2021 இந்தியா பைக் வாரம்: ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஆண்டுநிறைவு எடிசன் அறிமுகம்!! விலை ரூ.2.03 லட்சம்

ஜப்பானிய மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஆண்டு நிறைவு எடிசன் பைக்கை 2021 இந்தியா பைக் வாரம் கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. ரூ.2.03 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஹைனெஸ் சிபி350 ஆண்டு நிறைவு எடிசன் பைக்கை பற்றி முழுமையாக இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 இந்தியா பைக் வாரம்: ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஆண்டுநிறைவு எடிசன் அறிமுகம்!! விலை ரூ.2.03 லட்சம்

பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு போட்டியாக ஹோண்டா கொண்டுவந்த மோட்டர்சைக்கிள் தான் ஹைனெஸ் சிபி350 ஆகும். இன்னும் சொல்லப்போனால், மீட்டியோர் மாடலுக்கு முன்பாகவே சந்தையில் சிபி350 அறிமுகப்படுத்தப்பட்டது.

2021 இந்தியா பைக் வாரம்: ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஆண்டுநிறைவு எடிசன் அறிமுகம்!! விலை ரூ.2.03 லட்சம்

ஆனால் உண்மையில், மீட்டியோர் 350 பைக்கை ராயல் என்பீல்டு விற்பனை செய்த அளவிற்கு சிபி350 பைக்கை ஹோண்டா விற்பனை செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும் இந்திய சந்தையில் ஹைனெஸ் சிபி350 பைக்கின் முதலாம் ஆண்டு நிறைவை புதிய ஸ்பெஷல் எடிசன் உடன் கொண்டாட ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

2021 இந்தியா பைக் வாரம்: ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஆண்டுநிறைவு எடிசன் அறிமுகம்!! விலை ரூ.2.03 லட்சம்

கடந்த 12 மாதங்களில் மொத்தம் 35,000 ஹைனெஸ் சிபி350 பைக்குகளை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. பேர்ல் இக்னியஸ் கருப்பு மற்றும் மேட் மார்ஷல் க்ரீன் மெட்டாலிக் என்ற இரு விதமான நிறத்தேர்வுகளில் இந்த ஸ்பெஷல் எடிசன் பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நிறைவு எடிசனில், ஹோண்டாவின் லோகோவும், ஹைனெஸ் மாடலின் முத்திரையும் தங்க நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

2021 இந்தியா பைக் வாரம்: ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஆண்டுநிறைவு எடிசன் அறிமுகம்!! விலை ரூ.2.03 லட்சம்

மேலும் இந்த தங்க நிறத்தை பெட்ரோல் டேங்க் பகுதியில் பின் ஸ்ட்ரிப்பாகவும், ஆண்டு நிறைவு எடிசன் லோகோ ஆகவும் பார்க்க முடிகிறது. அதேபோல் பழுப்பு நிற பிளவுப்பட்ட இருக்கை அமைப்பு, க்ரோம் சைடு ஸ்டாண்ட், பைக்கின் நிறத்தில் முன் & பின்பக்க மட்கார்ட்கள் மற்றும் ஹேண்டில்பார் அச்சு உள்ளிட்டவையும் புதியவைகளாகும்.

2021 இந்தியா பைக் வாரம்: ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஆண்டுநிறைவு எடிசன் அறிமுகம்!! விலை ரூ.2.03 லட்சம்

புதிய ஹைனெஸ் சிபி350 ஆண்டு நிறைவு எடிசனின் அறிமுகம் குறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், சிஇஓ-வுமான அட்சுஷி ஒகடா கருத்து தெரிவிக்கையில், இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து வாடிக்கையாளர்களின் அன்பையும், நம்பிகையையும் கொண்டாடும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள ஹைனெஸ் சிபி350-இன் ஆண்டு நிறைவு சிறப்பு பதிப்பானது அதன் ரைடர்ஸ் சமூகத்தின் பெருமையை வெளிப்படுத்தும் என்றார்.

2021 இந்தியா பைக் வாரம்: ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஆண்டுநிறைவு எடிசன் அறிமுகம்!! விலை ரூ.2.03 லட்சம்

பிறகு ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் யத்விந்தர் சிங் குலேரியா பேசுகையில், எங்களின் சிபி பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், முற்றிலும் புதிய ஹைனெஸ் சிபி350 பைக் கடந்த ஆண்டு (2020) இந்தியாவில் இருந்து உலகளவில் வெளியிடப்பட்டது.

2021 இந்தியா பைக் வாரம்: ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஆண்டுநிறைவு எடிசன் அறிமுகம்!! விலை ரூ.2.03 லட்சம்

2021 இந்தியா பைக் வாரம் கண்காட்சியில், இந்த ஹைனெஸ் பைக்கின் முதல் தோற்றத்திற்கு ரைடிங் சமூகத்தினரிடம் இருந்து கிடைத்துவரும் அற்புதமான வரவேற்பை கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்று, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதன் மூலமும், ஹைனெஸ் ஆர்வலர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை புகுத்தும் ஹைனெஸ் ஆண்டு நிறைவு எடிசனின் வெளியீட்டை அறிவிப்பதன் மூலமும் இந்த அற்புதமான வரவேற்பை கொண்டாடுகிறோம் என்றார்.

2021 இந்தியா பைக் வாரம்: ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஆண்டுநிறைவு எடிசன் அறிமுகம்!! விலை ரூ.2.03 லட்சம்

இயந்திர பாகங்களை பொறுத்தவரையில் சிபி350 ஆண்டு நிறைவு எடிசனில் எந்த மாற்றமும் இல்லை. இந்த புதிய ஹைனெஸ் பைக்கிலும் வழக்கமான 348.38சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினே பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 5,500 ஆர்பிஎம்-இல் 20.8 பிஎச்பி மற்றும் 3000 ஆர்பிஎம்-இல் 30 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், உதவி ஸ்லிப்பர் க்ளட்ச் உடன் இணைக்கப்படுகிறது.

2021 இந்தியா பைக் வாரம்: ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஆண்டுநிறைவு எடிசன் அறிமுகம்!! விலை ரூ.2.03 லட்சம்

இதில் உதவி ஸ்லிப்பர் க்ளட்ச் ஆனது கியர்களை குறைத்து கொண்டிருக்கும் சமயத்தில், திடீரென கொடுக்க வேண்டிய பிரேக்கின்போது ஏற்படும் விரும்பத்தகாத அதிர்வுகளை குறைக்கிறது. மேலும், அடிக்கடி கியரை மாற்ற வேண்டிய பயணங்களின் போதும் குறைவான பயண சோர்வு மற்றும் அதிக சவுகரியத்தை இத்தகைய க்ளட்ச் உறுதி செய்கிறது.

2021 இந்தியா பைக் வாரம்: ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஆண்டுநிறைவு எடிசன் அறிமுகம்!! விலை ரூ.2.03 லட்சம்

ஹோண்டா சிபி350 பைக்கின் புதிய ஆண்டு நிறைவு எடிசனில் வழங்கப்பட்டுள்ள மற்ற அம்சங்களாக, முழு எல்இடி விளக்குகள் மற்றும் இயக்கத்தின்போது என்ஜினின் அதிர்வை குறைக்கும் மத்திய தண்டு அச்சுவை சொல்லலாம். ப்ளூடூத் இணைப்பை கொண்ட செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரின் மூலம் எரிபொருள் அளவு, கியரின் நிலைப்பாடு, நேரம் மற்றும் எரிபொருள் பயன்படுத்தப்படும் அளவு உள்ளிட்டவற்றையும் தெரிந்து கொள்ளாம்.

2021 இந்தியா பைக் வாரம்: ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஆண்டுநிறைவு எடிசன் அறிமுகம்!! விலை ரூ.2.03 லட்சம்

இந்தியா பைக் வாரம் கண்காட்சியில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹைனெஸ் சிபி350 ஆண்டு நிறைவு எடிசன் பைக்கிற்கான முன்பதிவுகளையும் இன்றில் (டிச.4) இருந்து ஹோண்டா துவங்கியுள்ளது. ஹோண்டாவின் பிக்விங் டீலர்ஷிப்கள் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ள இந்த ஸ்பெஷல் சிபி350 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.2.03 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே கூறிவிட்டோம்.

Most Read Articles

English summary
Honda launches H’ness Anniversary Edition, Sets the stage for new CB300R BSVI at India Bike Week 2021
Story first published: Saturday, December 4, 2021, 23:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X