக்கை இப்போவே வாங்கிடுங்க!! ஏப்ரலில் இருந்து விலை அதிகமாக போகுது!

இந்த வகையில் தற்போது ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனமும் அதன் புதிய ஹைனெஸ் சிபி350 பைக்கின் விலையை அறிமுகத்தில் இருந்து இரண்டாவது முறையாக ரூ.5,500 அதிகரித்துள்ளது.

ஹோண்டா சிபி350 பைக்கை இப்போவே வாங்கிடுங்க!! ஏப்ரலில் இருந்து விலை அதிகமாக போகுது!

இந்த விலை உயர்வு வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது. தற்சமயம் ஜப்பானிய ஹோண்டாவின் இந்த ரெட்ரோ-கிளாசிக் மோட்டார்சைக்கிளின் விலை ரூ.1,86,500ல் இருந்து ரூ.1.92,500 வரையில் உள்ளது.

ஹோண்டா சிபி350 பைக்கை இப்போவே வாங்கிடுங்க!! ஏப்ரலில் இருந்து விலை அதிகமாக போகுது!

இந்த விலை அதிகரிப்பிற்கு ஏற்ப பைக்கில் எதாவது அப்கிரேட் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பதை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தற்போது வரையில் உறுதிப்படுத்தவில்லை. நமக்கு தெரிந்தவரையில் புதிய நிதி ஆண்டின் துவக்கத்தில் மேற்கொள்ளப்படும் வழக்கமான விலை உயர்வாகவே இது இருக்கும்.

ஹோண்டா சிபி350 பைக்கை இப்போவே வாங்கிடுங்க!! ஏப்ரலில் இருந்து விலை அதிகமாக போகுது!

ஹோண்டாவின் ப்ரீமியம் பிக்விங் நெட்வொர்க் டீலர்ஷிப் மையங்களின் மூலமாக விற்பனை செய்யப்படும் ஹைனெஸ் சிபி350 பைக் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கவனிக்கத்தக்க அளவிலான வரவேற்பை பெற்று வருகிறது.

ஹோண்டா சிபி350 பைக்கை இப்போவே வாங்கிடுங்க!! ஏப்ரலில் இருந்து விலை அதிகமாக போகுது!

ராயல் என்பீல்டு பைக்குகளை போன்று கிளாசிக் ரெட்ரோ டிசைனில், தனித்துவமான எக்ஸாஸ்ட் சத்தத்துடன் இயங்கும் திறன் கொண்டதாக உள்ள இந்த 350சிசி ஹோண்டா சிபி பைக் கடந்த 5 மாதங்களில் 13,732 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபி350 பைக்கை இப்போவே வாங்கிடுங்க!! ஏப்ரலில் இருந்து விலை அதிகமாக போகுது!

அதிகப்பட்சமாக கடந்த நவம்பர் மாதத்தில் 4,067 யூனிட்கள் இந்த பைக் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களாக 3 ஆயிரத்தை கடந்த வரும் இந்த ஹோண்டா பைக்கின் விற்பனை, விலை அதிகரிக்கப்பட்டப்போதிலும், வரும் மாதங்களிலும் சிறப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா சிபி350 பைக்கை இப்போவே வாங்கிடுங்க!! ஏப்ரலில் இருந்து விலை அதிகமாக போகுது!

அதிலும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சிபி350ஆர்எஸ் பைக்கினால் சிபி350 பைக்கின் விற்பனையும் அதிகரிக்க வாய்ப்புண்டு. இவை இரண்டிலும் 348.6சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஹோண்டா சிபி350 பைக்கை இப்போவே வாங்கிடுங்க!! ஏப்ரலில் இருந்து விலை அதிகமாக போகுது!

அதிகப்பட்சமாக 5,500 ஆர்பிஎம்-ல் 20.5 பிஎச்பி மற்றும் 3,000 ஆர்பிஎம்-ல் 30 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் க்ளட்ச் உடன் இணைக்கப்படுகிறது. சிபி350 ஐ போல் இதன் புதிய ஸ்க்ராம்ப்ளர் வெர்சனான சிபி350ஆர்எஸ்-இன் விலையும் அதிகரிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles

English summary
Honda H'ness CB350 sales cross 13,000 units planning to hike price.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X