ஹீரோ, பஜாஜை தொடர்ந்து 2 வீலர்ஸின் விலைகளை உயர்த்தியது ஹோண்டா!! கடந்த 6 மாதங்களில் இந்த அளவிற்கா?

முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ஹோண்டா 2 வீலர்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துவரும் மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர்களின் விலைகளை கணிசமாக உயர்த்தியுள்ளது.

ஹீரோ, பஜாஜை தொடர்ந்து 2 வீலர்ஸின் விலைகளை உயர்த்தியது ஹோண்டா!! கடந்த 6 மாதங்களில் இந்த அளவிற்கா?

வாகன தயாரிப்பிற்கு தேவையான இரும்பின் மதிப்பும், மற்ற முக்கிய & விலையுயர்ந்த உலோகங்களான பல்லேடியம், ரோடியத்தின் மதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்பு வாகனங்களின் விலைகளை அதிகரித்து வருகின்றன.

ஹீரோ, பஜாஜை தொடர்ந்து 2 வீலர்ஸின் விலைகளை உயர்த்தியது ஹோண்டா!! கடந்த 6 மாதங்களில் இந்த அளவிற்கா?

இருசக்கர வாகன சந்தையை பொறுத்தவரையில், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ நிறுவனங்கள் விலை அதிகரிப்பு அறிவிப்புகளை சமீபத்தில் வெளியிட்டு இருந்ததை பார்த்திருந்தோம். இந்த வகையில் தற்போது மற்றொரு முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா 2வீலர்ஸ் நிறுவனம் அதன் மோட்டார்சைக்கிள்கள் & ஸ்கூட்டர்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.

ஹீரோ, பஜாஜை தொடர்ந்து 2 வீலர்ஸின் விலைகளை உயர்த்தியது ஹோண்டா!! கடந்த 6 மாதங்களில் இந்த அளவிற்கா?

இதன்படி ரூ.740-இல் இருந்து ரூ.3,745 வரையில் ஹோண்டா இருசக்கர வாகனங்களின் எக்ஸ்ஷோரூம் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேற்கூறிய மற்ற 2 வீலர்ஸ் நிறுவனங்களும் கிட்டத்தட்ட இதே அளவில் தான் விலை உயர்வை கொண்டு வந்திருந்தன.

ஹீரோ, பஜாஜை தொடர்ந்து 2 வீலர்ஸின் விலைகளை உயர்த்தியது ஹோண்டா!! கடந்த 6 மாதங்களில் இந்த அளவிற்கா?

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக விளங்கும் ஹோண்டா ஆக்டிவா 125-இன் விலைகள் ரூ.1,738-இல் இருந்து ரூ.2,008 வரையில் வேரியண்ட்களை பொறுத்து அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்களின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.2,281 உயர்த்தப்பட்டுள்ளது.

Honda Scooters New Price Old Price Difference
Dio STD ₹64,510 ₹62,229 ₹2,281
Dio DLX ₹67,908 ₹65,627 ₹2,281
Dio Repsol ₹70,408 ₹68,127 ₹2,281
Activa 6G STD ₹69,080 ₹66,799 ₹2,281
Activa 6G DLX ₹70,825 ₹68,544 ₹2,281
Activa 6G 20th AE STD ₹70,580 ₹68,299 ₹2,281
Activa 6G 20th AE DLX ₹72,325 ₹70,044 ₹2,281
Activa 125 Drum ₹72,367 ₹70,629 ₹1,738
Activa 125 Alloy ₹76,206 ₹74,198 ₹2,008
Activa 125 Disc ₹79,760 ₹77,752 ₹2,008
Grazia 125 Drum ₹76,823 ₹74,815 ₹2,008
Grazia 125 Disc ₹84,148 ₹82,140 ₹2,008
Grazia 125 Sport ₹85,148 ₹83,140 ₹2,008
ஹீரோ, பஜாஜை தொடர்ந்து 2 வீலர்ஸின் விலைகளை உயர்த்தியது ஹோண்டா!! கடந்த 6 மாதங்களில் இந்த அளவிற்கா?

டியோ ஸ்கூட்டர்களின் விலைகளும் இதே அளவில் (ரூ.2,281) தான் அதிகரிக்கப்பட்டுள்ளன. கிரேஸியா 125 ஸ்கூட்டர்கள் ரூ.2,008-ஐ விலை உயர்வாக பெற்றுள்ளன. ஹோண்டா ஸ்கூட்டர்களின் இந்த விலை அதிகரிப்புகள் அனைத்தும் 3.35%-இல் இருந்து 3.67% வரையில் உள்ளன.

ஹீரோ, பஜாஜை தொடர்ந்து 2 வீலர்ஸின் விலைகளை உயர்த்தியது ஹோண்டா!! கடந்த 6 மாதங்களில் இந்த அளவிற்கா?

ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி மோட்டார்சைக்கிள்களின் விலைகளையும் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இந்த ஜூலை மாதம் வரையில், கடந்த ஆறு மாத காலத்தில் 1%-இல் இருந்து 3.34% வரையில் ஹோண்டா 2 வீலர்ஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

ஹீரோ, பஜாஜை தொடர்ந்து 2 வீலர்ஸின் விலைகளை உயர்த்தியது ஹோண்டா!! கடந்த 6 மாதங்களில் இந்த அளவிற்கா?

இதன்படி சிடி110 ட்ரீம் மற்றும் லிவோ பைக்குகளின் விலைகள் தலா ரூ.740 உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் ஹோண்டாவின் மற்ற மலிவு விலை கொண்ட பைக் மாடல்களான சிபி ஷைன் மற்றும் எஸ்பி125-இன் விலைகள் ரூ.2,300 அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Honda Motorcycles New Price Old Price Difference
CD110 Dream STD ₹65,248 ₹64,508 ₹740
CD110 Dream DLX ₹66,248 ₹65,508 ₹740
Livo Drum ₹70,799 ₹70,059 ₹740
Livo Disc ₹74,999 ₹74,259 ₹740
CB Shine Drum ₹72,787 ₹70,478 ₹2,309
CB Shine Disc ₹77,582 ₹75,274 ₹2,308
SP125 Drum ₹78,381 ₹76,074 ₹2,307
SP125 Disc ₹82,677 ₹80,369 ₹2,308
Unicorn ₹98,931 ₹95,738 ₹3,193
X-Blade Disc ₹1,10,839 ₹1,07,851 ₹2,988
X-Blade Rear Disc ₹1,15,229 ₹1,12,241 ₹2,988
Hornet ₹1,31,182 ₹1,28,195 ₹2,987
Hornet Repsol ₹1,33,182 ₹1,30,195 ₹2,987
CB350 DLX ₹1,90,245 ₹1,86,500 ₹3,745
CB350 DLX Pro ₹1,96,244 ₹1,92,500 ₹3,744
CB350 RS Mono ₹1,96,344 - -
CB350 RS Dual ₹1,98,344 - -
ஹீரோ, பஜாஜை தொடர்ந்து 2 வீலர்ஸின் விலைகளை உயர்த்தியது ஹோண்டா!! கடந்த 6 மாதங்களில் இந்த அளவிற்கா?

கிட்டத்தட்ட 1 லட்சத்தை விலையாக கொண்ட ஹோண்டா யுனிகார்ன் மோட்டார்சைக்கிளின் விலை ரூ.3,193 அதிகரிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்-பிளேட் மற்றும் ஹார்னெட் பைக்குகளின் விலைகள் ரூ.3 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளன.

ஹீரோ, பஜாஜை தொடர்ந்து 2 வீலர்ஸின் விலைகளை உயர்த்தியது ஹோண்டா!! கடந்த 6 மாதங்களில் இந்த அளவிற்கா?

கடந்த ஆண்டு இறுதியில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு போட்டியாக களமிறக்கப்பட்ட ஹைனெஸ் சிபி350 பைக்கின் விலைகள் ரூ.3,745 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின் அறிமுகப்படுத்தப்பட்ட சிபி350 ஆர்எஸ் பைக்கின் விலையில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

Most Read Articles

English summary
Honda Scooters, Motorcycles Price Hike July 2021. Read All Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X