2022 Honda Africa Twin பைக்குகள் வெளியீடு!! இந்திய சந்தைக்கு எப்போது கொண்டுவரப்படும்?

அப்டேட் செய்யப்பட்ட 2022 Honda Africa Twin பைக்குகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய Africa இரட்டை பைக்குகளை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 Honda Africa Twin பைக்குகள் வெளியீடு!! இந்திய சந்தைக்கு எப்போது கொண்டுவரப்படும்?

தற்போது உலகளவில் வெளியிடப்பட்டுள்ள 2022 Africa Twin பைக்குகளின் ஆயுட் காலத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாக இந்த அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முந்தைய தலைமுறை Africa Twin பைக்குகள் முதன்முதலாக கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

2022 Honda Africa Twin பைக்குகள் வெளியீடு!! இந்திய சந்தைக்கு எப்போது கொண்டுவரப்படும்?

ஸ்டாண்டர்ட் மற்றும் அட்வென்ச்சர் வெர்சன் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகின்ற Honda Africa Twin பைக்குகளுக்கு மிக முக்கியமாக அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் பிரியர்களை கவர்ந்து இழுக்கிறது. இரு Africa பைக்குகளும் யூரோ-5க்கு இணக்கமானதாக மாற்றப்பட்டுவிட்டது.

2022 Honda Africa Twin பைக்குகள் வெளியீடு!! இந்திய சந்தைக்கு எப்போது கொண்டுவரப்படும்?

இதனால் 2022 Africa Twin பைக்குகளின் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. Honda Africa இரட்டை பைக்குகளில் 1,084சிசி, இணையான-இரட்டை என்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 100 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

2022 Honda Africa Twin பைக்குகள் வெளியீடு!! இந்திய சந்தைக்கு எப்போது கொண்டுவரப்படும்?

ஆனால் அப்டேட் செய்யப்பட்ட Honda Africa பைக்குகளில் புதுமையான அம்சமாக புதியதாக பெயிண்ட் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு Honda Motorcycle நிறுவனம் Big Logo என பெயர் வைத்துள்ளது. பெயருக்கு ஏற்றபடி, இந்த புதிய பெயிண்ட் தேர்வில் பைக்கின் பெயரான 'Africa Twin' என்பது பெரிய எழுத்தாக கொடுக்கப்பட்டுள்ளன.

2022 Honda Africa Twin பைக்குகள் வெளியீடு!! இந்திய சந்தைக்கு எப்போது கொண்டுவரப்படும்?

இந்த Honda அட்வென்ச்சர் பைக்கின் அட்வென்ச்சர் ஸ்போர்ட் வெர்சனில் கூடுதலாக பின்பக்கத்தில் பொருட்களை வைத்து செல்வதற்கான பை கிடைக்கும். அத்துடன் இந்த ஸ்பெஷல் வேரியண்ட்டிற்கு கூடுதல் நிறத்தேர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிறத்தேர்வினை Craked Terrain என தயாரிப்பு நிறுவனம் அழைக்கிறது.

2022 Honda Africa Twin பைக்குகள் வெளியீடு!! இந்திய சந்தைக்கு எப்போது கொண்டுவரப்படும்?

Africa Adventure Sport பைக்கில் முன்பு நிலையான எதிர்காற்று தடுப்பு கண்ணாடி வழங்கப்பட்டது. அதாவது இதனை எந்தவொரு அட்ஜெஸ்ட்-டும் செய்ய முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது 5-வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய எதிர் காற்று தடுப்பு கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது.

2022 Honda Africa Twin பைக்குகள் வெளியீடு!! இந்திய சந்தைக்கு எப்போது கொண்டுவரப்படும்?

ஆனால் இம்முறை இந்த கண்ணாடி 110மிமீ-இல் சற்று உயரம் குறைவானதாக வழங்கபட்டுள்ளது. மற்றப்படி இந்த கண்ணாடிக்கான பாதுகாப்பானில் எந்த மாற்றமும் இல்லை. இவற்றுடன் உலகளவில் பிரபலமான Honda-வின் இரட்டை-க்ளட்ச் டிரான்ஸ்மிஷனையும் திருத்தியமைத்து உள்ளனர்.

2022 Honda Africa Twin பைக்குகள் வெளியீடு!! இந்திய சந்தைக்கு எப்போது கொண்டுவரப்படும்?

இதனால் குறைந்த வேகத்தில், 1வது மற்றும் 2வது கியர்களில் கூட மென்மையான இயக்கத்தை மோட்டார்சைக்கிள் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானிய Honda Motorcycle நிறுவனம் புதிய Africa Twin பைக்கின் விலையை இன்னும் சில வாரங்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 Honda Africa Twin பைக்குகள் வெளியீடு!! இந்திய சந்தைக்கு எப்போது கொண்டுவரப்படும்?

மேலும் அதேநாளில் ஜப்பானில் பைக் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு கொண்டுவரப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்திய சந்தைக்கு அப்டேட் செய்யப்பட்ட Africa Twin அறிமுகப்படுத்தப்படுவதற்கு எப்படி இருந்தாலும் அடுத்த வருடமாகிவிடும். இந்தியாவில் Africa Twin அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் வெர்சன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

2022 Honda Africa Twin பைக்குகள் வெளியீடு!! இந்திய சந்தைக்கு எப்போது கொண்டுவரப்படும்?

இதில் மேனுவல் வெர்சனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.15.98 லட்சமாகவும், டிசிடி வெர்சனின் விலை ரூ.17.52 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Honda 2 wheelers India நிறுவனத்தின் பிக்விங் டீலர்ஷிப்கள் மையங்களின் மூலமாக இவை இரண்டும் நம் நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

2022 Honda Africa Twin பைக்குகள் வெளியீடு!! இந்திய சந்தைக்கு எப்போது கொண்டுவரப்படும்?

இந்தியாவில் விற்பனையில் உள்ள Honda Africa Twin Adventure பைக்கில் 6.5 இன்ச்சில் ஆப்பிள் கார்ப்ளே உடன் இணைக்கக்கூடிய டிஎஃப்டி தொடுத்திரை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எல்இடி விளக்குகள் & கார்னரிங் விளக்குகள், heated grips உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இவற்றுடன் ஏகப்பட்ட எலக்ட்ரானிக் தொழிற்நுட்பங்களையும் இந்த Honda அட்வென்ச்சர் பைக்குகள் கொண்டுள்ளன.

2022 Honda Africa Twin பைக்குகள் வெளியீடு!! இந்திய சந்தைக்கு எப்போது கொண்டுவரப்படும்?

இந்த வகையில் 6-அச்சு IMU-வை இந்த இரட்டை பயன்பாட்டு மோட்டார்சைக்கிள் கொண்டுள்ளது. 6-அச்சு IMU என்பதில் கார்னரிங் ஏபிஎஸ், பின்பக்கமாக பைக் தூக்கப்படுவதை தடுக்கும் கண்ட்ரோல், Honda Selectable Torque Control, க்ரூஸ் கண்ட்ரோல், வீலிங் கண்ட்ரோல் மற்றும் DCT cornering detection என்பவை அடங்குகின்றன.

இந்த அட்வென்ச்சர் பைக்கிற்கு 2 வருட உத்தரவாதத்தை இந்தியாவில் Honda Motorcycle நிறுவனம் வழங்கி வருகிறது.

Most Read Articles
English summary
Updated 2022 Honda Africa Twin Unveiled With Sharper Looks.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X