Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 9 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கடந்த டிசம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா நிறுவனத்தின் டூவீலர் எது தெரியுமா?
கடந்த டிசம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் எத்தனை இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது? என்ற விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹோண்டா டூவீலர் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 2,42,046 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 2,30,197 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் ஹோண்டா டூவீலர் நிறுவனம் விற்பனையில் 5.1 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா நிறுவனத்தின் இரு சக்கர வாகனம் என்ற பெருமையை ஆக்டிவா பெற்றுள்ளது. கடந்த டிசம்பரில் ஹோண்டா நிறுவனம் 1,34,077 ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 1,31,899 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் ஹோண்டா ஆக்டிவா விற்பனையில் 2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களின் பட்டியலில் சிபி ஷைன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஹோண்டா நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் 56,003 சிபி ஷைன் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 51,066 ஆக மட்டுமே இருந்தது. இது 10 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை ஹோண்டா டியோ பெற்றுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் 20,516 ஆக இருந்த டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை 2020ம் ஆண்டு டிசம்பரில் 22,025 ஆக உயர்ந்துள்ளது. இது 7 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் நான்காவது இடத்தை யுனிகார்ன் பிடித்துள்ளது. 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் 11,997 யுனிகார்ன் பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை ட்ரீம் பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் 7,755 ஆக இருந்த இதன் விற்பனை எண்ணிக்கை 2020ம் ஆண்டு டிசம்பரில் 4,992 ஆக குறைந்துள்ளது. இது 36 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் 6வது இடத்தை லிவோ பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் 7,209 ஆக இருந்த இதன் விற்பனை எண்ணிக்கை 2020ம் ஆண்டு டிசம்பரில் 4,387 ஆக குறைந்துள்ளது. இது 39 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்த பட்டியலில் ஏழாவது இடத்தை க்ரேஸியா பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் 3,113 ஆக இருந்த இதன் விற்பனை எண்ணிக்கை 2020ம் ஆண்டு டிசம்பரில் 3,347 என சற்று உயர்ந்துள்ளது. இது 8 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் எட்டாவது இடத்தை ஹார்னெட் 2.0 பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் 2,457 ஹார்னெட் 2.0 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது.

இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் பிடித்துள்ளது. ஹோண்டா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1,564 ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. புதுவரவான ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள், ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 போன்ற மாடல்களுடன் போட்டியிட்டு வருகிறது.

தற்போது இந்திய சந்தையில் இந்த மோட்டார்சைக்கிள் வேகமாக பிரபலமாகி வருகிறது. இந்த பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடத்தை எக்ஸ் பிளேடு பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1,499 ஆக இருந்த இதன் விற்பனை எண்ணிக்கை 2020ம் ஆண்டு டிசம்பரில் 1,197 ஆக குறைந்துள்ளது. இது 20 சதவீத வீழ்ச்சியாகும்.