ரூ.2,499 கட்டினால் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்... சூப்பரான திட்டம் அறிமுகம்!

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை மிக எளிதாக வாங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில், சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ரூ.2,499 கட்டினால் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்... சூப்பரான திட்டம் அறிமுகம்!

இந்தியாவின் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நம்பர்-1 தேர்வாக ஹோண்டா ஆக்டிவா இருந்து வருகிறது. வடிவமைப்பு, செயல்திறன் மிக்க எஞ்சின், தொழில்நுட்ப அம்சங்களில் மிகச் சிறந்ததாக இருப்பதுடன், அதிக ரீசேல் மதிப்பு வாய்ந்த மாடலாகவும் உள்ளது. இதனால், தொடர்ந்து இந்த ஸ்கூட்டருக்கு மிகப்பெரிய சந்தை இருந்து வருகிறது.

ரூ.2,499 கட்டினால் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்... சூப்பரான திட்டம் அறிமுகம்!

இந்த நிலையில், கொரோனாவுக்கு பிறகான சூழலில், தனிநபர் போக்குவரத்து சாதனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. எனவே, அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களும் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை வாங்குவதற்கு ஏதுவாக சிறப்பு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ரூ.2,499 கட்டினால் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்... சூப்பரான திட்டம் அறிமுகம்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் விலையில் 100 சதவீதம் வரை கடன் பெறும் வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த கடன் திட்டங்கள் 6.5 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.

ரூ.2,499 கட்டினால் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்... சூப்பரான திட்டம் அறிமுகம்!

மேலும், ரூ.2,499 மட்டுமே டவுண் பேமண்ட்டாக செலுத்தினால் போதுமானது. இதனால், மிக எளிதாக புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை வாங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

ரூ.2,499 கட்டினால் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்... சூப்பரான திட்டம் அறிமுகம்!

தவிரவும், கிரெடிட் கார்டு பயன்படுத்தி மாதத் தவணை மூலமாக செலுத்த விரும்புவோருக்கு ரூ.5,000 வரை கேஷ்பேக் சலுகை பெறும் வாய்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை வாங்குவதற்கு மிகச் சிறப்பான தருணமாக பார்க்கலாம்.

ரூ.2,499 கட்டினால் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்... சூப்பரான திட்டம் அறிமுகம்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் 110சிசி எஞ்சின் உள்ளது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7.68 பிஎச்பி பவரையும், 8.79 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ரூ.2,499 கட்டினால் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்... சூப்பரான திட்டம் அறிமுகம்!

இந்த ஸ்கூட்டரில் வெளிப்புறத்திலேயே பெட்ரோல் மூடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. சப்தம் இல்லாமல் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் வசதி, எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கும், அணைப்பதற்கும் தனி சுவிட்ச் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. இந்த ஸ்கூட்டரில் 12 அங்குல சக்கரங்கள், முன்புறத்தில் லிங்க் - டைப் சஸ்பென்ஷன் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் ரூ.66,799 முதல் ரூ.68,544 வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. நீலம், சிவப்பு, மஞ்சள், கருப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

Most Read Articles

English summary
Honda is offering special loan schemes for Activa 6G scooter in India.
Story first published: Thursday, February 11, 2021, 15:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X