அட்டகாசமான நிற தேர்வில் கிரேஸியா... இளைஞர்களை கவர ஹோண்டா அதிரடி நடிவடிக்கை...

ஹோண்டா நிறுவனம் அதன் கிரேஸியா ஸ்கூட்டரை அட்டகாசமான இரு புது நிற தேர்வில் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது என்ன நிறம், அதன் சிறப்பு என்ன என்பதைக் கீழே காணலாம்.

அட்டகாசமான நிற தேர்வில் கிரேஸியா... இளைஞர்களை கவர ஹோண்டா அதிரடி நடிவடிக்கை...

ஹோண்டா இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்தின் புகழ் வாய்ந்த ஸ்கூட்டர்களில் கிரேஸியாவும் ஒன்று. இந்த ஸ்கூட்டரில் புதிதாக ஸ்போர்ட்ஸ் எடிசன் எனும் தேர்வை நிறுவனம் மிக சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், கிரேஸியா ஸ்கூட்டரின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக புதிதாக கூடுதல் நிற தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

அட்டகாசமான நிற தேர்வில் கிரேஸியா... இளைஞர்களை கவர ஹோண்டா அதிரடி நடிவடிக்கை...

பியர்ல் நைட்ஸ்டார் பிளாக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் பெயிண்ட் ஆகிய நிற தேர்வுகளையே ஹோண்டா விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பியர்ல் நைட்ஸ்டார் பிளாக் நிற கிரேஸியா ஸ்கூட்டரில் ஸ்போர்ட்டி லுக்கினை அதிகப்படுத்தும் விதமாக சிவப்பு அக்சென்டுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதனை ஸ்கூட்டரின் குறிப்பிட்ட உடற்பகுதிகளில் காண முடிகின்றது.

அட்டகாசமான நிற தேர்வில் கிரேஸியா... இளைஞர்களை கவர ஹோண்டா அதிரடி நடிவடிக்கை...

இதேபோன்று, சிறப்பு அணிகலன்களை மற்றுமொரு புதிய நிற தேர்வைக் கொண்டிருக்கும் ஸ்கூட்டரில் காண முடிகின்றது. இவை ஸ்கூட்டரின் தோற்றத்தையும், ஸ்டைலையும் தூக்குதலாக்கும் வகையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவையே புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிற தேர்வுகளாகும்.

அட்டகாசமான நிற தேர்வில் கிரேஸியா... இளைஞர்களை கவர ஹோண்டா அதிரடி நடிவடிக்கை...

ஏற்கனவே மேட் ஆக்ஸிஸ் கிரே மெட்டாலிக், மேட் சைபர் மஞ்சள், பியர் சைரன் ப்ளூ மற்றும் பியர் ஸ்பார்டான் ரெட் ஆகிய நிறத் தேர்வுகளில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நான்கு நிறங்களின் வரிசையிலேயே புதிதாக இரு நிறங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

அட்டகாசமான நிற தேர்வில் கிரேஸியா... இளைஞர்களை கவர ஹோண்டா அதிரடி நடிவடிக்கை...

ஆகையால், முன்னதாக வெறும் நான்கு தேர்வுகளில் மட்டுமே கிடைத்து வந்த கிரேஸியா ஸ்கூட்டர் இப்போது ஆறு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. புதிய நிற தேர்வுகள் ஸ்கூட்டரை ஸ்போர்ட்ஸ் லுக்கில் காண்பிக்கும் வகையிலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றது.

அட்டகாசமான நிற தேர்வில் கிரேஸியா... இளைஞர்களை கவர ஹோண்டா அதிரடி நடிவடிக்கை...

எனவே, இது இளைஞர்களைக் கவர்வதற்காகவே ஹோண்டா மேற்கொண்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது. வழக்கமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் கிரேஸியா ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ. 74,815 ஆகும். அதேசமயம், இந்த ஸ்கூட்டரின் உச்சபட்ச விலை ரூ. 82,140ஆக இருக்கின்றது.

அட்டகாசமான நிற தேர்வில் கிரேஸியா... இளைஞர்களை கவர ஹோண்டா அதிரடி நடிவடிக்கை...

தற்போது அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்போர்ட்ஸ் எடிசன் ஸ்கூட்டரின் விலை ரூ. 83,140 ஆகும். ஸ்பெஷல் அணிகலன்களைத் தாங்கியிருக்கின்ற காரணத்தினால் இத்தகைய அதிக விலையை இது கொண்டிருக்கின்றது. மேலே பார்த்த அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

அட்டகாசமான நிற தேர்வில் கிரேஸியா... இளைஞர்களை கவர ஹோண்டா அதிரடி நடிவடிக்கை...

ஹோண்டா நிறுவனம் கிரேஸியா ஸ்கூட்டரில் 124 சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு எஞ்ஜினைப் பயன்படுத்தியிருக்கின்றது. இது அதிகபட்சமாக 8.14 பிஎச்பி மற்றும் 10.3 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக் கூடியது. இந்த திறன் வாய்ந்த எஞ்ஜினைப் போலவே பிற கூறுகளும் அதிக சிறப்பு வசதிகள் கொண்டதாக காட்சியளிக்கின்றன.

அட்டகாசமான நிற தேர்வில் கிரேஸியா... இளைஞர்களை கவர ஹோண்டா அதிரடி நடிவடிக்கை...

அந்தவகையில், சிறப்பான சஸ்பென்ஷன் வசதிக்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப், ட்வின் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப கருவிகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

Most Read Articles

English summary
Honda Has Introduced Additional Color Choices In The Grazia Scooter. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X