க்ரேஸியா 125 ஸ்கூட்டரை தொடர்ந்து, அதன் ஸ்போர்ட்ஸ் எடிசனுக்கும் சலுகையை அறிவித்தது ஹோண்டா!!

ஹோண்டா க்ரேஸியா 125 ஸ்போர்ட்ஸ் எடிசன் ஸ்கூட்டருக்கான சிறப்பு பணம் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எவ்வளவு சேமிக்கலாம் என்பது உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

க்ரேஸியா 125 ஸ்கூட்டரை தொடர்ந்து, அதன் ஸ்போர்ட்ஸ் எடிசனுக்கும் சலுகையை அறிவித்தது ஹோண்டா!!

க்ரேஸியா 125 ஸ்கூட்டருக்கு ஹோண்டா டூ வீலர்ஸ் நிறுவனம் கடந்த மே மாதத்தில் புதிய பணம் தள்ளுபடி சலுகையை அறிவித்திருந்தது. அப்போதே இந்த சலுகை இந்த 125சிசி ஹோண்டா ஸ்கூட்டருக்கு ஜூன் 30ஆம் தேதி வரையில் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்தோம்.

க்ரேஸியா 125 ஸ்கூட்டரை தொடர்ந்து, அதன் ஸ்போர்ட்ஸ் எடிசனுக்கும் சலுகையை அறிவித்தது ஹோண்டா!!

ஆனால் கடந்த மாதத்தில் இந்த சலுகை க்ரேஸியா 125 ஸ்டாண்டர்ட் மாடலுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அது இந்த ஜூன் மாதத்தில் இருந்து ஸ்டாண்டர்ட் மாடலுடன் க்ரேஸியா 125 ஸ்கூட்டரின் ஸ்போர்ட்ஸ் எடிசன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் கொடுக்கப்பட உள்ளதாக ஹோண்டா தற்போது அறிவித்துள்ளது.

க்ரேஸியா 125 ஸ்கூட்டரை தொடர்ந்து, அதன் ஸ்போர்ட்ஸ் எடிசனுக்கும் சலுகையை அறிவித்தது ஹோண்டா!!

ஹோண்டா டூவீலர்ஸின் இந்த சிறப்பு சலுகையின்படி ஸ்கூட்டருக்கான மொத்த பணத்தில் 5 சதவீதத்தை (அதிகப்பட்சமாக ரூ.3,500 வரையில்) சேமிக்க முடியும். இந்த சலுகையினை பெற வாடிக்கையாளர் தனது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் க்ரெடிட் கார்ட் மூலம் மாதத்தவணையில் ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என முன்பே தெரிவித்திருந்தோம்.

க்ரேஸியா 125 ஸ்கூட்டரை தொடர்ந்து, அதன் ஸ்போர்ட்ஸ் எடிசனுக்கும் சலுகையை அறிவித்தது ஹோண்டா!!

மேலும், வாடிக்கையாளர் மாதத்தவணையாக செலுத்த வேண்டிய மொத்த தொகை ரூ.40,000 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் என ஹோண்டா நிபந்தனை விதித்துள்ளது. இந்த சலுகை குறித்த கூடுதல் விபரங்களை அறிய அருகில் உள்ள ஹோண்டா டீலர்ஷிப் மையத்தினை அணுகவும்.

க்ரேஸியா 125 ஸ்கூட்டரை தொடர்ந்து, அதன் ஸ்போர்ட்ஸ் எடிசனுக்கும் சலுகையை அறிவித்தது ஹோண்டா!!

ஹோண்டா க்ரேஸியா 125 ஸ்போர்ட்ஸ் எடிசன் நடப்பு 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்டாண்டர்ட் மாடலை காட்டிலும் பார்ப்போரை கவரும் விதத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஸ்போர்ட்ஸ் எடிசன் குறிப்பாக இளம் தலைமுறையினரை குறிவைத்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

க்ரேஸியா 125 ஸ்கூட்டரை தொடர்ந்து, அதன் ஸ்போர்ட்ஸ் எடிசனுக்கும் சலுகையை அறிவித்தது ஹோண்டா!!

பேர்ல் நைட்ஸ்டர் ப்ளாக் மற்றும் ஸ்போர்ட்ஸ் சிவப்பு என்கிற இரு விதமான நிறத்தேர்வுகளில் க்ரேஸியா 125 ஸ்போர்ட்ஸ் எடிசன் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில் கருப்பு பெயிண்ட் தேர்வில் இரண்டாவது நிறமாக சிவப்பும், சிவப்பு நிற பெயிண்ட் தேர்வில் வெள்ளையும் வழங்கப்படுகின்றன.

க்ரேஸியா 125 ஸ்கூட்டரை தொடர்ந்து, அதன் ஸ்போர்ட்ஸ் எடிசனுக்கும் சலுகையை அறிவித்தது ஹோண்டா!!

மற்றப்படி என்ஜின் அமைப்பில் மாற்றமில்லை. க்ரேஸியாவின் வழக்கமான 124சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை தான் அதன் ஸ்போர்ட்ஸ் எடிசனும் தொடர்கிறது. இந்த ஏர்-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 8.25 பிஎஸ் மற்றும் 5,000 ஆர்பிஎம்-இல் 10.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

க்ரேஸியா 125 ஸ்கூட்டரை தொடர்ந்து, அதன் ஸ்போர்ட்ஸ் எடிசனுக்கும் சலுகையை அறிவித்தது ஹோண்டா!!

இந்த என்ஜின் அமைப்பில் ஹோண்டா ஈக்கோ தொழிற்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவர் உள்ளிட்டவை மென்மையான செயல்பாட்டிற்கும், மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறனிற்காகவும் வழங்கப்படுகின்றன.

க்ரேஸியா 125 ஸ்கூட்டரை தொடர்ந்து, அதன் ஸ்போர்ட்ஸ் எடிசனுக்கும் சலுகையை அறிவித்தது ஹோண்டா!!

க்ரேஸியா 125 ஸ்போர்ட்ஸ் எடிசனின் எக்ஸ்ஷோரூம் விலை தற்சமயம் ரூ.84,185 ஆக உள்ளன. அதுவே ஸ்டாண்டர்ட் மாடலின் விலைகள் ரூ.75,859 (ட்ரம் ப்ரேக்) & ரூ.83,185 (டிஸ்க் ப்ரேக்) ஆக உள்ளன.

Most Read Articles
English summary
Honda Motorcycle offers cashback on Grazia 125 sport edition.
Story first published: Friday, June 4, 2021, 23:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X