3 சக்கரங்கள் கொண்ட ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்... சரக்குகளை ஏற்றி செல்வது ரொம்ப சுலபம்...

ஹோண்டா நிறுவனம் கைரோ எனும் பெயரில் மூன்று சக்கர மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

3 சக்கரங்கள் கொண்ட ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்... சரக்குகளை ஏற்றி செல்வது ரொம்ப சுலபம்...

ஹோண்டா நிறுவனம் அதன் தாய் நாடான ஜப்பானில் ஓர் தரமான மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இருசக்கர வாகன அடிப்படையிலான முச்சக்கர வாகனத்தையே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஓர் கார்கோ வாகனம் ஆகும். அதாவது, சரக்கு ஏற்று செல்வதற்கு உகந்த வாகனம்.

3 சக்கரங்கள் கொண்ட ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்... சரக்குகளை ஏற்றி செல்வது ரொம்ப சுலபம்...

ஹோண்டா கைரோ எனும் பெயரில் இவ்வாகனம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. அந்நாட்டு மதிப்பில் 5,50,000 என அதற்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 3.66 லட்சம் ஆகும். இந்த வாகனத்தில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

3 சக்கரங்கள் கொண்ட ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்... சரக்குகளை ஏற்றி செல்வது ரொம்ப சுலபம்...

பின்பக்க பயணியின் இருக்கைக்குப் பதிலாக கேரியர் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் டெலிவரி சேவைக்கும் உதவும் வகையில் இக்கேரியர் அமைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 30 கிலோவிற்கும் அதிக எடையுள்ள பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

3 சக்கரங்கள் கொண்ட ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்... சரக்குகளை ஏற்றி செல்வது ரொம்ப சுலபம்...

இந்த சிறப்பு வசதிக் கொண்ட வாகனத்தையே ஹோண்டா வரும் 25ம் தேதியில் இருந்து ஜப்பானில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இந்த மின்சார ஸ்கூட்டரில் 20.8Ah ஸ்வாப்பபிள் (கழட்டி மாட்டிக் கொள்ளும் வசதி) பேட்டரியை ஹோண்டா பயன்படுத்தியுள்ளது.

3 சக்கரங்கள் கொண்ட ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்... சரக்குகளை ஏற்றி செல்வது ரொம்ப சுலபம்...

ஆகையால், சார்ஜ் தீர்ந்துவிட்டால் பேட்டரியை தனியாகக் கழட்டி அதை வீட்டில் வைத்தோ அல்லது அலுவலகங்களில் வைத்தோ சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 72 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

3 சக்கரங்கள் கொண்ட ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்... சரக்குகளை ஏற்றி செல்வது ரொம்ப சுலபம்...

தொடர்ந்து, இவ்வாகனத்தில் 3.2kW திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 13 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த மின்சார வாகனத்தின் முன்பக்கத்தில் 12 இன்சிலான அலாய் வீல் மற்றும் டெலிஸ்கோபிக் ஃபோர்க் பயன்படுத்தப்பட்டுள்ளன.

3 சக்கரங்கள் கொண்ட ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்... சரக்குகளை ஏற்றி செல்வது ரொம்ப சுலபம்...

இதன் பின் வீலில் 8 இன்ச் அளவிலான இரு வீல்கள் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், பிரேக்கிங் வசதிக்காக அனைத்து வீல்களிலும் டிரம் பிரேக்குகளே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது ஓர் கார்கோ கர வாகனம் என்பதால் லக்கேஜை ஏற்றி செல்வதற்கு டிரால்லி போன்ற ரேக் வழங்கப்பட்டிருக்கின்றது.

3 சக்கரங்கள் கொண்ட ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்... சரக்குகளை ஏற்றி செல்வது ரொம்ப சுலபம்...

இதிலேயே இரு பின் வீல்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதில் தேவையான லக்கேஜ், மருந்து போன்ற பிற அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்ல முடியும். இந்த ஸ்கூட்டரின் உருவம் சற்று மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்பதற்காக, முன்பக்கத்தில் விநோத தோற்றம் கொண்ட மின் விளக்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

3 சக்கரங்கள் கொண்ட ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்... சரக்குகளை ஏற்றி செல்வது ரொம்ப சுலபம்...

இது எல்இடி தரத்திலான ஹெட்லைட் ஆகும். இத்துடன், ரிவர்ஸ் மற்றும் பார்க்கிங் லாக் வசதிகளும் இவ்வாகனத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற எக்கசக்க வசதிகளை இவ்வாகனம் பெற்றிருக்கின்ற காரணத்தினால் இவ்வாகனம் ஜப்பான் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

3 சக்கரங்கள் கொண்ட ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்... சரக்குகளை ஏற்றி செல்வது ரொம்ப சுலபம்...

ஆகையால், இந்த வாகனத்தை ஆண்டு ஒன்றிற்கு 1,500 யூனிட்டுகளை விற்பனைச் செய்யும் திட்டத்தில் ஹோண்டா இருக்கின்றது. ஹோண்டா நிறுவனம் இந்த மின்சார அழகான கைரோ இ வாகனத்தை இந்தியாவில் களமிறக்குமவது சந்தேகமே. இந்திய சாலைக்கு இந்த வாகனம் ஒத்துழைக்குமா என்பதில் பெருத்த சந்தேகம் நிலவுகின்றது. இதுவே இவ்வாகனம் களமிறங்குவதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles

English summary
Honda Launched 2021 Gyro e-Scooter In Japan. Read In Tamil.
Story first published: Sunday, March 21, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X