Just In
- 4 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 5 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 6 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 6 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- News
ஒட்டுமொத்த நாடும் தேடும் 'அந்த' ஒற்றை நபர்... பிரிட்டனில் பரபரப்பு... காரணம் இதுதான்
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Lifestyle
உங்க திருமண வாழ்க்கை சூப்பராக இருக்கிறது என்பதை உணர்த்தும் உடல் மொழிகள் இதுதானாம்...!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நீங்க லாங் டிரைவ் செய்பவரா? நீண்ட தூர பயணங்களுக்கான ஹோண்டாவின் புதுமுக பைக் அறிமுகம்... முழு விபரம்!
ஹோண்டா நிறுவனம் சிபி350 ஆர்எஸ் எனும் புதுமுக பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் பிற தகவல்களைக் கீழே காணலாம்.

ஹோண்டா நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமான ஹைனெஸ் சிபி350 பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் தற்போது அமோகமான வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதாவது, ஹோண்டா நிறுவனமே திக்கமுக்காடும் வகையில் இப்பைக்கிற்கான புக்கிங்கை மிக அமோகமாக கிடைத்து வருகின்றது.

இந்த நிலையில் ஹோண்டா சிபி350 மாடலில் புதிய தேர்வை வழங்கும் விதமாக சிபி350 ஆர்எஸ் எனும் புதுமுக மாடலை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 1.96 லட்சம் என நிர்ணயித்துள்ளது ஹோண்டா. ஆர்எஸ் என்பது ரோட் செயிலிங் என்ற வார்த்தையைக் குறிக்கின்றது. சாலையில் மிதப்பதைப் போன்ற அனுபவத்தை இந்த வாகனம் வழங்கும் என்பதே இதன் பொருளாகும்.

எனவேதான் இந்த வார்த்தையை சிபி350 எனும் பெயருக்கு பின்னாடி ஹோண்டா சேர்த்திருக்கின்றது. நீண்ட மற்றும் நெடுந்தூர அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற வாகனம் என ஹோண்டா இதனை பெருமைக் கொண்டாடுகின்றது. தொடர்ந்து பைக்கின் அறிமுகத்தை அடுத்து புக்கிங்கையும் நிறுவனம் தொடங்கியிருக்கின்றது.

ஹோண்டாவின் பிக்விங் டீலர்கள் வாயிலாகவும், ஆன்லைன் வாயிலாகவும் இப்பைக்கிற்கான புக்கிங் நடைபெற்று வருகின்றது. இந்த இருசக்கர வாகனத்தில் 350சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக் ஓஎச்சி சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினையே நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இது ஜிபிஎம்-எஃப்ஐ தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட எஞ்ஜின் ஆகும்.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 15.5 கிலோவாட் திறனையும், 30 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதிகளை இது கொண்டிருக்கின்றது. தொடர்ந்து, அட்வான்ஸ்ட் திறன் கொண்ட டிஜிட்டல் அனலாக் ஸ்பீடோ மீட்டர் போன்ற கூடுதல் சிறப்பு கருவிகளையும் ஹோண்டா சிபி350 ஆர்எஸ் பைக் பெற்றிருக்கின்றது.

இதுதவிர, ஸ்பீடைப் பொருத்து டிராக்ஷனைக் கட்டுப்படுத்தக் கூடிய தொழில்நுட்பம், ப்யூவல் இன்ஜெக்ஷன் வசதி என பல்வேறு கவர்ச்சிகரமான வசதிகளையும் இந்த வாகனம் பெற்றிருக்கின்றது. இதில் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள் வேண்டுமானாலும் புதிய நவீன யுகத்திலானதாக இருக்கலாம், ஆனால், இதன் தோற்றம் ரெட்ரோ-மாடர்ன் ரகத்திலானதாகும்.

எனவே, இதன் தோற்றத்தைத் தவிர இதில் இடம்பெற்றிருக்கும் அனைத்து வசதிகளும் மாடர்ன் தொழில்நுட்பத்திலானது என்பது தெளிவாக தெரிகின்றது. இதன் இருக்கையை மிகவும் அதிக மிருதுவமானதாக ஹோண்டா வழங்கியிருக்கின்றது. எனவேதான் இதில் நீண்ட தூர ரைட் செய்வது மிக அலாதியான உணர்வை வழங்கும் என நிறுவனம் கூறுகின்றது.

தொடர்ந்து, ரைடிங் அனுபவத்தை மிகவும் சுவாரஷ்யமானதாக மாற்றும் வகையில் சஸ்பென்ஷன், கியர் அமைப்பு மற்றும் ரைடிங் பொஷிஷன் உள்ளிட்டவற்றை ஹோண்டா கட்டமைத்திருக்கின்றது. இந்த பைக்கை இந்தியர்களுக்காக மட்டுமே ஸ்பெஷலாக இந்தியாவில் வைத்து உருவாக்கியிருக்கின்றது ஹோண்டா. குறிப்பாக, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கிடைத்து வரும் இடத்தை தனக்குரித்தானதாக மாற்றும் நோக்கில் இத்தகைய நடவடிக்கையை அது மேற்கொண்டிருக்கின்றது.

புதிய ஹோண்டா சிபி350 ஆர்எஸ் பைக் இரு விதமான நிற தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கி இருக்கின்றது. ரேடியன்ட் ரெட் மெட்டாலிக் மற்றும் கருப்பு நிறத்திலான பியர் ஸ்போர்ட்ஸ் மஞ்சள் ஆகிய இரு நிறங்களில் மட்டுமே இப்பைக் விற்பனைக்குக் களமிறங்கியிருக்கின்றது.