சிபிஆர்650ஆர் & சிபி650ஆர் பைக்குகளின் டெலிவிரிகளை துவங்கியது ஹோண்டா!! வாடிக்கையாளர்கள் குஷி!

புதிய சிபிஆர்650ஆர் மற்றும் சிபி650ஆர் பைக்குகளின் டெலிவிரி பணிகளை ஹோண்டா 2வீலர்ஸ் நிறுவனம் இந்தியாவில் துவங்கியுள்ளது. இது தொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள படத்தினை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரிக்கும் முன்னரே, அதாவது கடந்த மார்ச் மாத இறுதியில் ஹோண்டா 2வீலர்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் சிபிஆர்650ஆர் & சிபி650ஆர் எனும் புதிய ப்ரீமியம் மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது, சிபிஆர்650ஆர் மற்றும் சிபி350ஆர் பைக்குகளின் தலா 15 யூனிட்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்துள்ளதாக இந்த ஜப்பானிய இருசக்கர தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை ஹோண்டாவின் பிக்விங் ஷோரூம்களில் இருந்து டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் யத்விந்தர் சிங் குலேரியா பேசுகையில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளுடன் நிலைமை மேம்பட்டு சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், ஹோண்டா பிக்விங் டீலர்ஷிப் மையங்கள் அந்தந்த மாநில நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வருகின்றன.

முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்த நாங்கள் டெலிவிரி பணிகளை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் துவங்கியுள்ளோம் என்றார். ஹோண்டாவின் இந்த இரு ப்ரீமியம் மோட்டார்சைக்கிள்கள் வெளிநாட்டில் இருந்து பாகங்களாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு, பின்னர் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இதில் சிபி650ஆர் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.8.67 லட்சமாகவும், ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிளான சிபிஆர்650ஆர்-இன் விலை ரூ.8.88 லட்சமாகவும் உள்ளன. இவை இரண்டிலும் ஒரே மாதிரியான என்ஜின் பொருத்தப்படுகிறது.

இவற்றின் 649சிசி, டிஒஎச்சி 16-வால்வு, இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 12,000 ஆர்பிஎம்-இல் 86 பிஎச்பி பவரையும், 8,500 ஆர்பிஎம்-இல் 57.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் உதவி & ஸ்லிப்பர் க்ளட்ச் வசதி அடங்கிய 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

என்ஜின் மட்டுமின்றி இந்த இரு 650சிசி ஹோண்டா பைக்கிலும் ஒரே மாதிரியான எலக்ட்ரானிக் தொகுப்புகளே வழங்கப்படுகின்றன. இவற்றின் எலக்ட்ரானிக் தொகுப்புகளில் அவசரகால நிறுத்து சிக்னல் (ESS), ஹோண்டா இக்னிஷன் பாதுகாப்பு அமைப்பு (HISS) மற்றும் ஹோண்டாவின் தேர்ந்தெடுக்கும் டார்க் கண்ட்ரோல் (HSTC) உள்ளிட்டவை அடங்குகின்றன.

இதற்கிடையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தொலைத்தூர பயணங்களுக்கான லக்சரி மோட்டார்சைக்கிளான கோல்டு விங் டூர் மாடல் முழுவதுமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன் ஹோண்டா 2வீலர்ஸ் இந்தியா நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தது.

Most Read Articles
English summary
Honda starts deliveries of new CBR650R, CB650R bikes in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X