அடேங்கப்பா!.. ரூ. 6.87 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்கியது ஹோண்டா... இது எந்த பைக்கிற்கு போட்டி தெரியுமா?..

மிக மிக அதிக விலைக் கொண்ட மோட்டார்சைக்கிள் ஒன்றை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

அடேங்கப்பா!.. ரூ. 6.87 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்கியது ஹோண்டா... இது எந்த பைக்கிற்கு போட்டி தெரியுமா?..

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா புதிய அதிக விலைக் கொண்ட பைக் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சிபி500எக்ஸ் பெயர் கொண்ட பைக்கையே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

அடேங்கப்பா!.. ரூ. 6.87 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்கியது ஹோண்டா... இது எந்த பைக்கிற்கு போட்டி தெரியுமா?..

இதன் அறிமுக விலையாக ரூ. 6,87,386 நிர்யணிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சபட்ச விலையிலேயே இப்புதிய பைக் இந்தியாவில் விற்பனைக் கிடைக்க இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹோண்டா சிபி500எக்ஸ் பைக் ஓர் பிரீமியம் தரத்திலான அட்வென்சர் டூரர் ரக இருசக்கர வாகனமாகும்.

அடேங்கப்பா!.. ரூ. 6.87 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்கியது ஹோண்டா... இது எந்த பைக்கிற்கு போட்டி தெரியுமா?..

இதன் அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது இப்பைக்கிற்கான புக்கிங் தொடங்கியிருக்கின்றது. ஆகையால், ஹோண்டாவின் பிரீமியம் தர வாகன விற்பனையாளர்கள் தற்போது இப்பைக்கிற்கான முன் பதிவைத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால், இதற்கான முன்தொகை எவ்வளவு என்பது தெரியவில்லை.

அடேங்கப்பா!.. ரூ. 6.87 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்கியது ஹோண்டா... இது எந்த பைக்கிற்கு போட்டி தெரியுமா?..

புதிய ஹோண்டா சிபி500எக்ஸ் பைக் இந்தியாவில் சிகேடி வாயிலாகவே விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. அதாவது, இப்பைக்கிற்கான உதிரிபாகங்கள் அனைத்தும் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு அவற்றை இந்தியாவில் இறக்குமதி செய்து கட்டமைத்து விற்பனைச் செய்ய இருக்கின்றது ஹோண்டா. இதுவே சிகேடி வாயிலாக விற்பனைச் செய்யும் முறையாகும்.

அடேங்கப்பா!.. ரூ. 6.87 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்கியது ஹோண்டா... இது எந்த பைக்கிற்கு போட்டி தெரியுமா?..

ஹோண்டா சிபி500எக்ஸ் பைக் இரு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும். கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் ஆகிய நிறங்களே அவை ஆகும். இந்தியாவில் தற்போது அட்வென்சர்-டூரர் பிரிவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கவாஸாகி வெர்சிஸ் 650, சுசுகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி மற்றும் பெனெல்லி டிஆர்கே 502 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக இப்பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அடேங்கப்பா!.. ரூ. 6.87 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்கியது ஹோண்டா... இது எந்த பைக்கிற்கு போட்டி தெரியுமா?..

ஹோண்டா நிறுவனம் சிபி500எக்ஸ் பைக்கில் 471சிசி திறன் வசதிக் கொண்ட 8 வால்வ், லிக்யூடு-கூல்டு, பாரல்லல் ட்வின் சிலிண்டரை பயன்படுத்தியிருக்கின்றது. இது அதிகபட்சமாக 47 பிஎச்பியை 8,500 ஆர்பிஎம்மிலும், 43.2 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். இந்த எஞ்ஜின் ஸ்லிப்பர் கிளட்ச் வசதிக் கொண்ட 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும்.

அடேங்கப்பா!.. ரூ. 6.87 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்கியது ஹோண்டா... இது எந்த பைக்கிற்கு போட்டி தெரியுமா?..

இந்த புதுமுக பைக்கில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்; மிக உயரமான விண்ட் ஸ்கிரீன், எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், எல்இடி மின் விளக்குகள், சிங்கிள் பீஸ் சேட்டில் மற்றும் அலாய் வீல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசிகள் இப்பைக்கில் இடம்பெற்றிருக்கின்றன.

அடேங்கப்பா!.. ரூ. 6.87 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்கியது ஹோண்டா... இது எந்த பைக்கிற்கு போட்டி தெரியுமா?..

தொடர்ந்து ட்யூவ் சேனல் ஏபிஎஸ், அவசரகால நிறுத்தும் வசதி மற்றும் ஹோண்டா இக்னிஷன் செக்யூரிட்டி சிஸ்டம் என எக்கசக்க பிரமீயம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கில் இடம்பெற்றிருக்கின்றன. இதுபோன்ற தரமான அம்சங்களை இப்பைக் தன்னுள் தாங்கியிருக்கின்ற காரணத்தினாலயே மிக அதிக விலைக் கொண்ட பைக்காக இது களமிறங்கியிருக்கின்றது.

Most Read Articles

English summary
Honda Launches CB500X In India At Rs. 6.87 Lakh. Read In Tamil.
Story first published: Monday, March 15, 2021, 15:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X