புதிய ஸ்டைலில் Honda Grazia 125! வழக்கமான மாடலை விட இது செம்ம ஸ்டைலா இருக்கு... விலை எவ்வளவு?

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா அதன் கிரேஸியா ஸ்கூட்டர் புதிய சிறப்பு பதிப்பு ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் காணலாம், வாங்க.

புதிய ஸ்டைலில் Honda Grazia 125! வழக்கமான மாடலை விட இது செம்ம ஸ்டைலா இருக்கு... விலை எவ்வளவு?

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனம் (Honda Motorcycle & Scooter India Pvt Ltd) இந்திய இருசக்கர வாகன சந்தையில் புதிய உருவ தோற்றம் கொண்ட கிரேஸியா 125 (Grazia 125) ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. கிரேஸியா 125 ரெப்சோல் ஹோண்டா டீம் எடிசன் (Grazia 125 Repsol Honda Team Edition) எனும் பெயரில் புதிய இருசக்கர வாகனம் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

புதிய ஸ்டைலில் Honda Grazia 125! வழக்கமான மாடலை விட இது செம்ம ஸ்டைலா இருக்கு... விலை எவ்வளவு?

இந்திய மதிப்பில் இந்த இருசக்கர வாகனத்திற்கு ரூ. 87,138 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குருகிராம் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆன்-ரோடில் இன்னும் சில ஆயிரங்கள் சேர்க்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. வழக்கமான மாடலைக் காட்டிலும் பல மடங்கும் ஸ்போர்ட்டி தோற்றம் கொண்டதாக இச்சிறப்பு பதிப்பு கிரேஸியா 125 உள்ளது.

புதிய ஸ்டைலில் Honda Grazia 125! வழக்கமான மாடலை விட இது செம்ம ஸ்டைலா இருக்கு... விலை எவ்வளவு?

மிகவும் துடிப்பான நிறம் மற்றும் அணிகலன்களால் இவ்வாகனம் அலங்கரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இளைஞர்களைக் கவரும் நோக்கில் இவ்வாகனத்தை நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதற்காக ஆரஞ்சு, சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களை ஹோண்டா பயன்படுத்தியுள்ளது.

புதிய ஸ்டைலில் Honda Grazia 125! வழக்கமான மாடலை விட இது செம்ம ஸ்டைலா இருக்கு... விலை எவ்வளவு?

நிறுவனம் ஆரஞ்சு நிறத்தை இரு வீல்களிலும் பயன்படுத்தியிருப்பது வாகனத்தை கூடுதல் கவர்ச்சியானதாக தென்படச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இத்துடன், ரெப்சோல் எனும் கிராஃபிக் ஸ்டிக்கர்கள் இருசக்கர வாகனத்தின் முன் மற்றும் பக்கவாட்டு பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுடன், இன்னும் பல சிறப்பு அணிகலன்கள் புதிதாக புகுத்தப்பட்டிருக்கின்றன.

புதிய ஸ்டைலில் Honda Grazia 125! வழக்கமான மாடலை விட இது செம்ம ஸ்டைலா இருக்கு... விலை எவ்வளவு?

வழக்கமான மாடல் கிரேஸியாவிற்கும், புதிய ரெப்சோல் எடிசன் கிரேஸியாவிற்கும் இடையில் அலங்கரிப்பு வித்தியாசங்கள் மட்டுமே தென்படுகின்றன. ஆகையால், உருவம், எஞ்ஜின் என உள்ளிட்ட பிறவற்றில் இரண்டும் ஒரே மாதிரியானதாக தென்படுகின்றன. எல்இடி டிசி ஹெட்லேம்ப், மின் விளக்கிற்கு மேற்பகுதியில் ஓர் எல்இடி மின்விளக்கு, சைடு போட்டி இருந்தால் எச்சரிக்கும் வசதி மற்றும் எஞ்ஜினை ஆஃப் செய்யும் தொழில்நுட்பம் ஆகியவை இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

புதிய ஸ்டைலில் Honda Grazia 125! வழக்கமான மாடலை விட இது செம்ம ஸ்டைலா இருக்கு... விலை எவ்வளவு?

இத்துடன், இன்டலிஜென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மூன்று வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக் கூடிய சஸ்பென்ஷன் பின்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, சிறந்த பிரேக்கிங் வசதிக்காக பைக்கின் முன் பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் ட்ரம் பிரேக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

புதிய ஸ்டைலில் Honda Grazia 125! வழக்கமான மாடலை விட இது செம்ம ஸ்டைலா இருக்கு... விலை எவ்வளவு?

ஹோண்டா கிரேஸியா 125 ஸ்கூட்டரில் ப்யூவல் இன்ஜெக்சன் திறன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் ஐடிலிங் ஸ்டாப் வசதிக் கொண்டது. இத்துடன், இஎஸ்பி (Enhanced Smart Power) தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் மிக சிறந்த மைலேஜ் திறன் மற்றும் எஞ்ஜின் ஆயுளை வழங்க உதவும். தொடர்ந்து, குறைந்த மாசுபாட்டிற்கு இவை உதவுகின்றன.

புதிய ஸ்டைலில் Honda Grazia 125! வழக்கமான மாடலை விட இது செம்ம ஸ்டைலா இருக்கு... விலை எவ்வளவு?

இந்த 125 சிசி எஞ்ஜின் அதிகபட்சமாக 8.25 பிஎஸ் பவரை 6,000 ஆர்பிஎம்மிலும், 10.3 என்எம் டார்க்கை 5,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதே திறன் கொண்ட எஞ்ஜினே வழக்கமான கிரேஸியாவிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. வழக்கமான கிரேஸியா மற்றும் புதிய ரெப்சோல் எடிசன் கிரேஸியா ஆகிய இரண்டும் ஒரே திறனை வெளிப்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

புதிய ஸ்டைலில் Honda Grazia 125! வழக்கமான மாடலை விட இது செம்ம ஸ்டைலா இருக்கு... விலை எவ்வளவு?

புதிய கிரேஸியா 125 ரெப்சோல் ஹோண்டா டீம் எடிசன் ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்து, ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குனர் யத்விந்தர் சிங் குலேரியா கூறியதாவது, "கிரேஸியா ரெப்சோல் 125 ஹோண்டா டீம் எடிஷனின் வெளியீடு பந்தயத்தின் உணர்வைக் கொண்டு வரும் வகையில் அமைந்தள்ளது. மோட்டோ ஜிபி (MotoGP) ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்போர்ட்டியர் தோற்றம் பந்தய ஆர்வலர்களுக்கு தவிர்க்க முடியாத தொகுப்பாக அமைகிறது" என்றார்.

Most Read Articles

English summary
Honda launches grazia 125 repsol honda team edition in india at rs 87138
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X