மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஹோண்டா! ஆனா நம்ம நாட்ல இல்ல! எங்கு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!

ஹோண்டா நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒன்றை குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அது எந்த நாட்டில் என்பது பற்றிய தகவலையும், ஸ்கூட்டரின் விலை பற்றிய தகவலையும் இப்பதிவில் காணலாம், வாங்க.

மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஹோண்டா... ஆனா நம்ம நாட்ல இல்ல... எங்கு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!!

ஹோண்டா நிறுவனம் புதிதாக யு-கோ (U-GO) எனும் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது மற்றுமொரு இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான உயாங் (Wuyang) எனும் சீன நிறுவனத்தின் வாயிலாக இந்த வாகனத்தை ஹோண்டா அறிமுகம் செய்திருக்கின்றது.

மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஹோண்டா... ஆனா நம்ம நாட்ல இல்ல... எங்கு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!!

நகர பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், இலகு ரக எடை, சிறந்த திறன் வெளிப்பாடு மற்றும் சூப்பர் வசதிகள் என பல சிறப்பம்சங்களை யு-கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றிருக்கின்றது.

மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஹோண்டா... ஆனா நம்ம நாட்ல இல்ல... எங்கு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!!

இரு விதமான தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிக வேகம் கொண்ட மாடல் மற்றும் குறைந்த வேகம் கொண்ட மாடல் என இரு விதமான தேர்வுகளிலேயே அது அறிமுகமாகியிருக்கின்றன. ஹோண்டா யு-கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1.2kW தர மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஹோண்டா... ஆனா நம்ம நாட்ல இல்ல... எங்கு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!!

இது அதிகபட்சமாக 1.8kW வரையிலன திறனை வெளியேற்றும். இது டாப் ஸ்பீடு மாடலில் இடம் பெற்றிருக்கும் மின் மோட்டாரின் திறனாகும். இந்த மின் மோட்டார் மணிக்கு 53 கிமீ எனும் வேகத்தில் செல்லக் கூடியது. இதன் குறைந்த வேக தேர்வில் 800W மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஹோண்டா... ஆனா நம்ம நாட்ல இல்ல... எங்கு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!!

இந்த மின் மோட்டார் அதிகபட்சமாக 1.2 kW திறனை வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 43 கிமீ வேகம் ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 48V மற்றும் 30Ah லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது கழட்டி மாட்டிக் கொள்ளும் வசதிக் கொண்டது.

மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஹோண்டா... ஆனா நம்ம நாட்ல இல்ல... எங்கு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!!

இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 65 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த திறனை 130 கிமீ தூரம் வரை அப்கிரேட் செய்து கொள்ள முடியும். கூடுதலாக ஓர் பேட்டரியை இணைப்பதன் வாயிலாக இந்த திறனை உயர்த்திக் கொள்ள முடியும்.

மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஹோண்டா... ஆனா நம்ம நாட்ல இல்ல... எங்கு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!!

இதுமட்டுமில்லைங்க இன்னும் பல சிறப்பம்சங்களும் யு-கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. எல்சிடி திரை (ஸ்பீடு, சார்ஜ் அளவு, இடைவெளி மற்றும் ரைடிங் மோட் போன்ற பல்வேறு முக்கிய தகவல்களை இது வழங்கும்), எல்இடி மின் விளக்கு, இருக்கைக்கு அடியில் மிகப் பெரிய ஸ்டோரேஜ் என பல்வேறு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஹோண்டா... ஆனா நம்ம நாட்ல இல்ல... எங்கு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!!

இது ஓர் 26 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் ஆகும். இதைத் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தின் சிறந்த இயக்கத்திற்காக 12 இன்ச் வீல் முன் பக்கத்திலும், 10 இன்ச் வீல் பின்பக்கத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவையிரண்டுமே அலாய் வீல்களாகும்.

மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஹோண்டா... ஆனா நம்ம நாட்ல இல்ல... எங்கு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!!

இந்த பன்முக சிறப்பு வசதிகளைக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் தற்போது பிரத்யேகமாக சீன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு அந்நாட்டு மதிப்பில் 7,799 யுவான் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஹோண்டா... ஆனா நம்ம நாட்ல இல்ல... எங்கு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!!

இது இந்திய மதிப்பில் ரூ. 85 ஆயிரம் ஆகும். இந்த மிக மிகக் குறைந்த விலையிலேயே ஹோண்டாவின் யு-கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சீனாவில் விற்பனைக்குக் களமிறங்கியிருக்கின்றது. சீனாவைத் தொடர்ந்து இன்னும் சில நாடுகளிலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டைர விற்பனைக்குக் களமிறக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஹோண்டா... ஆனா நம்ம நாட்ல இல்ல... எங்கு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!!

ஆனால், அது எந்த நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கும் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிக முக்கியமாக சீனாவிற்கு அடுத்ததாக மேற்கத்திய நாடுகளில் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஹோண்டா... ஆனா நம்ம நாட்ல இல்ல... எங்கு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!!

ஆனால், இது இந்தியா வருவது பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது இந்தியாவில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் மானியம் மற்றும் பதிவு வரி தள்ளுபடி போன்றவை அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஹோண்டா... ஆனா நம்ம நாட்ல இல்ல... எங்கு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!!

ஆகையால், ஹோண்டா நிறுவனம் எந்த நேரத்திலும் அதன் ஏதேனும் ஓர் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது.

மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஹோண்டா... ஆனா நம்ம நாட்ல இல்ல... எங்கு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!!

இதற்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் விலையும் ஓர் காரணமாக இருக்கின்றது. எனவே இதைக் கருத்தில் கொண்டு ஹோண்டா மிக விரைவில் அதன் மின் வாகனத்தைக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Honda launches low price electric scooter u go in china
Story first published: Saturday, August 7, 2021, 14:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X