ஹோண்டாவின் 2022 மங்கி 125 மினி பைக்!! இந்தியாவிற்கு வர வாய்ப்பே இல்லையாம்...

2022 ஹோண்டா மங்கி (Monkey) 125சிசி மினி பைக் புதிய என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் உடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஹோண்டா மினி பைக்கை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டாவின் 2022 மங்கி 125 மினி பைக்!! இந்தியாவிற்கு வர வாய்ப்பே இல்லையாம்...

மினி பைக்குகள் உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய மினி பைக்குகளை வடிவமைத்து அவற்றை விற்பனை செய்வதில் ஜப்பானை சேர்ந்த ஹோண்டா டூவீலர்ஸ் நிறுவனம் முதன்மையானதாக உள்ளது.

ஹோண்டாவின் 2022 மங்கி 125 மினி பைக்!! இந்தியாவிற்கு வர வாய்ப்பே இல்லையாம்...

இந்தியாவில் இந்த நிறுவனம் ஹோண்டா நாவி என்ற மினி பைக்கை விற்பனைக்கு கொண்டுவந்தது. ஆனால் நமது இந்தியர்களுக்கு மினி பைக்குகளின் மீது பெரிய அளவில் ஆர்வம் இல்லாததினால் ஹோண்டா நாவியை கண்டுக்கொள்ளவில்லை, இதன் எதிரொலியாக அதன் விற்பனை நிறுத்தி கொள்ளப்பட்டது.

ஹோண்டாவின் 2022 மங்கி 125 மினி பைக்!! இந்தியாவிற்கு வர வாய்ப்பே இல்லையாம்...

ஆனால் வெளிநாடுகளில் மினி பைக் பிரியர்கள் அதிகளவில் உள்ளனர். குறிப்பாக சீனா, தென் கொரியா போன்ற மக்கள் அடர்த்தி மிகுந்த நாடுகளில் மினி பைக்குகளின் விற்பனை நல்லப்படியாக இருந்து வருகிறது. இதனால் தான் தைரியமாக 2022 மங்கி 125 என்ற மினி-மோட்டோ பைக்கை ஹோண்டா நிறுவனம் உலகளவில் வெளியிட்டுள்ளது.

ஹோண்டாவின் 2022 மங்கி 125 மினி பைக்!! இந்தியாவிற்கு வர வாய்ப்பே இல்லையாம்...

பழைய மாடல் உடன் ஒப்பிடுகையில் புதிய மங்கி வழக்கமான தோற்றத்தையே கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களை கவர வாழைப்பழ மஞ்சள், பேர்ல் நெபுலா சிவப்பு மற்றும் புதிய பளபளக்கும் நீலம் என புதியதாக 3 வெவ்வேறான நிறங்களில் பெயிண்ட் தேர்வுகள் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளன.

ஹோண்டாவின் 2022 மங்கி 125 மினி பைக்!! இந்தியாவிற்கு வர வாய்ப்பே இல்லையாம்...

2022 மங்கியும் வழக்கமான ஸ்டீல்போன் ஃப்ரேமில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. 1960களில் இருந்து மினி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அப்போது அவை கொண்டிருந்த ஸ்டைலிங் பாகங்களை இந்த 2022 ஹோண்டா மங்கி 125 பைக்கிலும் பார்க்க முடிகிறது.

ஹோண்டாவின் 2022 மங்கி 125 மினி பைக்!! இந்தியாவிற்கு வர வாய்ப்பே இல்லையாம்...

புதிய மங்கி 125 பைக்கிற்கு கவர்ச்சிகரமான தோற்றத்தை வழங்கக்கூடியவைகளாக சற்று மேலாக பொருத்தப்பட்டுள்ள க்ரோம்டு மட்கார்டையும், மேல் நோக்கி வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் அதன் மேற்புறத்தில் எக்ஸாஸ்ட்டின் சூட்டில் இருந்து பாதுகாக்க வழங்கப்பட்டுள்ள க்ரோம்டு பாதுகாப்பானையும் சொல்லலாம்.

ஹோண்டாவின் 2022 மங்கி 125 மினி பைக்!! இந்தியாவிற்கு வர வாய்ப்பே இல்லையாம்...

இவற்றுடன் பின்பக்கத்தில் 3 கிலோ வரையில் எடை கொண்ட பொருட்களை வைக்க இரும்பு கேரியர் ஒன்றையும் 2022 மங்கி 125 மினி பைக்கிற்கு கூடுதல் ஆக்ஸஸரீயாக ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது. வெறும் 104 கிலோ மட்டுமே எடை கொண்டதாக உள்ள இந்த பைக்கில் ஓட்டுனர் இருக்கை தரையில் இருந்து 775மிமீ உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ஹோண்டாவின் 2022 மங்கி 125 மினி பைக்!! இந்தியாவிற்கு வர வாய்ப்பே இல்லையாம்...

பைக்கின் அளவை பொறுத்து, புதிய மங்கி 125சிசி-யில் முன்பக்கத்தில் 100மிமீ ட்ராவல் உடன் யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் திருத்தியமைக்கப்பட்ட டேம்பர் ரப்பர்கள் மற்றும் இரு-நிலை சுருள்களுடன் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஹோண்டாவின் 2022 மங்கி 125 மினி பைக்!! இந்தியாவிற்கு வர வாய்ப்பே இல்லையாம்...

புதிய ஹோண்டா மங்கி மினி-பைக்கில் 124சிசி எஸ்.ஒ.எச்.சி இரட்டை-வால்வு, ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 9.4 பிஎச்பி மற்றும் 11 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. முந்தைய மங்கி மினி-பைக்கில் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
2022 Honda Monkey 125cc Debuts With New Engine, Gearbox.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X